அரசை ஏமாற்றி 439 பில்லியன் டாலர் பணம் இந்தியாவில் இருந்து வெளியேற்றம்!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வாஷிங்டன்: இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு கடந்த 2003ஆம் ஆண்டில் இருந்து 2012ஆம் ஆண்டு வரையில் சுமார் 439 பில்லியன் டாலர் அதாவது 43,900 கோடி டாலர் முறைகேடான முறையில் வெளியேறியுள்ளது. இதில் 2012ஆம் ஆண்டில் மட்டும் 9,500 கோடி டாலர் வெளிநாடுகளுக்கு முறைகேடாக பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது என குளோபல் பைனாசியல் இன்டகிரிட்டி (GFI) என்ற ஆய்வு மற்றும் ஆலோசனை நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

மேலும் இந்நிறுவனம் 2003-2012ஆம் ஆண்டின் இடைப்பட்ட காலத்தில் முறையற்ற வகையில் பண பரிமாற்றம் செய்ய பல நாடுகளை குறித்த ஆய்வுகளை மேற்கொண்டது இதில் இந்தியா 4வது இடத்தை பிடித்துள்ளது.

முதல் 3 இடங்கள்

முதல் 3 இடங்கள்

இப்பட்டியலில் முதல் 3 இடங்களில் சீன, ரஷ்யா மற்றும் மெக்ஸிக்கோ ஆகிய நாடுகள் உள்ளது. இந்தியாவை அடுத்து மலேசியா 5வது இடத்தை பிடித்துள்ளது.

439 பில்லியன் டாலர்

439 பில்லியன் டாலர்

இத்தொகை இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அளவான 1.87 டிரில்லியன் டாலரில் 23 சதவீதமாகும். இவ்வாறு முறைகேடாக பண பரிமாற்றம் செய்யப்படுவதால், மத்திய அரசுக்கு கிடைக்க வேண்டிய பரிமாற்றக் கட்டணம் மற்றும் வரி பணம் என அனைத்தும் இழப்பு.

வளர்ச்சி
 

வளர்ச்சி

மேலும் இத்தகைய பரிமாற்றத்தின் அளவு ஒவ்வொரு வருடத்திற்கு 9.4 சதவீதம் வளர்ச்சி அடைந்து வருகிறது, இது உலக மொத்த உற்பத்தி அளவை விட இரண்டு மடங்கு அதிகமாகும். இத்தகைய நிலையில் உலக பொருளாதாரத்தின் ஸ்திர தன்மை கண்டிப்பாக பாதிப்புக்குள்ளாகும். எனவே இப்பிரச்சனையை அனைத்து நாட்டு தலைவர்களும் கருத்தில் கொண்டு முக்கிய தீர்வுகளை அளிக்க வேண்டும் என GFI நிறுவனத்தின் தலைவர் ரேமண்டு பேக்கர் தெரிவித்தார்.

இரு முறையில் ஏமாற்றம்

இரு முறையில் ஏமாற்றம்

இத்தகைய முறைகேடான பரிமாற்றத்தை இரு முறையில் நடக்கிறது என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

1. வேண்டுமென்றே வர்த்தக அறிக்கைகளை மாறி அமைப்பது.

2. செலுத்துமதி நிலுவை அறிக்கையில் பொய்யான தகவல்களை அளித்தல்.

சீனா முதல் இடம்

சீனா முதல் இடம்

இத்தகைய முறையில் சீன 1,252 பில்லியன் டாலர் அளவு பணத்தை முறைகேடாக பரிமாற்றம் செய்துள்ளது. அதை தொடர்ந்து ரஷ்யா 974 பில்லியன் டாலர், மெக்ஸிக்கோ 514 பில்லியன் டாலர், இந்தியா 439 பில்லியன் டாலர், மலேசியா 395 பில்லியன் டாலர், கடைசியாக பிரேசில் 217 பில்லியன் டாலர் அளவு பணத்தை வெளிநாடுகளுக்கு பரிமாற்றம் செய்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India exported $94 billion illegal capital in 2012: Study

The total illicit financial outflows from India between 2003 and 2012 were $439 billion —$94.8 billion of that in 2012 alone — shows a study by Global Financial Integrity (GFI), a Washington DC-based research and advisory organisation.
Story first published: Wednesday, December 17, 2014, 13:43 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X