இந்தியாவில் கூகிள், ஆப்பிள் போன்ற நிறுவனங்களை உருவாக்க ரூ.10,000 கோடி நிதி ஒதுக்கீடு!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்தியாவில் உலக தரம் வாய்ந்த கூகிள், ஆப்பிள் மற்றும் பேஸ்புக் போன்ற நிறுவனங்களை உருவாக்க மத்திய அரசு சுமார் 10,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. இத்திட்டத்தில் முதற்கட்டமாக எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி துறையில் இந்தியா முன்னணியாக திகழ வேண்டும் என பல திட்டங்களை வகுத்து வருகிறது மத்திய அரசு.

 

மேற்கத்திய நாடுகளில் இருக்கும் நிறுவனங்களை போல இந்தியாவிலும் பல பிரசித்தி பெற்ற நிறுவனங்கள் உருவாக வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் இதற்கான அறிவித்திறன் மற்றும் மனித வளம் இந்தியாவில் கொட்டிக்கிடப்பதாகவும் தெரிவித்தது.

குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSMEs)

குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSMEs)

மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் கூறுகையில் இந்தியாவில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSMEs) அதிகளவில் துவங்குவதற்காக மத்திய அரசு தனிப்பட்ட முறையில் 10,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. மேலும் இதற்கான செயல் வடிவங்களை தீட்டப்பட்டதாகவும், ஒப்புதல் பெறும் நிலையில் இருப்பதாகவும் இந்த அமைச்சகம் தெரிவித்தது.

அலிபாபா.காம்

அலிபாபா.காம்

அமெரிக்கா மற்றும் உலக நாடுகளில் அலிபாபா நிறுவனத்தின் தாக்கம் அதிகளவில் உள்ளது. இந்நிறுவனம் சில்லறை வர்த்தகம் மட்டும் அல்லாமல் மொபைல் மென்பொருள் உருவக்குதல், தயாரிப்பு, வங்கியியல், போன்ற பல துறைகளில் இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதற்கு முக்கிய காரணம் இந்நிறுவனத்திற்கு முதுகெலும்பாக இருக்கும் சீன அரசு.

சீனாவின் ரூட் நல்லாதான் இருக்கு...
 

சீனாவின் ரூட் நல்லாதான் இருக்கு...

அலிபாபா அமெரிக்காவில் குதித்த 2 வருடங்களில் சில்லறை வணிகத்தில் கொடிகட்டி பறந்த அமேசான் மற்றும் ஈபே நிறுவனத்தை வர்த்தகத்தில் பின்னுக்குத் தள்ளியது. இதே போல் இந்தியாவில் உருவாகும் நிறுவனங்களை உலக நிறுவனங்களுடன் போட்டி போடும் அளவிற்கு உருவாக்கவும், ஆதிக்கம் செலுத்தவும் முதல் படிதான் இத்திட்டம்.

முதலீடு

முதலீடு

இந்த முதலீட்டை மத்திய அரசு நேரடியாக நிறுவனங்களில் செய்யாது, ஐடி மற்றும் வன்பொருள் நிறுவனங்களில் முதலீடு செய்யும், முதலீட்டு நிறுவனங்களில் முதலீடு செய்ய உள்ளது. இதன் மூலம் சரியான மற்றும் திறன் வாய்ந்த நிறுவனங்களுக்கு மட்டும் முதலீடு சேரும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. முதலீட்டு நிறுவனங்களில் சில நிபந்தனைகளுடன் மத்திய அரசு செய்யும் என தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆராய்ச்சி

ஆராய்ச்சி

இந்தியாவில் கணக்கிட முடியாத அளவிற்கு அறிவுதிறன் வாய்ந்த மக்கள் உள்ளனர், ஆனால் இங்கு புதிய கண்டுப்பிடிப்புகள், பொருட்கள் உருவாகுவதில். இவர்கள் ஆராய்ச்சி செய்வது எல்லாம் இந்தியாவில் தான் என்றாலும் பன்னாட்டு நிறுவனத்தின் பெயரில் செய்கிறார்கள். இந்நிலையை மாற்றவே இத்தகைய திட்டத்தை மத்திய அரசு வகுத்துள்ளது. அடுத்த 10 வருடங்களில் இந்தியர்களின் கண்டுப்பிடிப்புகளுக்காக பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் வந்து தஞ்சம் அடைய வேண்டும்.

கூகிள், பேஸ்புக், மைக்ரோசாப்ட்

கூகிள், பேஸ்புக், மைக்ரோசாப்ட்

உலகின் முன்னணி டெக்னாலஜி நிறுவனங்களாக கருதப்படும் கூகிள், பேஸ்புக், மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்கள் இந்தியர்களுடையதாக இல்லை என்றாலும், அதில் பணியாற்றும் பணியாளர்களின் எண்ணிக்கையில் இந்தியார்கள் தான் அதிகம். இப்படி இருக்கும் போது இந்தியாவில் ஏன் இத்தகைய நிறுவனங்கள் உருவாக முடியாது என மத்திய அரசின் எண்ணம் மிகவும் சரியானது, இதற்காக வகுக்கப்பட்ட திட்டங்கள் சிறப்பானவை என இத்துறை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

துறை சார்ந்த முதலீடு

துறை சார்ந்த முதலீடு

மத்திய அரசின் இந்திய 10,000 கோடி ரூபாய் முதலீடு எலக்ட்ரானிக்ஸ், சாதனங்கள் மற்றும் சாப்ட்வேர் தயாரிப்பு சார்ந்த நிறுவனங்களில் மட்டுமே இருக்கும். இதன் மூலம் இந்தியாவில் ஆராய்ச்சி, கண்டுப்பிடிப்புகள், புதிய நிறுவனங்கள், புதிய பொருட்கள் தயாரிப்பு கலாச்சாரத்தை உருவாக்குவதே இத்திட்டத்தின் தலையாயக் கடமை என இத்திட்டம் பற்றி அறிந்த மத்திய அரசு அதிகாரி தெரிவித்தார்.

புதிய வழியில் முதலீடு

புதிய வழியில் முதலீடு

மேலும் இத்திட்டத்தின் மூலம் இந்திய மற்றும் பன்னாட்டு நிறுவனங்களில் மூலம் அன்னிய முதலீட்டை அதிகரிக்க மத்திய அரசு புதிய வழியை உருவாக்கியுள்ளது. இந்த வழி நாட்டின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Government plans Rs 10,000 crore fund to create tech giants

The journey of tech behemoths like Google, Apple and Facebook, from startups to global giants, has caught the fancy of the Indian government, which is planning a Rs 10,000-crore electronics development fund to support ambitious startups in attaining scale.
Story first published: Wednesday, November 5, 2014, 14:05 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X