முக்கிய வழித்தடத்தில் விமான சேவையை ரத்து!! செலவீன குறைப்பில் இறங்கிய ஏர் இந்தியா..

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: நிதி நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் அரசு விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியா தனது கடன் அளவை குறைக்கவும், வருவாய் அதிகரிக்கவும், முக்கிய செலவீனங்களை குறைக்க முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சரான மகேஷ் சர்மா அவர்கள் கூறுகையில் செலவீன குறைப்பில் முதற்கட்டமாக லாபம் அழிக்காத வழித்தடத்தில் விமான சேவையை ரத்து செய்ய முடிவு செய்துள்ளோம் என தெரிவித்தார்.

மகேஷ் சர்மா

மகேஷ் சர்மா

அமைச்சர் நாடாளுமன்றத்தில் இதுகுறித்து பேசுகையில், "ஏர் இந்தியா நிறுவனம் லாபம் தரும் நிறுவனமாக இல்லை, இத்துறையில் உள்ல போட்டியின் காரணமாக நிறுவனம் கடந்த 5 வருடமாக கடுமையான நஷ்டத்தை சந்தித்து வருகிறது. இந்நிலையை சரி செய்ய நிறுவனத்தின் பராமரிப்பு செலவுகளை அதிகளவில் குறைக்க முடிவு செய்துள்ளோம்" என தெரிவித்தார்.

அலுவலகங்கள்

அலுவலகங்கள்

அதுமட்டும் அல்லாமல் வெளிநாடுகளில் இருக்கும் அலுவலகங்களை மூடவும், இணையதள இணைப்புடன் புதிய பணிகள் சேவை திட்டத்தை உருவாக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

ரூ.40,000 கோடி கடன்

ரூ.40,000 கோடி கடன்

ஏர் இந்தியா நிறுவனம் கடந்த நிதியாண்டில் மட்டும் சுமார் 5,000 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்தது குறிப்பிடதக்கது. மேலும் 40,000 கோடி ரூபாய் கடன் நிலுவையில் இந்நிறுவனம் உள்ளது.

நிதி உள்ளீடு

நிதி உள்ளீடு

2014-15ஆம் நிதியாண்டில் மத்திய அரசு இந்நிறுவனத்தின் செயல்பாட்டுக்காக சுமார் 5,000 கோடி ரூபாய் நிதி உதவி செய்யதது.

20,000 கோடி ரூபாய் நிதி

20,000 கோடி ரூபாய் நிதி

மேலும் மத்திய அரசு இந்நிறுவனத்தை லாபகரமாக மாற்ற 2020-2021ஆம் வருடத்திற்குள் சுமார் 20,000 கோடி ரூபாய் நிதி உதவி செய்ய ஒப்புதல் அளித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Air India takes cost cutting measures

Debt-ridden national carrier Air India has taken cost-cutting measures to reduce its financial burden and hike revenue inflows.
Story first published: Wednesday, December 3, 2014, 10:40 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X