உலக சந்தைகளின் எதிரொலி: பெட்ரோல், டீசல் விலை அதிகளவில் குறையும்!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: உலகில் தங்கம், வெள்ளி போன்று மிகவும் முக்கியமான உற்பத்தி பொருட்களில் கச்சா எண்ணெய் ஒன்று, எப்போதும் ஏறுமுகத்தில் இருந்த கச்சா எண்ணெய் கடந்த சில மாதங்களில் மட்டும் ஒரு பீப்பாய் எண்ணெயின் விலை சுமார் 6 டாலர் அளவு குறைந்து நான்கு வருட விலை சரிவை பதிவு செய்தது.

 

மேலும் தற்போது உலக நாடுகளில் எண்ணெய் அதிகளவில் விநியோகம் செய்யப்படுவதால் விலை குறைந்து வருகிறது. எனவே எண்ணெய் உற்பத்தியை குறைக்க அல்லது நிறுத்த துரிதமாக முடிவுகளை எடுக்க எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பான OPEC அமைப்பு வியாழக்கிழமை கூடியது.

முற்றுபுள்ளி தேவையில்லை....

முற்றுபுள்ளி தேவையில்லை....

OPEC அமைப்பு நடத்திய கூட்டத்தில் எண்ணெய் உற்பத்தி மற்றும் விநியோகத்தை குறைக்க வேண்டாம் என்று தொடர்ந்து செயல்படுத்தவும் இக்கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.

40 சதவீத விநியோகம்

40 சதவீத விநியோகம்

உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் எண்ணெய் வளத்தில் 40 சதவீதம் இக்கூட்டமைப்பின் மூலமே செய்யப்படுகிறது. மேலும் கடந்த ஆறு மாதத்தில் மட்டும் கச்சா எண்ணெய்யின் விலை சுமார் 30 சதவீதம் குறைந்துள்ளது.

உற்பத்தியில் நன்மை..

உற்பத்தியில் நன்மை..

பெட்ரோலிய பொருட்கள் ஏற்றுமதி செய்யும் நாடுகள் தங்களின் உற்பத்தியை குறைக்காவிட்டால தற்போது இருக்கும் 72.5 டாலர் விலை 60 டாலர் வரை குறையும் என சந்தை வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

உலக நாடுகள்
 

உலக நாடுகள்

மேலும் அமெரிக்க சந்தையில் கச்சா எண்ணெய் தற்போது 68.37 டாலருக்கு விற்கப்படுகிறது. அதேபோல் ரஷ்ய எண்ணெய் உற்பத்தி நிறுவனமான ஈகோர் செச்சின் நிறுவனமும் அடுத்த சில மாதங்களில் எண்ணெய்யின் விலை 60 டாலர் வரை குறையும் என தெரிவித்துள்ளது.

இந்தியா

இந்தியா

கச்சா எண்ணெய்யின் விலை குறைவதால் பெட்ரோல் வளம் இல்லாத நாடுகளுக்கும் இது ஒரு மிகழ்ச்சியான செய்தி. மேலும் இந்தியாவிற்கு அது மகத்தான செய்தியாகும். ஏனென்றால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்தியா ரூபாயின் மதிப்பு தற்போது அதிகரித்து வருகிறது. இச்சமையத்தில் கச்சா எண்ணெய்யின் விலை குறையும் போது செலவீனங்கள் குறையும்.

பெட்ரோல் விலை

பெட்ரோல் விலை

கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு 60 டாலர் வரை குறைந்தால் இந்தியாவில் பெட்ரோல் லிட்டர் 60 ரூபாய் என்ற அளவில் விலை குறைய வாய்ப்புள்ளது.

பொருளாதாரம்

பொருளாதாரம்

தற்போது கச்சா எண்ணெய்யின் விலை 72.5 டாலராக உள்ளது, இது 60 டாலர் வரை குறைந்தால் ஒரு பீப்பாய்க்கு 10 டாலர் செலவீனம் குறையும். இதனால் இந்தியாவின் பொருளாதாரம் 0.1 முதல் 0.2 வரை உயரும். இதேபோல் நடப்பு கணக்கு பற்றாக்குறை 0.5 சதவீதம் வரை உயரும் என நோமுரா என்னும் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Why Petrol, Diesel Prices May Go Down Further

Crude oil prices fell more than $6 to a fresh four-year low under $75 a barrel on Thursday after OPEC decided not to cut production, despite a huge oversupply in world markets.
Story first published: Friday, November 28, 2014, 13:50 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X