கோலாலம்பூர்: இன்தோனேஷியாவின் சுராபாயா நகர விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் புறப்பட்டு சென்ற ஏர்ஏசியா விமானம் மாயமானது. இதன் எதிரோலியாக ஏர் ஏசியா நிறுவனத்தின் பங்குகள் சுமார் 7.8 சதவீதம் சரிந்துள்ளது.
இச்சம்பவத்தினால் விமான பயணிகள் ஏர்ஏசியா விமான நிறுவனத்தின் சேவையை பெற தங்குகின்றனர். மேலும் இந்நிறுவனத்தின் பங்கு வர்த்தகம் அதிகளவில் குறைந்துள்ளது.

மேலும் இந்நிறுவனத்தின் வருடாந்திர லாபம் சுமார் 5 சதவீதம் வரை குறையும் என கோலாலம்பூர் தலைமையிடமாக கொண்ட ஒரு முதலீட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. அதுமட்டும் இல்லாமல் கோலாலம்பூர் சந்தையில் இந்நிறுவனத்திற்கு இருந்த "BUY" தகுதி தற்போது "sell" ஆக குறைந்துள்ளது.
இதன் மூலம் பங்குசந்தை வர்த்தகர்கள் தங்களிடம் இருந்த ஏர்ஏசியா பங்கு இருப்பை தொடர்ந்து குறைந்து வருகின்றனர். மேலும் இன்று காலை வர்த்தக துவக்கத்தில் இதன் பங்கு விலை சுமார் 12.9 சதவீதம் சரிவை சந்தித்தது குறிப்பிடதக்கது.
இந்தியாவில் இந்நிறுவனம் டாடா குழுமத்துடன் இணைந்து உள்நாட்டு பயணிகள் விமான போக்குவரத்து சேவைகளை அளித்து வருகிறது.


Click it and Unblock the Notifications