1,800 விமான பயணங்களை ரத்து செய்தது ஸ்பைஸ்ஜெட்!! டிக்கெட் புக்கிங்கிற்கு தடை..

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: சன் நெட்வொர்க் நிறுவனத்தின் தலைவரான கலாநிதி மாறன் அவர்களுக்கு சொந்தமான ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதனால் இந்நிறுவனம் செலவுகளை குறைக்க டிசம்பர் 31 வரை சுமார் 1,800 விமான பயணங்களை ரத்து செய்துள்ளது. ஆதாவது தினமும் 81 விமான பயணங்கள்.

இந்நிறுவனம் ரத்து செய்த விமானங்களில் பெரும்பாலானவை உள்நாட்டு விமானங்ளே, இதில் சில காட்மாண்டுவிற்கு செல்லும் விமானங்களும் அடங்கும்.

புக்கிங் செய்யக்கூடாது

புக்கிங் செய்யக்கூடாது

விமானப் போக்குவரத்து இயக்குநரகம் இந்நிறுவனத்தை அடுத்த ஒரு மாத காலத்திற்கு விமான பயணத்திற்கான டிக்கெட்டை புக் செய்யக்கூடாது என அறிவித்துள்ளது. ஆனால் இந்நிறுவனத்தின் இணைதளத்தின் தகவல் படி அக்டோபர் 24, 2015ஆம் ஆண்டு வரை பயணச் சேவை அளிப்பதாக தெரிவித்துள்ளது.

சென்னை

சென்னை

இந்நிலையில் திங்கட்கிழமை சென்னையில் உள்ள இந்நிறுவன தலமையகத்தில் இந்நிறுவனத்தின் அடுத்தகட்ட முயற்சிகள் மற்றும் வளர்ச்சிக்கான சாத்தியகூறுகளை பற்றி ஆலோசனை செய்ய ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் உயர் மட்ட குழு கூடியது.

உயர் அதிகாரிகள்

உயர் அதிகாரிகள்

நிறுவனத்தின் நிலை மற்றும் அடுத்தகட்ட முயற்சிகளை பற்றி ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் தலைமை நிதியியல் அதிகாரி மற்றும் தலைமை செயல் ஆதிகாரியான சஞ்சீவ் கபூர் ஆகியோர் பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க மறுத்தனர்.

விமான ரத்து

விமான ரத்து

1,800 விமான ரத்து செய்ததை குறித்து சஞ்சீவ் கபூர் கூறுகையில், "அதை கடந்த மாதமே நிர்வாகம் முடிவு செய்திருந்தது தான், இவை புதிதாக எடுக்கப்பட்ட முடிவுகள் கிடையாது. மேலும் இந்நிலை டிசம்பர் மாதம் மட்டுமே நீடிக்கும்." என தெரிவித்தார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Spice Jet cancels 1,800 flights

Kalanithi Maran-owned SpiceJet has cancelled almost 1,800 flights across the country till December 31. On an average 81 flights per day.
Story first published: Tuesday, December 9, 2014, 11:19 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X