சென்னை: இந்திய தபால் துறையில் பல முதலீட்டு மற்றும் சேமிப்பு திட்டங்கள் இருந்தாலும், அதில் மிகவும் பிரபலமான திட்டம் என்றால் கிஸான் விகாஸ் பத்திர திட்டம் தான். ஆனால் முன்று வருடங்களுக்கு முன்பு சில முக்கிய காரணங்களுக்காக இத்திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இதனால் பல சர்ச்சைகள் உருவானது, எனவே இன்று இத்திட்டம் மீண்டும் உயிர்பெற்று நடைமுறைக்கு வந்துள்ளது.
கிசான் விகாஸ் பத்திர திட்டம்
தபால் துறையில் இருக்கும் பிபிஎஃப், என்.எஸ்.சி திட்டங்கள் போலவே கிசான் விகாஸ் பத்திர திட்டத்திலும் பல நன்மைகளும் மற்றும் சில இடர்களும் உள்ளது. பொதுவாக சிறு முதலீட்டாளர்கள் இத்திட்டத்தை வங்கி வைப்பு நிதிகளுடன் ஒப்பிடுவார்கள் எனவே சிறு முதலீட்டாளர்களுக்கு மிகவும் லாபகரமான மற்றும் பாதுகாப்பான திட்டமாக கிசான் விகாஸ் பத்திர திட்டம் உள்ளது.
வட்டி வகிதம்
இத்திட்டம் மக்களுக்கு 1,000 ரூபாய் குறைந்தபட்ச முதலீடாக கொண்டு 5000 ரூபாய், 10,000 ரூபாய் என்ற வீதத்தில் முதலீடு செய்ய வழிவகுக்கிறது. இத்திட்ட முதலீட்டில் வருடத்திற்கு 8.7 சதவீத வட்டியை அளிக்கிறது.
100 மாதம்
மேலும் இத்திட்டத்தில் 100 மாதத்தில் ஆதாவது 8 வருடம் 4 மாதத்தில் உங்கள் முதலீட்டு 2 மடங்காக உயரும்.
பகுதி முதலீட்டுத் தொகை
இத்திட்டத்தில் செய்த முதலீட்டை, திட்டத்தின் இடைப்பட்ட காலத்தில் எடுக்க வேண்டும் என்றால் 2 வருடம் 6 மாதங்கள் பொருத்திருக்க வேண்டும்.
விரி விலக்கு
தபால் நிலையத்தில் வழங்கும் பிற திட்டங்களை போலவே இந்நிறுவனம் இத்திட்டத்திற்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது. இதேபோல் இத்திட்டத்தை வைத்துக்கொண்டு கடன் பெற்றுக்கொள்ள முடியும்.
வங்கி வைப்பு நிதிகள்
இத்திட்டத்தை வங்கி வைப்பு நிதிகளுடன் ஒப்பிட்டால் லாப விகிதத்தில் சற்று குறைவானதே. வங்கிகளில் வைப்பு நிதி திட்டத்திற்கு 3 வருடத்திற்கு 9 சதவீத வட்டியை வழங்குகிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications