உலகமயமாக்கலுக்கு பின் நாட்டின் வர்த்தக பற்றாக்குறை 22% உயர்வு!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்தியாவின் பன்னாட்டு வணிகம் 18 மடங்கு உயர்ந்ததுடன் பொருளாதார தாராளமயமாக்கல் அறிமுகப்படுத்தப்பட்ட கடந்த 1991 ஆண்டு முதல் வர்த்தகப் பற்றாக்குறை 22 மடங்காக அதிகரித்தது.

 

நாட்டின் பன்னாட்டு வர்த்தகப் பற்றாக்குறை 1990-91 முதல் (ஏற்றுமதி மற்றும் இறக்குமதி) சராசரி ஆண்டு வளர்ச்சியாக 13.42 சதவிகித வளர்ச்சியை எட்டி 42 பில்லியன் டாலர் என்ற மதிப்பிலிருந்து 765 பில்லியன் டாலராக 2013-14 ஆம் ஆண்டில் அதிகரித்தது.

எனினும் வர்த்தகப் பற்றாக்குறை அதாவது ஏற்றுமதி மற்றும் இறக்குமதி அளவிற்கிடையேயான வேறுபாடு 136 பில்லியன் டாலராக 2013-14 ஆம் ஆண்டில் அதிகரித்தது. இது 1990-91 ஆம் ஆண்டில் 6 பில்லியன் டாலராக இருந்ததாக அதிகாரபூர்வ புள்ளி விவரம் தெரிவிக்கிறது. மேலும் உற்பத்தித் துறையின் வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள தோய்வே இதற்குக் காரணம் என வல்லுனர்கள் தெரிவித்தனர்.

உலகமயமாக்கலுக்கு பின் நாட்டின் வர்த்தக பற்றாக்குறை 22% உயர்வு!!

"இந்தியாவின் உற்பத்தித்துறையின் வளர்ச்சி தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வந்தது. மொத்த உற்பத்தியில் 23-24 சதவிகித்திலிருந்து தற்போது 15 சதவிகிதத்திற்கு இது குறைந்துள்ளது. விரிவடைந்தது வரும் வர்த்தக இடைவெளிக்கு இதுவே காரணமாகும்" என இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பின் (FIEO) பொது இயக்குனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி அஜய் சஹாய் தெரிவித்தார்.

நாட்டின் தாராள வர்த்தக ஒப்பந்தங்களும் வர்த்தக இடைவெளியை பாதித்துள்ளன. பெட்ரோலியப் பொருட்கள் உள்ளிட்ட இறக்குமதி அதிகரிப்பு இந்த வர்த்தக இடைவெளிக்கு முக்கிய பங்கு காரணமாக விளங்குகிறது.

நாட்டின் இந்த வர்த்தக இடைவெளி சீனா, ஆஸ்திரேலிய மற்றும் ஈராக் உள்ளிட்ட நாடுகளுடன் 2012-13 ஆம் ஆண்டில் ஏற்பட்டதாகும்.

கடந்த சில வருடங்களாக உலக பொருளாதார நெருக்கடி, ஐரோப்பாவில் நிலவி வரும் கடன் நெருக்கடி மற்றும் உலகின் வளர்ந்த நாடுகளில் நிலவி வரும் பொருளாதார மந்த நிலை ஆகியவை இந்தியாவின் ஏற்றுமதித் தேவைகளை பெருமளவில் பாதித்துள்ளன.

 
உலகமயமாக்கலுக்கு பின் நாட்டின் வர்த்தக பற்றாக்குறை 22% உயர்வு!!

மேலும், அமெரிக்கா, சிங்கப்பூர், வங்காளதேசம், ஹாங் காங், நெதர்லாந்து, இலங்கை, இங்கிலாந்து, கென்யா, நேபாளம் மற்றும் வியட்னாம் ஆகிய நாடுகளுடனான வர்த்தக சமநிலை 2013-14 சாதகமாக உள்ளது.

அதேவேளையில், 1990-91 ஆம் ஆண்டில், இந்தியாவுடன் ஏற்றுமதியை விட அதிகம் இறக்குமதி செய்த நாடுகளில் ரஷ்யா, ஹாங் காங், வங்கதேசம், தாய்லாந்து, இலங்கை, எகிப்து, மொரிஷியஸ், ஸ்பெயின், ஆப்கானிஸ்தான் மற்றும் நைஜீரியா ஆகியவை அடங்கும்.

நடப்பாண்டின் ஏப்ரல்-நவம்பர் மாதங்களில், இந்திய இறக்குமதி 4.65 சதவிகிதம் உயர்ந்து 316.37 பில்லியன் டாலராகவும், ஏற்றுமதி 5.02 சதவிகிதம் உயர்ந்து 215.75 பில்லியன் டாலராக இருந்தது.

இந்த காலகட்டத்தில் கடந்த ஆண்டில் 96.89 பில்லியன் டாலராக இருந்த வர்த்தகப் பற்றாக்குறை நடப்பாண்டில் 100.61 பில்லியன் டாலராக இருந்தது.

உயர் வர்த்தகப் பற்றாக்குறை நாணய மதிப்பினையும் அந்நிய செலாவணி இருப்பையும் பாதிப்பது நாமறிந்த ஒன்றே. மோடி நம்மையெல்லாம் காப்பாத்துவாரா? வெயிட் பண்ணி பார்ப்போம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India's trade deficit jumps 22 times since 1990-91

India's foreign trade rose over 18 times since the launch of economic liberalisation programme in 1991 while the trade deficit widened by more than 22 times.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X