இந்தியாவில் விசா நிறுவனத்தின் புதிய டெக்னாலஜி சென்டர்!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

துபாய்: டெபிட் கார்டு மற்றும் கிரேடிட் கார்டு மூலம் மின்னணு பரிமாற்ற சேவையில் உலகளவில் முன்னணி நிறுவனமாக கருதப்படும் விசா நிறுவனம், தனது நிறுவனத்தை மேம்படுத்தவும், மதிப்பிட முடியாத இந்தியர்களின் அறிவை பெறவும் இந்தியாவின் கார்டன் சிட்டியில் புதிய நிறுவனத்தை துவங்க உள்ளது.

இந்தியாவை மையமாக கொண்டு தெற்கு ஆசிய நாடுகளில் தனது வர்த்தகத்தை வலிமைப்படுத்தவும், மென்பொருள் துறையில் சிறந்து விளங்கும் இந்தியர்களின் அறிவை பெறவும் இந்நிறுவனம் பெங்களுரில் புதிய டெக்னாலஜி சென்டரை திறக்க திட்டமிட்டுள்ளது.

2017ஆம் ஆண்டு

2017ஆம் ஆண்டு

இந்த புதிய சென்டர் 2014ஆம் துவங்கப்படும் என்றும், 2017ஆம் ஆண்டு முதல் முழுவிச்சில் செயல்படும் எனவும் விசா நிறுவனம் தெரிவித்தது.

இன்னோவேஷன் ஹப் ஆஃப் இந்தியா

இன்னோவேஷன் ஹப் ஆஃப் இந்தியா

இந்தியாவின் இன்னோவேஷன் ஹப் என்று அழைக்கப்படும் பெங்களுரில் நிறுவனத்தை துவங்குவதன் மூலம் உலக தரம்வாய்ந்த திறன்களை பெற முடியும் என்றும், பெரும் கல்வி நிறுவனங்களின் மாணவர்களை நிறுவனத்தில் அமைப்பதற்கு எளிதாக இருக்கும் என்பு இந்நிறுவனம் தெரிவித்தது.

நித்தின் சந்தல்

நித்தின் சந்தல்

புதிய டெக்னாலஜி சென்டர் குறித்து விசா டெவலப்மென்ட் பிளாட்ஃபாமின் உயர் துணை தலைவரான நித்தின் சந்தல் கூறுகையில்,"வேகமாக வளர்ந்து வரும் டெக்னாலஜி உலகின் இந்தியாவிற்கு மிகப்பெரிய இடம், இங்கு நிறுவன வளர்ச்சி மற்றும் டெக்னாலஜிக்கு தேவையான அனைத்து விதமான திறன் மற்றும் வசதிகளும் கொட்டிக்கிடக்கிறது" என அவர் தெரிவித்தார்.

மென்பொருள் கட்டுமானம்

மென்பொருள் கட்டுமானம்

பெங்களுரில் அமைக்கப்படும் புதிய தொழிற்கூடத்தில் விசா நிறுவனத்தின் பண பரிமாற்றத்தை மேலும் எளிமையாக்கவும், மேம்படுத்தவும், பாதுகாப்பு பலன்களை அதிகரிக்கவும் உதவும் மென்பொருளை உருவாக்க திட்டமிட்டுள்ளது விசா நிறுவனம்.

கலிபோர்னியா

கலிபோர்னியா

மேலும் இந்நிறுவனம் சில மாதங்களுக்கு முன்பு 112,000 சதுர அடியில் கலிபோர்னியாவின் சான் பிரான்சிஸ்கோ மாகானத்தில் புதிய இன்னோவேஷன் சென்டரை திறந்துள்ளது குறிப்பிடதக்கது. இதன் பின் இந்தியாவில் புதிய சென்டரை திறந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Visa chooses Bengaluru as site for new technology centre

In a bid to strengthen its resources and tap India's "incredible" pool of talent, global payments provider Visa has chosen Bengaluru as the site for its new technology centre in the country.
Story first published: Tuesday, November 4, 2014, 16:51 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X