5.5% வளர்ச்சியை கண்டிப்பாக எட்டுவோம்!! அரையாண்டு பொருளாதார ஆய்வு அறிக்கை

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் கடந்த சில மாதங்களாக முக்கிய துறைகளில் ஏற்பட்ட திடீர் முன்னேற்றமும், ஏற்றுமதி அதிகரிப்பாலும் நாட்டின் பொருளாதார வளர்ச்சி கடந்த வருடத்தை ஒப்பிடும்போது மிகவும் சிறப்பாகவே உள்ளது. 2013-14ஆம் நிதியாண்டில் நாட்டின் வளர்ச்சி 5 சதவீதமாக முடிவடைந்தது என மத்திய அரசின் அரையாண்டு பொருளாதார ஆய்வு அறிக்கையில் தெரிவித்திருந்தது.

 

வியாழக்கிழமை மதிய வேளையில் நிதியமைச்சகம் நாடாளுமன்றத்தில் அரையாண்டு பொருளாதார ஆய்வு அறிக்கையை தாக்கல் செய்தது.

2014ஆம் நிதியாண்டில் முதல் 6 மாத எட்டிய 5 சதவீத வளர்ச்சி 9 காலாண்டின் வீழ்ச்சியாகும், மத்திய அரசுடன் ரிசர்வ் வங்கியும் இணைந்து நாட்டின் மொத்த விலை பணவீக்கத்தை 6 சதவீதத்திற்கும் குறைவாக வைத்திருக்க கடுமையான செயல்திட்டஙகளை தீட்டி வருகிறது. 2013ஆம் நிதியாண்டில் நாட்டின் வளர்ச்சி 4.8 சதவீதத்திற்கு குறைவான அளவில் பதிவானது.

5.5% வளர்ச்சியை கண்டிப்பாக எட்டுவோம்!! அரையாண்டு பொருளாதார ஆய்வு அறிக்கை

நாட்டின் தங்க இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளை நீக்கினாலும், கச்சா எண்ணெயின் விலை சரிவு நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறையின் வளர்ச்சியை குறைத்துள்ளது.

இதுமட்டும் அல்லாமல் நாட்டின் மிகப்பெரிய பிரச்சனையாக விலை உயர்வும், பணவீக்கத்தையும் குறிப்பிட்டுள்ளது நிதியமைச்சகம். இப்பிரச்சனைகளை களைய நாட்டின் தொழிற்துறை வளர்ச்சி அடைய வேண்டும், பத்திர சந்தையில் அதிகப்படியான முதலீட்டை ஈர்க்க வேண்டும், மேலும் பென்ஷன் திட்டங்களிலும், இன்சூரன்ஸ் திட்டங்களில் முதலீட்டை அதிகரிக்க விதிமுறைகளை எளிமைபடுத்த வேண்டும் என நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தது.

5.5% வளர்ச்சியை கண்டிப்பாக எட்டுவோம்!! அரையாண்டு பொருளாதார ஆய்வு அறிக்கை

கடைசியாக ரூபாயின் மதிப்பை அதிகரித்த அதிகப்படியான டாலர் முதலீட்டை பெற வேண்டும் எனவும் இவ்வறிக்கையில் குறிப்பிட்டு இருந்தது.

மேலும் 2015ஆம் நிதியாண்டின் முடிவில் நாட்டின் வளர்ச்சி கண்டிப்பாக 5.5 சதவீதத்தை எட்டும் எனவும் நிதியமைச்சகம் தெரிவித்து இருந்தது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Mid-year eco review: FY15 can sign out with 5.5% growth

India's economy is expected to grow at around 5.5% in the fiscal year to March 2015, the finance ministry said in a report tabled in Parliament on Friday. The figure is in line with Reserve Bank estimates of GDP growth in FY15. The mid-year review is based on the trend study of receipts and expenditure in relation to the budget at the end of the second quarter of FY2015.
Story first published: Friday, December 19, 2014, 15:07 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X