அத கூட விடலையாடா நீங்க?? விற்பனைக்காக புதிய பொருளை அறிமுகம் செய்தது அமேசான்..

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சியாட்டில், அமெரிக்கா: உலகளவில் சில்லறை விற்பனையில் முன்னணி நிறுவனமாக திகழும் அமேசான் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை மேலும் கவர தன்னுடைய நிறுவன தயாரிப்பின் முலமே குழந்தைகளுக்கான டயபரை அறிமுகப்படுத்தியுள்ளது.

 

பெற்றோர்களுக்கு தங்கள் குழந்தைகளுக்குத் தினசரித் தேவைகளை "எவரிடே எசென்ஷியல்ஸ்" என்ற திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்து வருகிறது அமேசான்.

ஆராய்ச்சிக்கு பின் விற்பனை

ஆராய்ச்சிக்கு பின் விற்பனை

இத்திட்டத்தில் அமேசான் நிறுவனத்தால் விரும்பப்படுகிற அல்லது அமேசானின் ஆராய்ச்சி மூலம் நன்கு அங்கீகரிக்கப்பட்ட பொருட்களை வழங்குகிறது. இது குறித்த அமேசானின் அறிவிப்பு டயபர் என்று வெளிப்படையாக சொல்லாவிட்டாலும் அது தற்போது விற்பனையாகிக் கொண்டிருக்கும் டயபரையே குறிப்பதாக உள்ளது. இது அமேசானின் சிறப்பு வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே.

எலிமென்ட்ஸ்

எலிமென்ட்ஸ்

இந்த டயபர்கள் அமேசானுடைய சரக்குகள் என்பதுடன் எலிமென்ட்ஸ் என்ற பெயருடன் வருகின்றன. இவை தரம் வாய்ந்த தயாரிப்பாளர்களிடமிருந்து பாதுகாப்புடன் தயாரிக்கப்பட்டவை என அமேசான் தெரிவித்துள்ளது. இதில் தற்போது தன்னுடைய பிராண்டு அல்லது குறியீட்டுப் பெயர்களை குறிப்பிடுவதில்லை.

பெற்றோர்கள்
 

பெற்றோர்கள்

இந்த திட்டம் சிறப்பு வாய்ந்த தயாரிப்புகளை முக்கிய அம்சங்களுடன் தருவதாகவும் வெளிப்படையான தயாரிப்பு மூலங்களிலிருந்து பெறப்படுவதாகவும் தெரிவிக்கிறது. டயபர் உபயோகம் பெற்றோருக்கு ஒரு பெரிய சுற்று சூழல் மற்றும் சுகாதாரப் பிரச்சனையாக உள்ளது என அமேசான் தெரிவித்துள்ளது.

விலையில் வித்தியாசம்

விலையில் வித்தியாசம்

இந்த அமேசான் டயபர்கள் விலை குறைவில்லை என்றாலும் தன் இணைய தளத்தில் உள்ள மற்ற டயபர்களுக்கு போட்டியான விலையில் விற்கப்படுகிறது. அமேசானின் ஒரு மாதத்திற்கான பாக்கில் சைஸ் 1 எலிமென்ட்ஸ் டயபர் ஒன்றிற்கு 19 செண்டுகள் விலையில் விற்கப்படுகிறது. இதுவே பம்பெர்ஸ் 22 செண்டுகளுக்கு விற்கப்படுகிறது. அதே வேளையில் ஹக்கிஸ் மற்றும் பாம்பெர்ஸ் ஆகியவை 25 அல்லது 26 செண்டுகளுக்கு விற்கும் சைஸ் 4 டயபர்கள் 28 செண்டுகளுக்கு விற்கப்படுகிறது.

அமேசான் மாம்

அமேசான் மாம்

அமேசான் மாம் திட்டத்தில் இணைந்துள்ள வாடிக்கையாளர்களுக்கு அனைத்து ப்ராண்டுகளுக்கும் கூடுதல் தள்ளுபடிகள் உள்ளன.

நிறுவன கைபற்றுதல்

நிறுவன கைபற்றுதல்

அமேசானின் டயபர்களுக்கான பின்னணி சற்று சிக்கலானது. பிரபலமான டயபர்ஸ்.காம் என்ற நிறுவனத்திற்கு எதிராக அதிரடியாக விலைகளைக் குறைத்து தான் விரும்பிய வண்ணம் நெருக்கடிகளைக் கொடுத்து அதனை வாங்க முயற்சிகளை மேற்கொண்டது.

540 மில்லியன் டாலர்

540 மில்லியன் டாலர்

பின்னர் அந்த நிறுவனத்தை அமேசான் 540 மில்லியன் டாலர்களுக்கு வாங்கி அந்த நிறுவனத்தின் வளர்ச்சியைத் தாமதப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா

இந்தியா

மேலும் இதன் விற்பனை இந்தியாவிற்கும் பிற நாடுகளுக்கும் கூடிய விரைவில் கொண்டு வரவும் அமேசான் திட்டமிட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Amazon is selling its own diapers with a farm-to-changing-table concept

Amazon launched a new product line on Thursday aimed at providing consumers with ... diapers.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X