மும்பை: இந்தியாவில் பணவீக்கத்தை கட்டுப்படுத்தவும், விலை உயர்வு பிரச்சனைகளை குறைக்கவும் ரிசர்வ் வங்கி இன்று காலை வெளியிட்ட தனது இருமாத நாணய மறுஆய்வு கொள்கையில் மாற்றம் எதும் செய்யாமல் வெளியிட்டுள்ளது.
இன்று வெளியிட்ட அறிக்கையில் வங்கிகளின் பண இருப்பு விகிதம் (CRR) மற்றும் எஸ்எல்ஆர் விகிதத்தில் எவ்வதமான மாற்றுமும் செய்யவில்லை. மேலும் இதை 2015ஆம் ஆண்டின் துவக்கத்தில் மாற்ற உள்ளதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
பணப்புழக்கம்
நாட்டில் நிலவும் பணப்புழக்கத்தை நிலைபெற செய்ய ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதம், சிஆர்ஆர் மற்றும் எஸ்எல்ஆர் போன்ற எந்த விதமான விட்டி விகிதத்தையும் மாற்றவில்லை.
ரெப்போ விகிதம்
ரிசர்வ் வங்கி பிற வங்கிகளுக்கு வழங்கும் கடன் தொகைக்கான வட்டி விகிதமான ரெப்போ விகிதத்தை 8 சதவீதமாக கடந்த 6 மாதமாக வைத்துள்ளது.
பண இருப்பு விகிதம்
அதேபோல் வங்கிகளில் இருக்கும் டெப்பாசிட் தொகையில் சில விகிதம் பணமாக வங்கிகள் வைத்திருக்கும் பண இருப்பு விகிதத்தையும் 4 சதவீதமாக வைத்துள்ளது.
நுகர்வோர் விலைக் குறியீட்டு
மேலும் ரிசர்வ் வங்கி நாட்டின் நுகர்வோர் விலைக் குறியீட்டின் பணவீக்கத்தை 2016ஆம் ஆண்டிற்குள் 6 சதவீதமாக குறைக்க பல முயற்சிகள் செய்துவருகிறது. இதன்படி நாட்டின் பணபுழக்கத்தை அதிகரிக்க வட்டி விகிதங்களை மாற்றாமல் வைத்து ரிசர்வ் வங்கி.
நடப்பு கணக்கு பற்றாக்குறை
மேலும் அடுத்து வரும் மாதங்களில் நாட்டின் இறக்குமதி அதிகரிக்கும் இதனால் நடப்பு கணக்கு பற்றாக்குறை நாட்டின் பொருளாதாரத்திற்கு அச்சுறுத்தலாக விளங்கும் எனவும் இவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
அடுத்த இருமாத நாணயக் கொள்கை
ரிசர்வ் வங்கியின் அடுத்த இருமாத நாணயக் கொள்கை பிப்ரவரி 3ஆம் தேதி 2015ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கி வெளியிட உள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது



Click it and Unblock the Notifications