மொபைல் பேங்கிங் முறையை ஊக்குவிக்கும் ரிசர்வ் வங்கி!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: வங்கிகளில் இயக்குத் திறனை மேம்படுத்தவும், செயற்பாட்டு செலவுகளை குறைக்கவும், மொபைல் பேங்கிங் பயன்படுத்துவதை வாடிக்கையாளர்கள் மத்தியில் ஊக்குவிக்க வேண்டும் என வங்கிகளை ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா (ஆர்.பி.ஐ) அறிவுறுத்தியுள்ளது.

இனி மொபைல் பேங்கிங் செய்வதற்கான பின் எண்ணை ஏ.டி.எம்., கைப்பேசிகள், இண்டர்நெட் பேங்கிங் மற்றும் அஞ்சல்கள் மூலமாக உருவாக்கி கொள்ளலாம்.

மொபைல் பேங்கிங்

மொபைல் பேங்கிங்

மொபைல் பேங்கிங் சேவையை ப்ரொமோட் செய்யவும் வாடிக்கையாளர்களின் கைப்பேசி எண்களை வாங்கவும் வங்கிகளிடம் ஆர்.பி.ஐ. கேட்டுக் கொண்டுள்ளது.

செயல்முறைகள்

செயல்முறைகள்

மொபைல் பேங்கிங் விதிமுறைகளை விளக்கிடும் அதன் புதிய சுற்றறிக்கையின் மூலமாக, அனைத்து வங்கிகளுக்கும் தரப்படுத்தப்பட்ட செயல்முறைகளை வகுத்துள்ளது.

பிரச்சனைகள்

பிரச்சனைகள்

"வாடிக்கையாளர்களை மொபைல் பேங்கிங்கில் பதிவதிலும், விநியோக மற்றும் அங்கீகார செயல்முறையிலும் ஒவ்வொரு வங்கியும் ஒவ்வொரு செயல்முறையை பின்பற்றுகிறது. வங்கியில் நிலவும் விழிப்புணர்வு இல்லாமையும், தரப்படுத்தப்பட்ட செயல்முறைகளும் பிரச்சனைகளை அதிகரித்துள்ளது. இதனால் நாட்டில் அதிகமான கைப்பேசி பயன்பாடு இருந்தாலும் கூட, மொபைல் பேங்கிங் சேவையின் வளர்ச்சி மிதமாகவே இருக்கிறது."

புதிய வாடிக்கையாளர்

புதிய வாடிக்கையாளர்

புதிதாக கணக்கு திறப்பதற்கான படிவங்களில் வாடிக்கையாளர்கள் மொபைல் பேங்கிங்கை தேர்வு செய்வதற்கு ஏதுவாக கண்டிப்பான முறையில் ஒரு பிரிவு சேர்க்கப்படும்.

தீவிரமான முயற்சி

தீவிரமான முயற்சி

விழிப்புணர்வை அதிகரிப்பதற்கு தீவிர முயற்சிகளை எடுக்குமாறு வங்கிகளை ஆர்.பி.ஐ. கேட்டுக் கொண்டுள்ளது. ஒவ்வொரு உரையாடலின் போதும் இந்த முயற்சியை எடுக்க வேண்டும் - ஏ.டி.எம்.-கள், கிளைகள் மற்றும் பாஸ்புக் அச்சிடும் கவுண்டர்களில் வாடிக்கையாளர்களின் கைப்பேசி எண்ணை வாங்கும் நடவடிக்கை தொடர வேண்டும்.

 ஆர்.பி.ஐ

ஆர்.பி.ஐ

15 கோடி புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க (இதில் பெரும்பாலானவர்கள் குறைந்தபட்ச இருப்பு தேவையை கொண்டிருப்பதில்லை) வங்கிகள் எதிர்ப்பார்க்கப்படும் நேரத்தில், மொபைல் பேங்கிங் மீதான இந்த ஆர்.பி.ஐ.-யின் நடவடிக்கை முக்கியத்துவத்தை பெறும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

RBI asks banks to push use of mobile banking

In a bid to improve efficiency of banks and to bring down their operational costs, the Reserve Bank of India (RBI) has asked banks to make all possible efforts to enable customers to get onboard the mobile banking platform. 
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X