ஐஐடி மாணவர்களை ஈர்க்கும் இ-காமர்ஸ் துறை!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: இந்தியாவில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் துறைகளில் ஒன்றான இ-காமர்ஸ் துறையில் அடுத்த 3 வருடங்களில் நிறுவனத்தின் உயர் மட்ட குழுக்களில் மட்டும் சுமார் 50,000 பணியிடங்கள் உருவாகும் என வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ஒரு ஆட்சேர்ப்பு நிறுவனம் ஒன்று செய்த ஆய்வில் ஐஐடி கல்லூரிகளில் இருந்து வெளியேறும் பட்டதாரிகளில் ஒன்பதில் ஒருவர் இ-காமர்ஸ் துறையில் சேர்கின்றனர் என தெரிவித்துள்ளது.

 

இந்தியாவில் இத்துறையின் வளர்ச்சி மிகவும் ஆரம்பகட்டத்தில் உள்ளதால் ஐஐடி மாணவர்கள் மிகவும் ஆர்வத்துடன் இத்துறை நிறுவணங்களில் இணைந்துக்கொள்கின்றனர். அதுமட்டும் அல்லாமல் பல ஐஐடி மாணவர் Startup எனப்படும் புதிதாக துவங்கப்பட்ட நிறுவனங்களிலும் ஆர்வமுடன் இணைந்து வருவதாக இந்த ஆட்சேர்ப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

2015ஆம் ஆண்டின் முதல் காலாண்டு

2015ஆம் ஆண்டின் முதல் காலாண்டு

2015ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் மட்டும் இ-காமர்ஸ் துறையில் உயர்மட்ட நிலையில் சுமார் 1000 பணியாளர்களை சேர்க்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இத்துறையின் மூலம் இந்தியாவில் மறைமுகமாக பல இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது.

சம்பளம்

சம்பளம்

மேலும் இ-காமர்ஸ் துறையில் இணையும் புதிய பட்டதாரிகளின் சம்பளம் சுமார் 40 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது, ஆதாவது 10 இலட்சம் முதல் 23 இலட்சம் வரை அதிகரித்துள்ளது.

அட்சேர்ப்பு 100% அதிகரிப்பு

அட்சேர்ப்பு 100% அதிகரிப்பு

இத்துறையின் ஜாம்பவான் என போற்றப்படும், பிளிப்கார்ட், ஸ்னாப்டீல், அமேசான், மேக்-மை-டிரிப், கோ இபிபோ, புக்-மை-ஷோ மற்றும் பேஸ்புக் இந்தியா போன்ற நிறுவனங்களில் அட்சேர்ப்பு எண்ணிக்கையை கடந்த வருடத்தை ஒப்பிடும்போது சுமார் 100 சதவீதம் அதிகரித்ததுள்ளது.

இ-காமர்ஸ்
 

இ-காமர்ஸ்

இந்திய இ-காமர்ஸ் சந்தையின் மதிப்பு மட்டும் சுமார் 18 பில்லியன் டாலராகும். மேலும் இத்துறை குறித்து மனுசிஸ் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் தலைவர் ராஜூவ் குமார் கூறுகையில், மத்திய அரசின் செயல்திட்டங்கள் மூலம் இத்துறையின் வளர்ச்சி நாங்கள் கணித்தைவிடவும் வேகமாக வளர்ந்து வருகிறது, இதற்கு துணையாக மொபைல் வர்த்தகம் மற்றும் சமுக வளைதளங்கள் அதிகளவில் உதவுகிறது என அவர் தெரிவித்துள்ளார்.

போட்டி

போட்டி

மேலும் இத்துறையில் கடந்த 6 மாதகாலங்களில் பல புதிய நிறுவனங்கள் களத்தில் குதித்துள்ளது. இந்நிலையில் தற்போது இந்தியாவின் பெரு நிறுவனங்களான ரிலையன்ஸ், ஆதித்தியா பிர்லா, டாடா, பியூச்சர் குரூப் மற்றும் அரவிந்த் ரிடைல் போன்ற நிறுவனங்களும் இணைந்துள்ளது.

பன்னாட்டு நிறுவனங்கள்

பன்னாட்டு நிறுவனங்கள்

இந்திய நிறுவனங்கள் மட்டும் அல்லாமல் பன்னாட்டு நிறுவனங்களான அமேசான், ராகுட்டன் மற்றும் அலிபாபா போன்ற நிறுவனங்களும் இந்திய சந்தையை கைபற்ற தங்களது கிளைகள் மற்றும் வர்த்தக நிலையை விரிவாக்கம் செய்து வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

E-commerce hiring set for takeoff; 50,000 jobs likely in 2-3 years

At least one in every nine students graduating from the 2015 batch across IITs is likely to join an e-commerce firm or a start-up, according to recruiters.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X