ஹெச்சிஎல் பணியாளர்களுக்கு அடித்தது ஜாக்பாட்!! பென்ஸ் கார் முதல் ஃபாரின் டூர் வரை...

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: இந்தியாவில் தற்போது முன்னணி சாப்ட்வேர் நிறுவனங்கள் (டிசிஎஸ்) தங்களின் பணியாளர்களை விட்டிற்கு அனுப்பி கொண்டு இருக்கும் வேலையில் ஹெச்சிஎல் நிறுவனம் 2014ஆம் ஆண்டில் நிறுவன வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றிய 130 பணியாளர்களை பாராட்டும் வகையில் மெர்சிடிஸ் பென்ஸ் கார் அல்லது குடும்பம் மற்றும் நன்பர்களுடனான இலவச வெளிநாடு சுற்றுலா என அசத்தலான ஆஃபர்களை அளித்துள்ளது.

 

இதுக்குறித்து ஹெச்சிஎல் டெக்னலாஜிஸ் நிறுவனத்தின் மனித வளப்பிரிவின் தலைவர் பிருத்வி ஸ்ரீகில் கூறுகையில், "பணியாளர்கள் சேவையை பாராட்டும் வகையிலும், அவர்களை மகிழ்விக்கும் வகையிலும் நிர்வாகம் இத்தகைய சலுகையை வழங்கியுள்ளது." என அவர் தெரிவித்தார்.

பணம் எல்லாம் பழைய டிரென்டு பாஸ்

பணம் எல்லாம் பழைய டிரென்டு பாஸ்

பொதுவாக நிறுவனங்களில் பாராட்ட வேண்டும் என்றால் ஒரு சிறு தொகையை கொடுத்து வையை அடைத்துவிடுவார்கள், ஆனால் இப்போது டிரென்டு மாறியுள்ளது. தற்போது எல்லாம் கார், ஆடம்பரமான இன்பச் சுற்றுலா மற்றும் விலை உயர்ந்தை பொருட்களை பரிசாக அளிக்கின்றனர்.

பிற நிறுவனங்கள்

பிற நிறுவனங்கள்

இத்தகைய முறையை ஹெச்சிஎல் நிறுவனம் மட்டும் அல்லாமல் ஏயான் ஹெவிட் இந்தியா, டெலாய்ட், தீ ஹெட் ஹன்டர்ஸ் போன்ற பல நிறுவனங்கள் இத்தகைய முறையை கையாழுகிறது.

இரண்டு வருடங்கள்

இரண்டு வருடங்கள்

இந்நிறவனம் கடந்த இரண்டு வருடமாக இத்தகைய முறையை கையாண்டு வருகிறது, இதில் 200 பணியார்கள் வரை இத்தகைய சலுகையை பெற்றுள்ளனர். 70 பணியாளர்கள் பென்ஸ் கார்களை பெற்றுள்ளது குறிப்பிடதக்கது. இந்த வருடம் பரிசு பெறுபவர்களின் எண்ணிக்கை 130ஆக உயர்ந்துள்ளது.

மொத்த பணியாளர்கள்
 

மொத்த பணியாளர்கள்

இந்நிறுவனத்தில் மொத்தம் 95,522 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

டிசிஎஸ்

டிசிஎஸ்

நாட்டின் முதன்மையான மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான டிசிஎஸ் நிறுவனம் ஆட்குறைப்பில் ஈடுப்பட்டுள்ளபோது ஹெச்சிஎல் நிறுவனத்தின் இச்செயல் இத்துறை பணியாளர்களை கவர்ந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

HCL rewards 130 top performers by offering them a paid holiday abroad with family or a Mercedes

Around 130 of the top performers of HCL can either drive home a Mercedes or take their family and friends on an all-expenses-paid international or domestic holiday as a reward for their contribution to the company.
Story first published: Wednesday, January 7, 2015, 15:50 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X