அலிபாபாவின் 'தள்ளுபடி': ஒரே நாளில் ரூ.55,392 கோடிக்கு விற்பனை

By Mayura Akilan
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெய்ஜீங்: நம் ஊரில் ஆடி தள்ளுபடி, தீபாவளி, பொங்கல் தள்ளுபடி என இந்தியாவில் களைகட்டும். பண்டிகை கால தள்ளுபடி விற்பனை சில நூறு கோடி ரூபாய்க்கு விற்பனையாகும். ஆனால் இணையதளம் மூலம் ஒரே நாளில் 55 கோடி ரூபாய்க்கு மேல் பொருட்களை விற்றுள்ளது சீனா நிறுவனம் ஒன்று.

 

உலகின் மிகப்பெரிய இணையதள பொருள் வணிக நிறுவனமான அலிபாபா நேற்று தனது சிறப்பு வர்த்தகத்தில் முதல் ஒரு மணி நேரத்தில் 1,200 கோடி ரூபாய்க்கு பொருட்களை விற்று சாதனை படைத்துள்ளது. ஒரே நாளில் தள்ளுபடி விற்பனை மூலம் 55,392 கோடி ரூபாய் பொருட்களை விற்றுள்ளதாம் அலிபாபா.

அலிபாபாவின் தள்ளுபடி

அலிபாபாவின் தள்ளுபடி

சீன நிறுவனமான அலிபாபா ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 11-ம் சிறப்புத் தள்ளுபடி விற்பனை நடத்துவது வழக்கம். இந்தாண்டுக்கு சிறப்பு விற்பனை சீனாவில் மட்டுமல்லாமல் உலகளவில் நடத்தப்பட்டது.

ஒரு மணி நேரத்தில்

ஒரு மணி நேரத்தில்

மிக அதிக அளவிலான தள்ளுபடி அறிவிப்புகளுடன் நடத்தப்பட்ட இவ்விற்பனையில் முதல் ஒரு மணி நேரத்தில் மட்டும் 1,200 கோடிக்கு வர்த்தகம் நடந்தது.

ரூ.55,392 கோடி

ரூ.55,392 கோடி

24 மணி நேரம் நடக்கும் இந்த சிறப்பு விற்பனையில் 27 ஆயிரம் பிராண்டுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டன. 220 நாடுகளில் இருந்து வாடிக்கையாளர்கள் பங்கேற்றனர். ஒரேநாளில் 55,392 கோடி ரூபாய்க்கு பொருட்கள் விற்பனையானது.

சாதனை படைத்த அலிபாபா
 

சாதனை படைத்த அலிபாபா

இவ்வளவு குறைந்த நேரத்தில் இவ்வளவு பொருட்கள் ஆன்லைனில் விற்றுள்ளது இதுவே முதல்முறை என்றும் அலிபாபா தெரிவித்துள்ளது.

மொபைல் மூலம் விற்பனை

மொபைல் மூலம் விற்பனை

இதில் 45 சதவிகித பொருட்கள் விற்பனை மொபைல் ஃபோன்கள் மூலமாக நடந்துள்ளதாகவும் அலிபாபா தெரிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Alibaba Singles' Day Sales Surge Past $9 Billion

E-commerce giant Alibaba Group Holding Ltd reported more than $9 billion (roughly Rs. 55,392 crores) in sales on China's Singles' Day on Tuesday, illustrating the buying power of the Chinese consumer and the importance of the event in the retail calendar.
Story first published: Wednesday, November 12, 2014, 11:41 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X