30 லட்சம் மும்பைவாசிகளை நட்டாற்றில் விட்ட ஏர்டெல்!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்திய தொலைதொடர்பு நிறுவனங்களில் மிகப்பெரிய நிறுவனமாக கருதப்படும் பார்தி ஏர்டெல் நிறுவனம், மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தொலைதொடர்பு நிறுவனமான லூப் மொபைல் நிறுவனத்தை 700 கோடி ரூபாய்க்கு வாங்குவதாக ஒப்பந்தம் செய்திருந்தது. தற்போது இக்கையகப்படுத்தும் திட்டத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.

 

லூப் மொபைல் நிறுவனத்தின் உரிமம் வரும் நவம்பர் 29ஆம் தேதியுடன் முடிவாகும் நிலையில், இந்நிறுவனத்தின் 30 லட்ச மும்பை வாடிக்கையாளர் நிலை கேள்விக்குறியாகியுள்ளது.

லூப் மொபைல்

லூப் மொபைல்

இது குறித்து லூப் மொபைல் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,"லூப் மொபைல் நிறுவனத்தை 700 கோடி ரூபாய்க்கு கைபற்ற ஏர்டெல் முடிவு செய்திருந்தது. இதற்கான அனுமதி பெற தொலைதொடர்பு கட்டுப்பாட்டு ஆணையமான டிராய் அமைப்பிடம் விண்ணப்பம் சமர்ப்பித்த நிலையில் ஏர்டெல் நிறுவனம் தீடிரென விண்ணப்பத்தை திரும்ப பெற்றுக்கொண்டது" என அவர் தெரிவித்தார்.

டிராய்

டிராய்

மத்திய தொலைதொடர்பு அமைச்சகம் லூப் மொபைல் மற்றும் இதன் இணை நிறுவனமாந லூப் டெலிகாம் நிறுவனம் மத்திய அரசு மற்றும் ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் சுமார் 808 கோடி ரூபாய் கடன் நிலுவையில் உள்ளதாக தெரிவித்தது. மேலும் ஏர்டெல் நிறுவனம் விண்ணப்பத்தை திரும்பப்பெறும் போது லூப் மொபைல் ஒப்புதல் தரப்படவில்லை என்றும் மத்திய தொலைதொடர்பு அமைச்சகம் தெரிவித்தது.

லூப் நிறுவனத்தின் நிலை என்ன???
 

லூப் நிறுவனத்தின் நிலை என்ன???

இந்நிறுவனத்தின் உரிமம் வரும் நவம்பர் 30ஆம் தேதி முடிவடைய உள்ளது, மேலும் இந்த இடைப்பட்ட காலத்தில் இந்நிறுவனம் உரிமம் பெற்றுவிட்டாலும் வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்க, கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் இந்நிறுவனம் பங்குபெற்றாததால் தற்போது போதுமான ஸ்பெக்ட்ரம் அலைகற்று இந்நிறுவனத்திடம் இல்லை.

30 வடிக்கையாளர்கள்

30 வடிக்கையாளர்கள்

தற்போது இந்நிறுவனத்தின் மும்பையில் 30 லட்சம் வாடிக்கையாளர்கள் நவம்பர் 29ஆம் தேதிக்கு பின் மொபைல் சேவை எப்படி பெற போகிறார்கள் என்பது மிகப்பெரிய கேள்விகுறியாக உள்ளது.

வாடிக்கையாளர் பரிமாற்றம்

வாடிக்கையாளர் பரிமாற்றம்

லூப் நிறுவன வாடிக்கையாளர்களை ஏர்டெல் நிறுவனத்திற்கு முறையாக மாற்ற முடியாத காரணத்தினாலேயே ஏர்டெல் நிறுவனம் தொலைதொடர்பு ஆணையத்திடம் சமர்ப்பித்த விண்ணப்பத்தை திரும்ப பெற்றுக்கொண்டதாக தகவல் கிடைத்துள்ளது. ஆனால் இது குறித்து ஏர்டெல் நிறுவனம் பதில் அளிக்க மறுத்துவிட்டது.

ஆக்சிஸ் வங்கி

ஆக்சிஸ் வங்கி

லூப் மொபைல் நிறுவனத்திற்கு முன்கூட்டிய கடனாக சுமார் 350 கோடி ரூபாய் அளித்திருந்தது. இக்கடன் தொகையில் தற்போது 215 கோடி ரூபாய் நிலுவையில் உள்ளதாக ஆக்சிஸ் வங்கி மத்திய தொலைதொடர்பு அமைச்சகத்திற்கு தெரிவித்து இருந்தது.

ஸ்பெட்ரம் ஏலம்

ஸ்பெட்ரம் ஏலம்

நவம்பர் 7ஆம் தேதி தொலைதொடர்பு அமைச்சகம் அடுத்த கட்ட ஸ்பெட்ரம் ஏலம் மற்றும் நேஷ்னல் ஆப்டிக் பைபர் நெட்வொர்க் திட்டத்தை பற்றி பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Rs. 700-cr Bharti Airtel-Loop Mobile deal is off

Telecom major Bharti Airtel has called off its plans to acquire business and assets of Mumbai-based Loop Mobile, for about Rs. 700 crore, as the Department of Telecom is yet to clear the deal.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X