ரிசர்வ் வங்கி நாணயக் கொள்கையில் மாற்றம் இல்லை!! விலைஉயர்வு விகிதம் 6% குறையும்..

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: இந்தியாவின் வளர்ச்சி வகிதம் நடப்பு நிதியாண்டில் இரண்டாம் காலாண்டில் 5.3 சதவீதமாக குறைந்ததை தொடர்ந்து மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் நாணயக் கொள்கையை மிகவும் விழிப்புடன் தீட்டி வருகிறது. இதன் படி செவ்வாய்க்கிழமை ரிசர்வ் வங்கி வெளியீடும் இருமாதக் நாணயக் கொள்கையில் மாற்றம் எதும் செய்யாமல் வெளியிடலாம் என வங்கித்துறை வல்லுனர்கள் கணித்துள்ளனர்.

இதற்கு சாதகமாக நாட்டின் பணவீக்கம் மிகவும் குறைவாக உள்ளது. இதுமட்டும் அல்லாமல் வெள்ளிக்கிழமை தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட அனைத்து கட்டுப்பாடுகளும் ரிசர்வ் வங்கி விளக்கியுள்ளது.

அருந்ததி பட்டாச்சார்யா

அருந்ததி பட்டாச்சார்யா

ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கையை பற்றி ஸ்டேட் பாங்கு ஆஃப் இந்தியா வங்கியின் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா கூறுகையில் திருத்தப்படாத புதிய நாணய கொள்கையின் மூலம் நாட்டின் பணவீக்கம் நவம்பர் மற்றும் ஜனவரி மாதக் காலக்கட்டத்தில் அதிகரிக்கும், ஆனால் மார்ச் மாதத்தில் சீரடையும் எனவும் கூறினார்.

வட்டி நிலை மாற்றம்

வட்டி நிலை மாற்றம்

மேலும் ரிசர்வ் வங்கி நடப்பு நிதியாண்டின் இறுதியில் வட்டி விகிதங்களில் மாற்றம் கொண்டு வரும் எனவும் அருந்ததி பட்டாச்சார்யா தெரிவித்தார்.

விலை உயர்வு

விலை உயர்வு

ரிசர்வ் வங்கி நாட்டில் நிலவும் விலைஉயர்வு நிலையை ஜனவரி 2016ஆம் ஆண்டுக்குள் 6 சதவீத வரை குறைக்க திட்டமிட்டு வருகிறது இதன் காரணமாகவே விட்டி விகிதத்தில் எவ்விதமான மாற்றத்தையும் செய்யாமல் உள்ளது

பணவீக்கம்

பணவீக்கம்

அக்டோபர் மாதத்தில் நாட்டில் மொத்த விலை பணவீக்கம் 5 வருட சரிவை எட்டி 1.77 சதவீதமாக உள்ளது. அதேபோல் நுகர்வோர் விலை குறியீட்டு 5.52 சதவீதமாக உள்ளது.

அருண் ஜேட்லி

அருண் ஜேட்லி

மேலும் நிதியமைச்சர் அருண் ஜேட்லி வட்டி வகிதத்தில் சில அடிப்படை புள்ளிகள் குறைப்பதன் மூலம் வீட்டுக்கடன் மற்றும் வாகனக்கடன் ஆகியவிற்றில் மிகப்பெரிய தாக்கம் உண்டாகும் என அவர் தெரிவித்தார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

RBI may keep policy rate unchanged on Tuesday

Reserve Bank may keep policy rate unchanged in its upcoming monetary policy review on Tuesday even as the finance minister and industry clamoured for the rate cut to prop the economy after GDP growth slipped to 5.3 per cent in the second quarter of current fiscal.
Story first published: Monday, December 1, 2014, 10:59 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X