பிளிப்கார்ட் நிறுவனத்திற்கு போட்டியாக ஜபாங் நிறுவனத்தை கைபற்றும் அமேசான்!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களுரூ: இந்தியாவின் ஆன்லைன் சில்லறை விற்பனை சந்தையில் தற்போது குழாய் சண்டை அளவிற்கு நிறுவனங்கள் சந்தையை கைபற்ற போட்டி போட்டு வருகின்றனர். இந்நிலையில் பன்னாட்டு நிறுவனமான அமேசான் இந்தியாவில் தனது விற்பனையை அதிகரிக்கவும், விற்பனை மற்றும் விநியோக சங்கிலியை வலுப்படுத்தவும் இந்தியாவின் முன்னணி பல்பொருள் விற்பனை நிறுவனமான ஜபாங் நிறுவனத்தை கைபற்ற திட்டமிட்டுள்ளது.

பிளிப்கார்ட் நிறுவனம் மின்திரா நிறுவனத்தை கைபற்றியைதை போல அமேசான் ஜபாங் நிறுவனத்தை கைபற்ற துடிக்கிறது. இந்த ஒப்பந்த்தின் மதிப்பு சுமார் 1.2 பில்லியன் டால்ராக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் பேஸ்புக் பக்கத்தில் இணைந்திடுங்கள்!!

ஜபாங் நிறுவனம்

ஜபாங் நிறுவனம்

இச்சந்தையில் இருக்கும் பிற நிறுவனங்களை போல ஜபாங் நிறுவனமும் பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களை கொண்டுள்ளது. இந்நிறுவனத்தின் பெரும் பகுதி ராக்கெட் இண்டர்நெட் நிறுவனம் பெற்றுள்ளது. அதை தொடரந்து சுவின் நிறுவனமான கின்எவிக் மற்றும் பிரிட்டிஷ் நிதியியல் நிறுவனமான சிடிசி ஆகிய நிறுவனங்கள் இந்நிறுவனத்தில் அதிகளவில் முதலிடு செய்துள்ளது.

பிளிப்கார்ட் Vs அமேசான்

பிளிப்கார்ட் Vs அமேசான்

இச்சந்தையில் முன்னணியாக திகழும் சிங்கப்பூர் நாட்டை சேர்ந்த பிளிப்கார்ட் நிறுவனம் இந்தியாவின் மின்திரா நிறுவனத்தை 1800 கோடி ரூபாய்க்கு கைபற்றியதை போல, அமேசான் நிறுவனம் பிளிப்கார்ட் நிறுவனத்திற்கு கடுமையாக போட்டிய அளிக்க ஜபாங் நிறுவனத்தை கைபற்ற பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டுள்ளது.

50 சதவீத சந்தை

50 சதவீத சந்தை

இந்தியாவின் ஆன்லைன் சில்லறை சந்தையில் பிளிப்கார்ட் மற்றும் மின்திரா நிறுவனங்கள் இணைந்தது சுமார் 50 சதவீத சந்தையை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளது. மீதமுள்ள 75%இல், 25 சதவீதம் ஜபாங் நிறுவனமும் வைத்துள்ளது.

முதல் இடத்தின் சூத்திரம்

முதல் இடத்தின் சூத்திரம்

முதல் இடத்தை பிடிக்க உழைக்க வேண்டாம், முதல் இடத்தில் இருப்பவனின் உழைப்பை பெற்றால் மட்டும் போது, முதல் இடத்தை சுலபமாக எட்டிவிடலாம். இந்த பார்முலவை தான் அமேசான் ஃபாலோ செய்கிறது. இந்நிலையில் அமேசான் நிறுவனம் சந்தையில் 10 சதவீதத்திற்கு குறைவான அளவிலான பங்குகளை மட்டுமே வைத்துள்ளது.

பேஷன் ஆடைகள்

பேஷன் ஆடைகள்

இந்திய சந்தையில் தற்போது பேஷன் மற்றும் ஆடைகள் விற்பனை சந்தையில் குறைவான விற்பனையாளர்களே உள்ளனர் இந்நிலையில் இச்சந்தையை விரைவில் கைபற்ற பெரு நிறுவனங்கள் மிகவும் உக்கிரமாக செயல்பட்டு வருகின்றனர் என சந்தை அலோசகரான அரவிந்த் சின்ஹால் தெரிவித்தார்.

ஆயுத எழுத்து

ஆயுத எழுத்து

ஜபாங் நிறுவனத்தை 2012ஆம் ஆண்டு 3 தொழில்முனைவோர்கள் சேர்ந்து உருவாக்கினர். அவர்கள் லட்சுமி போட்லோரி, பிரவீண் சின்ஹா, மற்றும் அருண் சந்திர மோகன் ஆகியோர் ஆவர்.

முதலீட்டாளர்கள்

முதலீட்டாளர்கள்

இந்நிறுவனத்தை துவங்கிய சிலமாதங்களிலேயே பல முதலீட்டாளர்கள் நிறுவனத்தில் முதலீடு செய்ய குவிந்தனர். அதனை தொடர்ந்து சுமார் 1000 பிரான்டுகள் விற்பனை செய்யும் படி இந்நிறுவனம் வளர்ந்துள்ளது.

விற்பனை

விற்பனை

மேலும் இந்நிறுவனம் தற்போது வருடத்திற்கு சுமார் 300 மில்லியன் டாலர் அளவிற்கு விற்பனை செய்து வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் பேஸ்புக் பக்கத்தில் இணைந்திடுங்கள்!!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Amazon to acquire Jabong for $1.2 million: Reports

American online retail giant Amazon is reportedly planning to acquire Indian online fashion retailer Jabong.com. The move to take over Jabong is backed by Rocket Internet and the deal is believed to be worth as much as US $1.2 billion.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X