சத்யம் கம்ப்யூட்டர்ஸ் ஊழல்: 6 மாத சிறை தண்டனை பெறும் ராமலிங்க ராஜூ....

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஹைதராபாத்: இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் துறையை உழுக்கிய 14,000 கோடி ரூபாய் ஊழல் வழக்கில் சிக்கிய சத்யம் கம்ப்யூட்டர்ஸ் ராமலிங்க ராஜூவிற்கு 6 மாத சிறை தண்டனையை அறிவித்துள்ளது நீதிமன்றம்.

 

அதுமட்டும் அல்லாமல் இவ்வழக்கில் சம்மந்தப்படுத்தபட்ட 11 பேருக்கும் சிறை தண்டனை மற்றும் அபராதங்களும் விதிக்கப்பட்டுள்ளது.

ஊழல் வழக்கும்

ஊழல் வழக்கும்

6 வருடத்திற்கு முன்பு சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தின் முறையற்ற கணக்கு பதிவின் மூலம் பல கோடி ரூபாய் இந்நிறுவனம் மோசடி செய்தது, இதனை கண்டறிந்த கார்பொரேட் அஃபேர்ஸ் அமைச்சகத்தின் தீவிர மோசடி புலனாய்வு அலுவலகம், நிறுவன சட்டங்களின் அடிப்படையில் சுமார் 7 வழக்கு பதிவு செய்தது.

முக்கிய குற்றவாளிகள்

முக்கிய குற்றவாளிகள்

இவ்வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தின் தலைவர் ராமலிங்க ராஜூ மற்றும் நிர்வாக இயக்குனரான இவரது தம்பி ராம் ராஜூ ஆகியோர் இணைக்கப்பட்டனர்.

முதல் தீர்ப்பு
 

முதல் தீர்ப்பு

இவ்வழக்கின் மூதல் தீர்ப்பு திங்கட்கிழமை வந்தது, இதில் ராமலிங்க ராஜூ மற்றும் ராம ராஜுவிற்கு 6 மாத சிறை தண்டனையும், மற்ற 11 பேருக்கு அபராதங்களும் விதிக்கப்பட்டது. இதில் அதிகப்படியான அபராதம் இந்நிறுவனத்தின் இயக்குனரான கிருஷ்னா ஜி.பேல்பூ அவர்களுக்கு 2.66 கோடி ரூபாயை 2 மாதத்திற்குள் நிதிமன்றத்தில் செலுத்துமாறு நீதிபதி அறிவித்துள்ளார்.

7 வழக்குகள்

7 வழக்குகள்

மத்திய அரசு அலுவலகம் தொடுத்த 7 வழக்குகளில், நீதிமன்றம் 1 வழக்கை தள்ளுபடி செய்தது, 2 வழக்குகளுக்கான தீர்ப்பை அபராதமாக அறிவித்தது, மற்ற 4 வழக்கிற்கும் ராஜூ பிரதர்ஸ், முழுநேர இயக்குனரான ராம் மைனம்பாட்டி மற்றும் தலைமை நிதியியல் அதிகாரியான ஸ்ரீநிவாஸ் அவர்களுக்கு நீதிமன்றம் சிறை தண்டனையை அறிவித்தது.

5 இலட்சம் ரூபாய்

5 இலட்சம் ரூபாய்

மேலும் ராஜூ பிரதர்ஸ் மற்றும் கிருஷ்ணா பேல்பூ ஆகியோரை தவிர வழக்கில் சம்பந்தப்படுத்த பட்டுள்ள அனைவருக்கும் 5 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 14,000 கோடி ஊழல் வழக்கில் வெறும் 6 மாத சிறை தண்டனை மற்றும் 5 இலட்சம் அபராதம், மிக அருமையான தீர்ப்பு மக்களே...

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

6 months jail for Raju, 3 others in Satyam case

The first judgement in the Rs.14,000-crore Satyam Computer accounting scandal that shook the corporate world six years ago was delivered by an economic offences court here when it sentenced the then company chairman B. Ramalinga Raju, his brother and managing director B. Rama Raju and two others to six months’ imprisonment.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X