"30 நாட்களுக்குள் இடத்தை காலி செய்ய வேண்டும்".. டிசிஎஸ் பணியாளர்களுக்கு பிங்க் ஸ்லீப்

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: "மிகுந்த வருத்தத்துடன் தெரிவிக்கிறோம், உங்களது சேவை இனி எங்களது நிறுவனத்திற்கு தேவையில்லை. இந்த கடிதம் கிடைத்த 30 நாட்களுக்குள் நீங்கள் நிறுவனத்தை விட்டு வெளியேற வேண்டும்". என்ன ஒன்னுமே புரியலையா??? இது தான் 1000க்கணக்கான டிசிஎஸ் பணியாளர்களுக்கு வந்த கடிதம் (பிங்க் ஸ்லிப்).

 

கடந்த 3 வார காலத்தில் இந்நிறுவனம் தனது 1000த்திற்கும் அதிகமான பணியாளர்களுக்கு பிங்க் ஸ்லீப் வாரி வழங்கியுள்ளது, இதனால் இந்நிறுவனத்தில் பணியாற்றும் 3 இலட்சம் பணியாளர்கள் மட்டும் அல்லாமல், இந்தியாவில் இருக்கும் அனைத்து ஐடி பணியாளர்களுக்கும் வயிற்றில் புளியை கரைத்துள்ளது.

(பணி நீக்கத்தை எதிர்த்து இணையதளத்தில் போராட்டம்!! டிசிஎஸ் ஊழியர்கள்)

கூட்டு முயற்சி

கூட்டு முயற்சி

டிசிஸ் நிறுவனத்தின் ஆட்குறைப்பு செய்தால் இந்தியாவில் பிற நிறுவனங்களிலும், இதேபோன்ற நிலை பின்தொடரும் என்று உணர்ந்த ஐடி பணியாளர்கள். அனைத்து நிறுவனங்களிலும், பணியாளர்கள் மத்தியில் ஒரு கூட்டணியை உருவாக்கி ஆட்குறைப்பு நடவடிக்கையை எதிர்க்க தயாராகி உள்ளனர்.

சிஐடியு

சிஐடியு

இந்தியாவில் ஐடித் துறை கால்பதித்து 20 வருடங்கள் ஆன நிலையில், இத்துறை பணியாளர்கள் எந்த ஒரு யூனியன்களிலும் இணைந்ததில்லை. ஆனால் டிசிஎஸ் நிறுவனத்தின் ஆட்குறைப்பு திட்டம் இந்திய ஐடி பணியாளர்களை ஒன்று சேர்த்துள்ளது என சிஐடியு யூனியன் உடன் இணைந்த அசோசியேஷன் ஆஃப் ஐடி எம்பிளாயிஸ் (AITE) அமைப்பின் தலைவர் ஜெயன் தெரிவித்தார்.

சென்னையின் FITE

சென்னையின் FITE

டிசிஎஸ் பணியாளர்களின் ஆட்குறைப்பை எதிர்த்து முதன் முறையாக சென்னையில் FITE அமைப்பு தோன்றியது இதன் எழுச்சியே பிற அமைப்புகள் உருவாக காரணமாக அமைந்தது குறிப்பிடதக்கது.

25,000 பணியாளர்கள்
 

25,000 பணியாளர்கள்

டிசிஎஸ் நிறுவனம் வெளியேற்றும் பணியாளர்கள் அனைவரும் 8 முதல் 10 வருட அனுபவம் உள்ளவர்கள், இவர்களை தகுதியற்றவர் என்று ஒரு நிறுவனத்தை விட்டு வெளியேற்றிவிட்டால் பிற நிறுவனங்களில் இணைவது ஒரு கனவாக தான் இருக்கும் என FITE அமைப்பின் பாரதிதாசன் தெரிவித்துள்ளார்.

செலவுகள் குறைப்பு

செலவுகள் குறைப்பு

மேலும் இந்த 25,000 பணியிடங்களை புதிய பணியாளர்கள் ஆதாவது பிரஷ்ஷர்களை கொண்டு நிரப்ப டிசிஎஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் இந்நிறுவனம் சுமார் 80,000 கோடி ரூபாய் சேமிக்க முடியும்.

4,000 பணியாளர்கள்

4,000 பணியாளர்கள்

டிசிஎஸ் நிர்வாகத்தின் தகவல் படி இதுநாள் வரை 4000 பணியாளர்களுக்கு பிங்க் ஸ்லிப் கொடுத்ததாக அறிவித்துள்ளது. பிப்ரவரி மாதம் முடிவிற்குள் இப்பணி முழுமையாக முடிவடையும் எனவும் தெரிவித்துள்ளது. ஆயிரம் அமைப்புகளை அமைத்தாலும், இவர்களை அடக்க முடியாது போல...

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

TCS pink slips: techies scramble to unionise

This ‘ pink slip’ received by hundreds of software professionals working for IT giant Tata Consultancy Services in the past three weeks has kindled an urge in IT employees across the country to unionise.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X