அடுத்த விஜய் மல்லையா இவங்க தான் போல..

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்தியாவில் பல மலிவு விலை விமான நிறுவனங்கள் இருந்தாலும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பு இருந்தது வருகிறது. இதற்கு முக்கிய காரணம் இந்நிறுவனம் அள்ளி விசும் சலுகை கட்டணங்கள் தான்.

வாடிக்கையாளர்களை கவரும் வண்ணம் இந்நிறுவனம் அளித்த சலுகை விலை கட்டணத்தால் இந்நிறுவனம் தற்போது நிதி நெருக்கடியில் சிக்கித்தவித்து வருகிறது. இதனால் இந்நிறுவனம் செலவீணத்தை குறைக்க விமான பயனத்தை ரத்து செய்துள்ளது இதனால் இந்நிறுவனம் ரத்து செய்யும் ஒவ்வொரும் விமான பயணத்திற்கும் 25 கோடி ரூபாய் நஷ்டம்.

அதேபோல் 250 மில்லியன் டாலர் இருந்தால் தான் இந்நிறுவனம் மீண்டும் முழுவீச்சில் செயல்பட முடியும் என டிஎன்ஏ செய்தி நிறுவனம் தெரவித்துள்ளது.

நாள் ஒன்றுக்கும் ரூ.2.5 கோடி நஷ்டம்..

நாள் ஒன்றுக்கும் ரூ.2.5 கோடி நஷ்டம்..

நிதி நெருக்கடியில் சிக்கி பெரும் நஷ்டத்தை சந்தித்து வரும் இந்நிறுவனம் நாள் ஒன்றுக்கும் 2.5 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்து வருகிறது. மார்ச் 31, 2014ஆம் ஆண்டு கணக்கின் படி இந்நிறுவனத்தின் மொத்த கடன் 2,500 கோடி ரூபாய் ஆகும்.

காலாண்டு முடிவுகள்

காலாண்டு முடிவுகள்

கடந்த காலாண்டில் இந்நிறுவனம் 310 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்தது. அதேபோல் கடந்த நிதியாண்டில் மட்டும் இந்நிறுவனம் 1000 கோடி ரூபாய் அளவும் நஷ்டத்தை சந்தித்தது.

என்ன காரணம்

என்ன காரணம்

ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தில் அதிகளவிலான பங்குகளை சன் நெட்வொர்க் தலைவர் கலாநிதி மாறன் கைபற்றிய பின்னர், இந்நிறுவனத்தை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தவும், நடுத்தர மக்களுக்கு விமான பயணத்தை எளிதாகக்கவும் சலுகை விலையில் விமான பயணத்தை அறிவித்தார். இது நிறுவனங்களுக்கு மத்தியில் போட்டியாக மாறி நிறுவநம் சலுகை விலை விமான சேவையாகலே மாறியது. இதனால் இந்நிறுவனம் செலவுகளை சமாளிக்க முடியாமல் தவித்து வருகிறது.

விமானம் ரத்து

விமானம் ரத்து

தற்போது இந்நிறுவனம் இந்தியாவில் தினமும் 50 விமான பயணங்களை ரத்து செய்து வருகிறது. மேலும் ஒரு விமான பயணிக்கு 3,000 முதல் 4,000 ரூபாய் வரை நஷ்டத்தை சந்தித்து வருகிறது.

சென்டர் பார் ஏசியா பசிபிக் ஏவியேஷன்

சென்டர் பார் ஏசியா பசிபிக் ஏவியேஷன்

இந்தியாவில் முன்றாவது மிகப்பெரிய விமான நிறுவன ஸ்பைஸ்ஜெட் 250 மில்லியன் டாலர் நிதிநெருக்கடியில் சிக்கித் தவித்தாலும் அடுத்த 12 முதல் 18 மாதத்தில் நிலைபெற்றிவிடும் என முன்னனி ஆய்வு நிறுவனமான சென்டர் பார் ஏசியா பசிபிக் ஏவியேஷன் (CAPA) தெரிவித்துள்ளது.

பங்கு சந்தையில் ஸ்பைஸ்ஜெட்

பங்கு சந்தையில் ஸ்பைஸ்ஜெட்

மேலும் இந்நிறுவனத்தின் பங்குகள் கடந்த மே 23ஆம் தேதி முதல் பல ஏற்ற இறக்கங்களை சந்தித்தாலும் தொடர்ந்து சரிந்த வண்ணமே உள்ளது. தற்போது இந்நிறுவனத்தின் பங்கு மதிப்பு 14.97 ரூபாய் என்ப விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

விஜய் மல்லையா

விஜய் மல்லையா

இந்தியாவில் ஒரு காலத்தில் கொடிகட்ட பறந்த முன்னால் விமான சேவை நிறுவனத்தின் தலைவர் விஜய் மல்லையாவும் இதே போன்ற பிரச்சனைகளை தான் சந்தித்தார். இவர் பல இக்கட்டான சூழ்நிலையிலும் நிறுவனத்தை தொடர்ந்து நடந்த பல வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் இருந்து கடன் பெற்று தர்போது எதுவும் திருப்பி செலுத்த முடியாமல் தவித்து வருகிறார்.

கலாநிதி மாறன்

கலாநிதி மாறன்

இன்றைய நிலையில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தி்ன் பெயரில் 2,500 கோடி ரூபாய் கடன் மட்டுமே உள்ளது. இவரின் பிற தொழில்களில் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார், குறிப்பாக தொலைக்காட்சி மற்றும் தொலைதொடர்பு போன்றவை.

2ஜி பிரச்சனை

2ஜி பிரச்சனை

மேலும் கலாநிதி மாறன் அவர்களின் மீது 2ஜி அலைகற்றை முறைகேட்டு வழக்கு மற்றும் ஏர்செல் நிறுவன வழக்கில் இவர் குறிப்பிடப்பட்டுள்ளார். இவ்வழக்குகள் தற்போது நிதிமன்றத்தில் சூடுபிடித்துள்ளது. தீர்ப்பு இவர்பக்கம் எதிராக இருக்கும் வாய்ப்புள்ளது என பல கருத்துகள் வெளிவந்த வண்ணம் உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

SpiceJet suffers Rs 2.5 crore daily revenue loss

Amid flight cancellations, the cash-strapped SpiceJet could well get sucked into a swirling financial turbulence. The loss-making airline is teetering on the brink of a crisis, with a daily revenue loss of close to Rs 1.5-2.5 crore.
Story first published: Tuesday, November 25, 2014, 17:19 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X