2024ஆம் ஆண்டில் இந்தியா தான் உலகின் 3வது பொருளாதார நாடு!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கோலாலம்பூர்: உலகளாவிய பொருளாதாரம் மற்றும் வர்த்தக ஆய்வு மையமான Cebr's அமைப்பு வெளியிட்ட ஆய்வு அறிக்கையில் இந்தியாவின் வளர்ச்சி இனி யாராலும் தடுக்க முடியாது என்றும், 2018ஆம் ஆண்டில் காமன்வெல்த் நாடுகளில் பிரட்டனை பின்னுக்கு தள்ளி இந்தியா முதன்மையான பொருளாதார நாடாகவும், 2024ஆம் ஆண்டில் அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தப்படியாக இந்தியா இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.

 

பிரட்டன்

பிரட்டன்

மேலும் பிரட்டன் தற்போது பிரான்ஸ் நாட்டை பின்னுக்கு தள்ளி 5வது மிகப்பெரிய பொருளாதார நாடாக உள்ளது, 2030ஆம் வருடத்தில் பிரட்டன், ஜெர்மனியையும் பின்னுக்கு தள்ளும் என ஆய்வுகள் தெரிவிக்கிறது.

ஜெர்மனி

ஜெர்மனி

யூரோ நாணயத்தின் மதிப்பு குறைந்ததாலும், மக்கள் தொகை குறைந்ததாலும் ஜெர்மனி நாட்டின் வளர்ச்சி தொடர்ந்து சரிய துவங்கியுள்ளது. இதன்மூலம் 1954ஆம் ஆண்டுக்கு பின் முதல் முறையாக ஜெர்மனியை பிரட்டன் பின்னுக்கு தள்ளுகிறது.

கடுமையான போட்டி

கடுமையான போட்டி

தற்போது இருக்கும் நிலையில் பிரான்ஸ் மற்றும் பிரட்டன் நாட்டிற்கு மத்தியில் கடுமையான போட்டி நிலவி வருகிறது. இரு நாடுகளின் உள்நாட்டு உற்பத்தியில் குறைவான அளவிலேயே வித்தியாசம் உள்ளது. பிரட்டன் நாட்டின் ஜிடிபி 2,828 பில்லியன் அமெரிக்க டாலர், பிரான்ஸ் நாட்டின் ஜிடிபி 2,827 பில்லியன் அமெரிக்க டாலர் மட்டுமே.

டாப் 10
 

டாப் 10

மேலும் Cebr's Global அமைப்பின் ஆய்வில் 2014ஆம் ஆண்டில் உள்ள நிலவரத்தின் உலகின் டாப் 10 பொருளாதார நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்திலும், அதனை தொடர்ந்து சீனா, ஜப்பான், ஜெர்மனி, பிரட்டன், பிரான்ஸ், பிரேசிஸ், இத்தாலி, இந்தியா மற்றும் ரஷ்யா என்ற நிலையில் உள்ளது.

2030இல் எப்படி இருக்கும்..

2030இல் எப்படி இருக்கும்..

உலக பொருளாதார கணிப்புகளின் படி 2030ஆம் ஆண்டில் அமெரிக்காவின் ஆதிக்கத்தை அடக்கி, சீன முதல் இடத்திலும், அதனை தொடர்ந்து அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், பிரேசில், பிரட்டன், ஜெர்மனி, தென் கொரியா, பிரான்ஸ் மற்றும் ரஷ்யா என்ற நிலையில் இருக்கும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India largest in Commonwealth by 2018, 3rd in world by 2024

The latest edition of Cebr Global’s World Economic League Table (WELT) will see the “unstoppable” rise of India as it surpasses Britain to become the largest economy in the Commonwealth in 2018 and the third largest economy in the world by 2024, according to a new global league table reported by the Press Association.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X