ஆப்பிள் நிறுவனத்துடன் போட்டி போடும் ஜியோமி.. மொபைல் விற்பனையில் கலக்கல்...

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெய்ஜிங்: உலகளவில் பல மொபைல் தயாரிப்பு நிறுவனங்கள் இருந்தாலும் சந்தையில் வெற்றி பெறுவது சில நிறுவனங்கள் மட்டுமே. வெற்றி என்பது விற்பனையின் எண்ணிக்கை பொருத்தே அமைய உள்ளது. இந்நிலையில் சீனாவின் மொபைல் தயாரிப்பு நிறுவனமான ஜியோமி, சந்தையில் கால் பதித்த 3 வருடங்களிலேயே முக்கிய இடத்தில் உள்ளது.

 

மொபைல் விற்பனை மற்றும் தயாரிப்புச் சந்தையில் முதன்மையான நிறுவனங்களில் சாம்சங், ஆப்பிள் நிறுவனத்திற்கு அடுத்து ஜியோமி உள்ளதாக சந்தை ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது. மேலும் அடுத்த சில வருடங்களில் ஜியோமி ஆப்பிள் நிறுவனத்தின் வர்த்தகத்தை விட அதிகரிக்கவும் வாய்ப்புள்ளதாக சந்தை ஆய்வு நிறுவனங்கள் தெரிவித்துள்ளது.

சந்தையில் ஜியோமி

சந்தையில் ஜியோமி

ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலங்களில் இந்நிறுவனம் சுமார் 320 மில்லியன் ஸ்மார்ட்போன்கள் ஏற்றுமதி செய்துள்ளது. இதன் மூலம் சந்தையில் 6 சதவீதம், தன் பக்கம் இருப்பதாக ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.

சாம்சாங்

சாம்சாங்

சாம்சாங் நிறுவனத்தின் தரம் மற்றும் மதிப்பு மக்கள் மத்தியில் அதிகாளவில் குறைந்ததால் இக்காலகட்டத்தில் சந்தையில் வெறும் 25 சதவீதம் மட்டுமே இந்நிறுவனத்தால் கைபற்ற முடிந்தது. கடந்த வருடம் இதே காலகட்டத்தில் இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு 35 சதவீதம் என்பது குறிப்பிடதக்கது.

ஆப்பிள்

ஆப்பிள்

மேலும் ஆப்பிள் நிறுவனத்தின் சமீபத்திய அறிமுகமான ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 பிளஸ் ஆகிய மாடல்கள் பென்டிங் டிபெக்ட் இருப்பதால் மக்கள் மத்தியில் இதன் விற்பனை குறைந்துள்ளது. இதனால் இக்காலகட்டத்தில் இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு 12 சதவீதமாக குறைந்தது.

போட்டி
 

போட்டி

உயர்தர ஸ்மார்ட்போன்கள் விற்பனையில் சாம்சாங் நிறுவனத்திற்கு ஆப்பிள் நிறுவனம் கடுமையான போட்டியாளராக உள்ளது, இதன் மூலம் சந்தையில் இந்நிறுவனத்தின் உயர்தர ஸ்மார்ட்போன்களின் விற்பனை கடுமையாக பதிக்கப்படுகிறது. மேலும் இச்சந்தையில் லெனோவோ, ஹூவாய் போன்ற நிறுவனங்கள் தொடர்ந்து சந்தையை கைபற்ற போராடி வருகிறது.

இந்தியாவில் ஜியோமி வெற்றி..

இந்தியாவில் ஜியோமி வெற்றி..

ஜியோமி இந்தியாவில் ஆன்லைன் விற்பனையை தேர்ந்தெடுத்து பிளிப்கார்ட் நிறுவனத்தின் மூலம் தனது விற்பனையை துவங்கியது. இத்தளத்தில் விற்பனை துவங்கிய சில நிமிடங்களில் மொபைல் போன்கள் தீர்ந்துப்போனது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Xiaomi moves into third place in global smartphone war

China's Xiaomi Inc has become the world's third-largest smartphone vendor in just three years after first hitting the market, trailing only Samsung Electronics Co Ltd and Apple Inc, according to a new industry study.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X