வைப்பு நிதிகளுக்கான வட்டி வகிதத்தை குறைக்கும் தனியார் வங்கிகள்!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: ரிசர்வ் வங்கி கடந்த செவ்வாய்கிழமை வெளியிட்ட இரு மாத நிதியியல் கொள்கை அறிக்கையில் எவ்விதமாற்றமும் இல்லாமல் வெளியிட்டது. இதனால் தனியார் வங்கிகள் வைப்பு நிதிகளுக்கான வட்டி விகிதத்தை குறைக்க முடிவு செய்துள்ளது. மேலும் இந்த வட்டி விகித குறைப்பை பொதுத்துறை வங்கிகளும் கூடிய விரைவில் அறிவிக்கும் எனவும் தெரிகிறது.

தனியார் வங்கிகள்

தனியார் வங்கிகள்

இந்தியாவின் முதன்மையான தனியார் வங்கிளில் ஐசிஐசிஐ மற்றும் ஹெச்டிஎஃப்சி வங்கிகள் மிக முக்கிய இடங்களில் உள்ளது. இவ்வங்கிகள் தங்களின் வட்டி விகிதத்தை 9 சதவீதத்திற்கும் குறைவாக நிர்ணயம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்கான அறிவிப்புகளும் இவ்வங்கிகள் வெளியிட்டுள்ளது.

ஹெச்டிஎஃப்சி வங்கி

ஹெச்டிஎஃப்சி வங்கி

ஹெச்டிஎஃப்சி வங்கி பலதரப்பட்ட முதிர்வு காலம் கொண்ட வைப்பு நிதி திட்டங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது, தற்போது இவ்வங்கியின் டெப்பாசிட்கான வட்டி வகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் வரை குறைத்துள்ளது. எனவே தற்போது இந்நிறுவனம் வழங்கும் அதிகப்படியான வட்டி வகிதம் 8.75 சதவீதம் தான். இத்திட்டத்திற்கு முதிர்வு காலம் 1 வருடம் மட்டுமே.

ஐசிஐசிஐ வங்கி

ஐசிஐசிஐ வங்கி

ஹெச்டிஎஃப்சி வங்கியை போலவே ஐசிஐசிஐ வங்கியும், தனது குறுகிய கால வைப்பு நிதிகளுக்கான வட்டி விகிதத்தை 25 அடைப்படை புள்ளிகள் குறைத்து 8.75 சதவீதமாக அறிவித்துள்ளது.

எஸ்பிஐ வங்கி

எஸ்பிஐ வங்கி

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா கடந்த நவம்பர் 1ஆம் தேதியன்றே தனது வைப்பு நிதிகளுக்கான வட்டி விகித்தை குறைத்தது.

கடன்களுக்கான வட்டி விகிதம்

கடன்களுக்கான வட்டி விகிதம்

வங்கிகள் வைப்பு நிதிகளுக்கான வட்டி விகிதத்தை குறைத்து தவிற வீட்டுக் கடன், வாகன கடன் போன்ற எந்தவிதமான கடன்களுக்கும் வட்டிகளை குறைக்கவில்லை.

பண சந்தை

பண சந்தை

மேலும் இந்திய பண சந்தையில் வட்டி விகித குறைப்பினால் 10 வருட அரசு பத்திரங்களின் லாப அளவு 16 மாத சரிவை தளுவியுள்ளது என சந்தை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

ICICI, HDFC Bank cut FD rates

A couple of days before RBI governor Raghuram Rajan decided to maintain a status quo in the monetary policy, the country's two largest private banks had quietly brought down deposit rates. Following the reduction, which is in select time buckets, both banks' best rates are now below 9%.
Story first published: Thursday, December 4, 2014, 10:51 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X