ஸ்பைஸ்ஜெட்: வங்கிகள் கைவிரித்தது.. 5,300 பணியாளர்களின் நிலை கேள்விக்குறி??

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: 2000 கோடி ரூபாய் கடனில் சிக்கித் தவிக்கும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு, தனது தாய் நிறுவனமான சன் குரூப் நிறுவனமே நிதி உதவி அளிக்க முடியாத நிலையில் வங்கிகளை நாடியுள்ளது ஸ்பைஸ்ஜெட்.

 

வங்கிகளும், கிங்பிஷர் ஏர்லைன்ஸ் மூலம் வாங்கிய அடியில் இருந்து இன்னும் மீள முடியாமல் இந்நிறுவனத்திற்கு கடன் அளிக்க நேரடியாகவே மறுத்துவிட்டனர்.

எஸ்பிஐ

எஸ்பிஐ

நாட்டின் மிக்பபெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா நேரடியாகவே இந்நிறுவனத்திற்கு கடன் அளிக்க முடியாது என தெரிவித்து விட்டார்.

இணை அடைமானம்

இணை அடைமானம்

மேலும் மற்றொரு பொதுத்துறை வங்கியின் பெயர் விரும்படாத தலைவர் கூறுகையில், கடன் தொகைக்கான இணை அடைமானமாக சொத்துக்களை அளித்தால் பணத்தை அளித்த நாங்க ரெடி என்று தெரிவித்துள்ளர். ஆனால் இதற்கு ஸ்பைஸ்ஜெட் ஒப்புக் கொள்ளவில்லை.

கடன் மற்றும் நிலுவை தொகை

கடன் மற்றும் நிலுவை தொகை

இன்றைய தேதி வரை இந்நிறுவனத்திற்கு 1,506 கோடி ரூபாய் கடனாகவும், 2,000 கோடி ரூபாய் நிலுவை தொகையும் உள்ளது.

எண்ணெய் விநியோக பிரச்சனை
 

எண்ணெய் விநியோக பிரச்சனை

புதன்கிழமை காலையில் தீடிரென எண்ணெய் நிறுவனங்கள் அனைத்து ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு நிலுவை தொகையை காரணம் காட்டி பெட்ரோல் விநியோகத்தை நிறுத்தியது, இதனால் இந்நிறுவனத்தின் செயல்பாடு முற்றிலும் முடங்கியது. விமான நிலையங்களில் இந்நிறுவனத்தின் வாடிக்கையாளர்கல் கூச்சலிட்டனர்.

இயல்பு நிலைக்கு

இயல்பு நிலைக்கு

நிலுவை தொகையை மொத்தமும் கொடுக்க முடியாத நிலையில், அளிக்கப்போகும் எரிபொருளுக்கு முன்கூட்டிய பணத்தை செலுத்திவிட்டு புதன்கிழமை மாலை 4 மணிக்கு நிறுவனம் இயல்பு நிலைக்கு திரும்பியது.

அது எல்லாம் எங்களை பாதிக்காது...

அது எல்லாம் எங்களை பாதிக்காது...

ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் நிலை இந்திய விமான போக்குவரத்து துறையின் எதிர்காலத்தை பாதிக்கும் அளவிற்கு உள்ளது. ஆனால் இந்தியாவில் செயல்படும் பன்னாட்டு விமான நிறுவனங்கள் இது குறித்து எவ்வித பாதிப்பும் இல்லை என்று நம்பிக்கையுடன் உள்ளனர்.

இந்திய சந்தை

இந்திய சந்தை

இந்தியாவில் விமான போக்குவரத்திற்கு மிகப்பெரிய சந்தை உள்ளது, எனவே ஒரிரு நிறுவனங்கள் முடங்குவதால் மொத்த சந்தையும் கவிழ்ந்துவிடாது என டர்கிஷ் ஏர்லைன்ஸ், ஆஸ்திரிய நிறுவனங்கள், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மற்றும் ஸ்டார் அலையன்ஸ் ஆகிய நிறுவனங்களும் தெரிவித்துள்ளது.

பிற பிரச்சனைகள்

பிற பிரச்சனைகள்

மேலும் மத்திய அரசு இத்துறையில் உள்ள பிற பிரச்சனைகளை களைவதன் மூலம், ஆதாவது அதிகப்படியான விமான நிலையக் கட்டணம், எரிபொருள் கட்டணத்தில் சில தள்ளுபடிகளை செய்தால் இத்துறையின் வளர்ச்சி மேம்படும் எனவும் இந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளனர்.

பணியாளர்களின் நிலை??

பணியாளர்களின் நிலை??

நிறுவனத்தின் நிதியியல் பிரச்சனைகளின் காரணமாக பணியாளர்களின் கடுமையான குழப்பத்திலும், பயத்திலும் உள்ளனர். இந்நிறுவனத்தின் பைலெட்கள் பிற நிறுவனங்களுக்கு தாவி வருகினறனர். இந்நிலையில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் அழகு பொங்கும் பணிபெண்கள் மற்றும் ஆண்களுக்கு பிற நிறுவனங்களில் உடனடியாக வேலை கிடைப்பது மிகவும் கஷ்டம்.

மொத்த பணியாளர்களின் எண்ணிக்கை

மொத்த பணியாளர்களின் எண்ணிக்கை

இந்நிறுவனத்தில் மொத்தம் 5,300 பேர் பணியாற்றி வருகின்றனர், இதில் 400 பைலட், 1,100 பணிப்பெண்கள், நிர்வாகத்தில் 800 பேர் மற்றும் மீதமுள்ளவர்கள் தரை கட்டுப்பாட்டு அதாவது விமான நிலைய அலுவலகம் போன்ற இடங்களில் பணியாற்றி வருகின்றனர். இவர்களின் அனைவரின் நிலையும் தற்போது கேள்விகுறியாகவே உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Panic grips SpiceJet's 5,300 employees

A sense of panic has gripped a majority of SpiceJet's 5,300 employees as the low cost carrier struggles to survive without the oxygen of funds. While prized employees like pilots have left in droves to join other carriers, other staffers are worried about finding jobs elsewhere if the promoter fails to pump in the required funds.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X