"நோ சென்டிமென்ட்" ஒன்லி பிசினஸ்!! முகேஷ் அம்பானி

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: இந்தியாவில் பலதுறை நிறுவனங்களில் முதன்மையான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தனது டெக்ஸ்டைல் வர்த்தகத்தை சீன நிறுவனத்துடன் பங்கு போட்டுள்ளது. இந்நிறுவனத்தை முகேஷ் அம்பானியின் தந்தை திருபாய் அம்பானி முதன் முதலாக உருவாக்கியது என்பது குறிப்பிடதக்கது.

 

இந்திய டெக்ஸ்டைல் துறையின் ஒரு அடையாளமாக இருந்த விமல் பிராண்டு ரிலையன்ஸ் நிறுவனத்துடையது தான்.

வர்த்தக பங்கீடு

வர்த்தக பங்கீடு

ரிலையன்ஸ் நிறுவனம், சீனாவின் ரூயி சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி குரூப் நிறுவனத்திற்கு ரிலையன்ஸ் குழுமத்தின் டெக்ஸ்டைல் வர்த்தகம் மற்றும் விமல் பிராண்டையும் குறிப்பிடப்படாத தொகைக்கு தாரைவார்த்துள்ளது.

சென்டிமென்ட் வேல்யு

சென்டிமென்ட் வேல்யு

விமல் பிராண்டில் வெறும் பிசினஸ் மட்டும் இல்லை, இதில் ஒரு சென்டிமென்ட் வேல்யு உண்டு. இந்தியாவில் முதன் முதலாக பாலியெஸ்டர் துணிகளை நெய்து இந்தியா மட்டும் அல்லாமல் உலக நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்தது ரிலையன்ஸ். இதன் வெற்றியின் காரணமாகவே ரிலையன்ஸ் நிறுவனம் தற்போது 1 இலட்சம் கோடி ரூபாய் சாம்ராஜ்ஜியமாக உருவாகியுள்ளது.

1500 கோடி ரூபாய் பிசின்ஸ்

1500 கோடி ரூபாய் பிசின்ஸ்

இன்றைய நிலையில் இந்நிறுவனத்தின் டெக்ஸ்டைல் பிசின்ஸ், மொத்த நிறுவனத்தின் வர்த்தகத்தை ஒப்பிடுகையில் வெறும் 0.3சதவீதம் தான். இத்துறை நிறுவநத்தின் ஆண்டு வருமானம் 1,500 கோடி ரூபாய் மட்டுமே.

மேம்படுத்தும் திட்டம்
 

மேம்படுத்தும் திட்டம்

ரிலையன்ஸ் குழுமத்தில் இத்துறையை மேம்படுத்த சீன நிறுவனத்துடன் 49:51 என்ற விகிதத்தில் நிறுவனத்தை பங்குப்போட்டுள்ளது. மேலும் இந்த முடிவு 2 வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டதாகவும், சில பல பிரச்சனைகள் காரணமாக கிடப்பில் போடப்பட்டது எனவும் முகேஷ் அம்பானி தெரிவித்தார்.

பிற துறைகளுக்கு முக்கியதுவம்

பிற துறைகளுக்கு முக்கியதுவம்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கடந்த 15 வருடமாக பல புதிய துறைகளில் இறங்கியுள்ளது, குறிப்பாக எண்ணெய், சில்லறை வணிகம், தொலைதொடர்ப்பு என பல. இதனால் இந்நிறுவனத்தின் டெக்ஸ்டைல் துறையில் அதிகளவில் கவனத்தை செலுத்தவில்லை.

பிர்லா

பிர்லா

பொதுவாக நிறுவனத்தின் வர்த்தகத்தை பெருக்கும் போது அதிகம் லாபம் தராத வர்த்தகத்தில் கவனம் குறைவது இயல்பு தான். அதே நிலையை பிர்லா குழுமம் சந்தித்தது, இதனால் பிர்லா குருப் மதுரா கார்மென்ட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தனது டெக்ஸ்டைல் வர்த்தகத்தை சீர்படுத்தியது. இத்தகைய முயற்சி தான் இதுவும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Goodbye, Vimal: Why Mukesh Ambani is selling his father's first major business

Reliance Industries yesterday (9 December) took the first step away from the business that more or less established it as a big business in India: textiles and the Vimal brand.
Story first published: Thursday, December 11, 2014, 13:13 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X