ஹீரோவின் ஹீரோ ஆனார் டைகர் உட்ஸ்!! 250 கோடி ரூபாய் டீல்...

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இரு சக்கர வாகன உற்பத்தியில் முன்னணி நிறுவனமாக திகழும் ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம், தனது தயாரிப்புகளை உலகளவில் கொண்டு சேர்க்கும் பணியில் முழுவீச்சில் இறங்கியுள்ளது. இதன் காரணமாக கோல்ஃப் விளையாட்டு சூப்பர் ஸ்டாரான டைகர் உட்ஸை இந்நிறுவனத்தின் விளம்பர தூதராக நியமித்துள்ளது.

 

இதற்காக ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம், டைகர் உட்ஸ் உடனான 4 வருட ஒப்பந்தத்திற்கு 250 கோடி ரூபாய் அளித்துள்ளது.

இந்திய நிறுவனங்கள்

இந்திய நிறுவனங்கள்

பொதுவாக நிறுவனங்கள் திரைப்பட நடிகர் மற்றும் நடிகைகளை வைத்தே தங்களது பொருட்களை விளம்பரம் செய்வார்கள். ஆனால் இந்திய நிறுவனங்கள் முதன்முதலில் விளையாட்டு விரர்களை வைத்து விளம்பரம் செய்தது. இதற்காக அவர்களுக்க பல கோடி ரூபாய் சம்பளமாக கொடுக்கப்படுகிறது. இதற்கு சரியா உதாரணம் சச்சின் டெண்டுல்கர் மற்றும் தோனி ஆகியோர் தான்.

ஹீரோ மோட்டோ கார்ப்

ஹீரோ மோட்டோ கார்ப்

பொதுவாக இந்திய தயாரிப்புகளுக்கு வெளிநாடுகளில் அதிகளவில் வரவேற்பு கிடைப்பதில்லை இதனால் இந்தியா நிறுவனங்களின் விற்பனையும் குறைகிறது. எனவே இந்நிறுவனத்தின் விற்பனை எந்த வகையிலும் குறைக்கூடாது என திட்டமிட்ட இந்நிறுவனத்தின் துணை தலைவர் பவன் முஞ்சால் 250 கோடி ரூபாய் கொடுத்து டைகர் உட்ஸை வழைத்துப்போட்டார்.

டைகர் உட்ஸ்
 

டைகர் உட்ஸ்

இந்தியாவின் முன்னணி விளையாட்டு விரர்கள் விளம்பரத்தில் நடிக்க ஒரு வருடத்திற்கு 4-10 கோடி ரூபாய் பெறுகின்றனர், ஆனால் இது இந்தியா சந்தையில் மட்டும் தான். டைகர் உட்ஸ் அவர்களின் இணைப்புடன் உலக சந்தையில் ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம் இறங்க உள்ளது இதற்காக 250 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது.

ஆர்லேன்டோ

ஆர்லேன்டோ

மேலும் இதற்கான அறிவிப்பை பவன் முஞ்சால் திங்கட்கிழமை அமெரிக்காவின் ஆர்லேன்டோவில் இந்திய பத்திரிக்கையாளர்களை அழைத்து அவர்கள் முன்னிலையில் தெரிவித்தார்.

பிரிவு

பிரிவு

இந்தியாவில் ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவநம் ஹோட்டா நிறுவனத்துடன் இணைந்து கடந்த 25 வருடமாக செயல்பட்டது. கடந்த 2011ஆம் ஆண்டில் இரு நிறுவனங்களுக்கும் இடையே இருந்த ஒப்பந்தம் முடிவடைந்தது.

வேகமான வளர்ச்சி

வேகமான வளர்ச்சி

இப்பிரிவின் ஹீரோ மோட்டோ கார்ப் பல புதிய திட்டங்கள், உற்பத்திய ஆலைகள், ஆராய்ச்சிக் கூடம் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் என படு வேகமாக வளர்ந்து வருகிறது.

உலக நாடுகள்

உலக நாடுகள்

ஹோட்டா நிறுவனத்துடனான பிரிவின் பின் ஹீரோ மோட்டோ கார்ப் ஆசிய, தெற்கு மற்றும் மத்திய அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா நாடுகளில் களம் இறங்கியது. மேலும் அடுத்த வருடத்தில் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் மற்றும் 2016ஆம் ஆண்டில் அமெரிக்கா மற்றும் பிரேசில் நாடுகளிலும் களம் இறங்க திட்டமிட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Hero swings record Rs 250 crore deal with Tiger Woods

Hero MotoCorp, the country's biggest bike company, announced that it had inked a four-year endorsement deal with ace golfer Tiger Woods for a whopping Rs 250 crore. 
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X