வானில் பறக்க தயாரானது "விஸ்தாரா"!! டாடா - சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்தியாவில் ஏற்கனவே டாடா குழுமத்துடன் இணைந்து ஏர்ஏசியா நிறுவனம் உள்நாட்டு விமான சேவையை லாபகரமான அளித்து வருகிறது. இந்நிலையில் பன்னாட்டு விமான சேவைத் துறையில் இறங்க டாடா குழுமம் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் இணைந்துள்ளது.

இக்கூட்டணி நிறுவனத்திற்கு வானில் பறக்க இறுதிகட்ட ஒப்புதல் நிலுவையில் வைக்கப்பட்டு இருந்தது விமான போக்குவரத்து இயக்குநரகம், இந்த ஒப்புதல் பெற இந்நிறுவனங்கள் சோதனை ஒட்டத்தை நடத்தி வந்தது குறிப்பிடதக்கது. திங்கட்கிழமை இக்கூட்டணிக்கு ஒப்புதல் கிடைத்துள்ளதாக இந்நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஜனவரி 2015

ஜனவரி 2015

விமான சேவைக்கான ஒப்புதல் கிடைத்துள்ள நிலையில் இந்தியாவில் 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தின் ஆரம்பத்தில் விமானச் சேவையை துவங்க உள்ளதாக இந்நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

3வது நிறுவனம்

3வது நிறுவனம்

இந்தியாவில் பல விமான நிறுவனங்கள் செயல்பட்டு வந்தாலும், முழுமையான சேவை அளிக்கும் நிறுவனங்கள் இரண்டு மட்டுமே, அவை ஏர் இந்தியா மற்றும் ஜெட் ஏர்வேஸ். இதை தொடர்ந்து தற்போது இப்பட்டியலில் விஸ்தாரா நிறுவனம் இணைந்துள்ளது.

ஸ்பைஸ்ஜெட்

ஸ்பைஸ்ஜெட்

சன் நெட்வொர்க் நிறுவனத்தின் கலாநிதி மாறன் தலைமை வகிக்கும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் மீண்டு வருவதற்காக போராடும் நிலையில் விஸ்தாரா நிறுவனத்திற்கு ஒப்புதல் கிடைத்துள்ளது. இந்தியாவில் விமான சேவை துவங்க இரண்டு முறை விண்ணப்பித்தும் டாடா நிறுவனத்திற்கு ஒப்புதல் கிடைக்கவில்லை.

புதிய நிறுவனம்

புதிய நிறுவனம்

மேலும் விமான போக்குவரத்து சந்தையில் அனைத்து நிறுவனங்களும் கடுமையான போட்டி சந்தித்துக்கொண்டு இருக்கும் நிலையில் விஸ்தாராவின் செயல்திட்டங்கள் இந்தியாவின் பிற நிறுவனங்களுடன் போட்டி போடும் நிலையில் இருக்க வேண்டும்.

நம்பிக்கை

நம்பிக்கை

விஸ்தாரா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி Phee Teik Yeoh கூறுகையில்,"அடுத்த ஒரு வருட காலத்திற்கு நிறுவனத்தின் அனைத்து செயல்களும் விஸ்தாரா என்னும் பிராண்டை மக்கள் மத்தியில் பிரபலபடுத்தும் விதிமாகவே இருக்கும், மேலும் வாடிக்கையாளர் எதிர்பார்க்கும் அனைத்து விதமான சேவைகளும் சிறப்பான முறையில் அளிக்க நிர்வாகம் தயாராக உள்ளது" என்று தெரிவித்தார்.

20 விமானங்கள்

20 விமானங்கள்

இக்கூட்டணி முதற்கட்டமாக 100 மில்லியன் டாலர் அளவில் முதலீடு செய்ய உள்ளது, இதனைக் கொண்டு அடுத்த 5 வருடங்களில் 20 விமானங்களை வாங்க திட்டமிட்டுள்ளது. இதில் 7 A320 ரக விமானங்கள், 13 A320 ரக விமானங்களை வாங்க திட்டமிட்டுள்ளது.

பயணங்கள்

பயணங்கள்

துவக்கத்தில் வாரத்திற்கு 37 முறை விமான சேவைகளை வழங்க திட்டமிட்டுள்ளது, அடுத்த 4 வருடத்தில் இந்த எண்ணிக்கையை 300 முறையாக உயர்த்த திட்டமிட்டுள்ளது.

டெல்லி தான் தலைமையகம்

டெல்லி தான் தலைமையகம்

மேலும் விஸ்தாரா நிறுவன பிற நிறுவனங்களை போல மும்பை, பெங்களுரூ போன்ற நகரங்களை தேர்ந்தெடுக்காமல், டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்பட உள்ளது. முதலில் விஸ்தாரா மும்பை, கோவா, பெங்களூர், ஹைதெராபாத், அகமதாபாத், ஸ்ரீநகர், சென்னை, டெல்லி மற்றும் பாட்னா போன்ற 9 நகரங்கலுக்கு விமான சேவையை அளிக்கிறது.

ஏர்பஸ் 320

ஏர்பஸ் 320

முதற்கட்டமாக இந்நிறுவனம் ஒரேஒரு ஏர்பஸ் 320 விமானத்தை கொண்டு செயல்பட உள்ளது. அடுத்த சில மாதங்களில் இதை 5ஆக உயர்ந்த திட்டமிட்டுள்ளது விஸ்தாரா.

விஸ்தாரா-வுக்கு போட்டி இவங்கதான்

விஸ்தாரா-வுக்கு போட்டி இவங்கதான்

இந்த புதிய நிறுவனத்திற்கு இத்துறையின் ஜெட் ஏர்வேஸ் மற்றும் ஏர் இந்தியா மிகப்பெரிய போட்டியாக இருக்கும். மேலும் ஜெட் ஏர்வேஸ் அதேநாளில் ஏதிஹாட் நிறுவனத்துடன் இணைந்துள்ளதால் விஸ்தாரா-வுக்கு போட்டு கடுமையாக இருக்கும்.

பங்கீடு

பங்கீடு

இந்த நிறுவனத்தின் டாடா சன்ஸ் நிறுவனம 51 சதவீதமும், மீதமுள்ளவை சிங்கப்பூர் நிறுவனம் வைத்துள்ளது. இந்நிறுவனத்தின் சேவை வருகிற அக்டோபர் மாதத்தில் இருந்து துவங்குகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Vistara receives flying licence, to start operations soon

Air travellers will soon have more choice. The Tata Sons-Singapore Airlines (SIA) joint venture full service airline, Vistara, is all set to take the skies next month.
Story first published: Tuesday, December 16, 2014, 16:10 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X