ஏர் இந்தியா, விஸ்தாரா நிறுவனங்களுக்கு போட்டியாக களமிறங்கும் ஜெட் ஏர்வேஸ்!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: ஐெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் மறுசீரமைப்பு திட்டத்தின் மூலம் இந்தியாவில் முழுமையான உள்நாட்டு விமான சேவையை அளிக்க உள்ளது. இந்தியாவில் இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட், ஏர்ஏசியா மற்றும் கோ ஏர் போன்ற நிறுவனங்கள் இத்தகைய சேவை அளிக்கும் பட்சத்தில் புதியதாக உள்நாட்டு சேவையில் களம் இறங்கும் ஏர் இந்தியா மற்றும் விஸ்தாரா போன்ற நிறுவனங்களுக்கு ஜெட் ஏர்வேஸ் கடுமையான போட்டி அளிக்கும்.

 

உள்நாட்டு சேவை

உள்நாட்டு சேவை

ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தனது இணை சேவை நிறுவனமான ஜெட் கனக்ட் மற்றும் ஜெட் லைட் போன்ற நிறுவனங்கள் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துடன் இணைத்தமையினால் இந்தியாவில் முழுமையான உள்நாட்டு சேவையை அளிக்க உள்ளது.

இரண்டு நிலை சேவை

இரண்டு நிலை சேவை

ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் உள்நாட்டு பயனிகளுக்கு 2 வகையான திட்டங்களை வழங்க உள்ளது. பயணிகளுக்கு தின்பண்டங்கள் கூடிய முதல் வகுப்பு வசதியும், சாதாரண பயண வசதி கொண்ட இரண்டாம் வகுப்பு வசதியும் அளிக்கிறது.

வெளிநாட்டு விமான சேவைகள்

வெளிநாட்டு விமான சேவைகள்

மேலும் இந்நிறுவனத்தின் 24 சதவீத பங்குகளை எதிஹாத் நிறுவனம் கைபற்றியதன் காரணமாக இந்நிறுவனம் தற்போது அதிகளவிலான விமான சேவைகளை வளைகுடா நாடுகளுக்கும் வழங்க உள்ளது.

விரிவாக்கம்
 

விரிவாக்கம்

இந்தியாவில் இந்நிறுவனம் தற்போது 51 இடங்களுக்கு சேவை அளிக்க உள்ளது, தினமும் 450 முறை விமானங்களை இயக்கி வருகிறது.

பங்கு சந்தை

பங்கு சந்தை

மேலும் இந்நிறுவன பங்குகள் நேற்று 8.29 சதவீதம் உயர்ந்து 377 ரூபாய் என்ற விலையில் வர்த்தகம் செய்யப்பட்டது. இன்று இதன் விலை 11.85 புள்ளிகள் சரிந்து 365.95 ரூபாய் என்ற விலையில் வர்த்தகம் செய்யப்பட்டன.

விஸ்தாரா

விஸ்தாரா

இந்நிறுவனம் டாடா குழுமம் மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் இணைந்து இந்தியாவில் உருவாக்கிய புதிய நிறுவனம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Jet Airways turns full service, to compete with Air India and Vistara

As per a business restructuring plan, Jet Airways starting Tuesday commenced the roll out of a full service product on all flights across its domestic network. Jet Airways will compete with national carrier Air India and the soon to be launched airline Vistara.
Story first published: Wednesday, December 3, 2014, 18:05 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X