கிசான் விகாஸ் பத்திரங்கள் விற்பனை: 100 மாதங்களில் பணம் இரட்டிப்பு

By Mayura Akilan
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: கிசான் விகாஸ் பத்திரங்களில் செய்யப்படும் முதலீடு சரியாக 100 மாதங்களில் இரட்டிப்பாகும் என்று மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி கூறியுள்ளார்.

 

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திரும்பப் பெறப்பட்ட கிசான் விகாஸ் பத்திர திட்டம் மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளது. டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி இத்திட்டத்தை அறிமுகம் செய்து வைத்தார்.

கிசான் விகாஸ் பத்திரங்கள் விற்பனை: 100 மாதங்களில் பணம் இரட்டிப்பு

கிசான் விகாஸ் பத்திரம் ஆயிரம் ரூபாய், 5 ஆயிரம் ரூபாய், 10 ஆயிரம் ரூபாய், 50 ஆயிரம் ரூபாய் ஆகிய முக மதிப்புகளில் விற்கப்படும். ஒருவர், இந்தப்பத்திரங்களை எந்த எண்ணிக்கையிலும் வாங்கலாம். உச்ச வரம்பு எதுவும் கிடையாது என்று அரசு தெரிவித்துள்ளது.

மோசடியான முதலீட்டு திட்டங்கள் பக்கம் மக்கள் செல்வதைத் தடுக்க இத்திட்டம் உதவும் என நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தப் பத்திரங்களில் செய்யப்படும் முதலீடு சரியாக 100 மாதங்களில் அதாவது 8 ஆண்டுகள் மற்றும் 4 மாதங்களில் இரட்டிப்பாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிசான் விகாஸ் பத்திரங்கள் ஆரம்பத்தில் தபால் அலுவலகங்கள் மூலம் விற்கப்படும் என்றும் பிறகு பொதுத் துறை வங்கிகள் மூலமும் விற்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் நிதியமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருவரது பெயரில் இருந்து மற்றொருவர் பெயருக்கு இந்தப்பத்திரங்களை உரிமை மாற்றம் செய்து கொள்ள முடியும் என்றும் இதனை பிணையாக வைத்து கடன் பெற முடியும் எனவும் அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.

பத்திரத்தின் முதலீட்டுக் காலம் 100 மாதங்களாக இருந்தாலும் முதலீடு செய்த இரண்டரை ஆண்டுகளுக்கு பின்பு, அதாவது 30 மாதங்களுக்குப் பிறகு இதிலிருந்து வெளியேறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் நிர்ணயித்த காலத்துக்கு முன்பே வெளியேறினால் முழுமையான பணப்பலன் கிடைக்காது ஆண்டுக்கு 8 புள்ளி 7 சதவிகித வட்டி தரும் இத்திட்டத்திற்கு தற்போதைக்கு வரிச் சலுகை எதுவும் கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Govt aims at raising savings; re-launches Kisan Vikas Patra

With the objective to raise savings in the country, the government on Tuesday re-launched Kisan Vikas Patra (KVP), an instrument which will provide trusted option of investment to poor and keep them off ponzi schemes.
Story first published: Wednesday, November 19, 2014, 11:10 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X