சோலார் பேனல் அமைக்க வீட்டுக் கடனில் புதிய சலுகை!! நிதியமைச்சகம் அறிவிப்பு..

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்தியாவில் சோலார் மின்சார உற்பத்தியை அதிகரிக்கும் நோக்குடன் மத்திய அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது, இதன் ஒரு பகுதியாக பொதுத்துறை வங்கிகளில் பெறப்படும் வீட்டுக் கடன் மற்றும் வீட்டு மேம்பாட்டு கடன்களில் இனி சோலார் பேனல்கள் அமைப்பதற்கு தனியாக ஒரு தொகை நிர்ணயம் செய்யலாம் என மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.

இதன் மூலம் இனி வீட்டு கடன் பெறும் அனைவரும் தங்களின் புதிய வீட்டில் சோலார் பேனல்களை அமைப்பதற்காக ஒரு குறிப்பிட்ட தொகையை நிர்ணயம் செய்து விண்ணப்பத்தை வங்கிகளில் சமர்ப்பிக்கலாம். இதற்கான ஒப்புதலை பொதுத்துறை வங்கிகள் கண்டிப்பாக அளிக்கும்.

இதற்கான அறிவிப்பை மத்திய நிதியமைச்சகம் பொதுத்துறை வங்கிகளில் கூட்டமைப்புக்கு அளித்துள்ளது.

மலிவு விலை மின்சாரம்

மலிவு விலை மின்சாரம்

வீடுகளில் அமைக்கப்படும் Rooftop solar plants மூலம் சுற்றுச்சூழலுக்கு பாதிக்காத வகையில், மிகவும் குறைந்த விலையில் மின்சாரம் தயாரிக்கலாம். மத்திய அரசு மானியங்கள் எதுவும் இல்லாமல் ஒரு கிலோவாட் மின்சாரம் வெறும் 7 ரூபாய் என்ற விலையில் மின்சாரம் தயாரிக்கலாம். சோலார் மின்சார உற்பத்திக்கு மத்திய அரசு தற்போது 15 சதவீத மானியங்களை அளிக்கிறது.

பொதுத்துறை வங்கிகள்

பொதுத்துறை வங்கிகள்

நிதியமைச்சகத்தின் அறிவிப்பை ஏற்று பொதுத்துறை வங்கிகள் வாடிக்கையாளர்களை, சோலார் பேனல் அமைக்க கடன் பெறும் அனைவரும் Ministry of New and Renewable Energy ஒப்புதல் பெற்ற கேன்வாஸ் சோலார் போட்டோவோல்டாயிக் ( canvass solar PVs (photovoltaic)) பயன்படுத்துமாறும் அறிவுறுத்தியுள்ளது.

8 வங்கிகள்

8 வங்கிகள்

தற்போது இத்திட்டத்தை 8 வங்கிகளில் அமல்படுத்தி உள்ளனர்- இதில் பாங்க் ஆஃப் இந்தியா, சிண்டிகேட் வங்கி, ஸ்டேட பாங்க் ஆஃப் இந்தியா, தேனா வங்கி, சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் வங்கி, அலகாபாத் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகியன அடக்கம்.

இந்திரா பத்மினி

இந்திரா பத்மினி

இதுகுறித்து இந்நிறுவனத்தின் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் தலைவர் இந்திரா பத்மினி கூறுகையில்,"எங்களது வங்கி மத்திய அரசின் அறிவிப்பிற்கு முன்னேறே சூரிய திட்டத்தின் மூலம் சோலார் பேனல்களை அமைப்பதற்கு 10 இலட்சம் வரை கடன்களை அளித்து வருகிறோம்" என தெரிவித்தார்.

முன்னணி நிறுவனங்கள்

முன்னணி நிறுவனங்கள்

சோலார் பேனல் உற்பத்தி மற்றும் விற்பனையில் இந்தியாவில் சில நிறுவனங்களை முன்னணியாக திகழ்கிறது, அவை பிரிட்ஜ் டூ இந்தியா, டாடா பவர் சோலார் மற்றும் சு-கேம் பவர் சிஸ்டம்ஸ் ஆகியவை அடங்கும்.

112 மெகாவாட்

112 மெகாவாட்

இந்தியாவில் இன்றைய நாள் முதல் வீடுகளில் அமைக்கப்பட்ட சோலார் பேனல்கள் மூலம் வெறும் 112 மெகாவாட் மின்சாரம் மட்டுமே தயாரிக்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

PSBs to accept solar rooftop cost as part of home loan proposals

Public sector banks (PSBs) are to accept rooftop solar installation cost as part of home loan or home improvement proposals of individual customers.
Story first published: Tuesday, January 6, 2015, 12:01 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X