ஃபிக்சட் டெப்பாசிட்களுக்கு அதிக வட்டி அளிக்கும் வங்கிகள்..

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: பிப்ரவரி மாத துவக்கத்தில் ரிசர்வ் பாங்க் ஆஃப் இந்தியாவின் உயர் அதிகாரிகள் நிதி சார்ந்த கொள்கை மறுசீரமைப்பு பற்றி ஆலோசிக்க சந்திக்கவுள்ளனர். WPI பணவீக்கம் பூஜ்யத்தை அடைந்துள்ளதால் வட்டி விகிதம் குறைக்கப்படும் என நம்பப்படுகிறது.

 

இந்நிலையில் கூடுதல் வட்டியளிக்கும் டெபாசிட்களில் உங்கள் பணத்தை முதலீடு செய்ய வேண்டுமானால், இதுவே சரியான நேரமாகும். அதிகமான வட்டி விகிதங்களை அளிக்கும் சில அரசாங்க டெபாசிட்களை உங்களுக்காக நாங்கள் தேர்ந்தெடுத்துள்ளோம்.

உதாரணமாக 1 வருடம் 6 மாத கால கட்டத்திற்கு, காலாண்டு கூட்டு வட்டி கணக்கிட்டு அடிப்படியில், ரூ. 50,000/- டெபாசிட் தொகையை செய்வதாக எடுத்துக்கொள்வோம். இதற்கு எந்த வங்கி எவ்வளவு வட்டி கிடைக்கும் என்பதை இப்போ பார்போம்.

9.00% வட்டி விகிதம்

9.00% வட்டி விகிதம்

சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா, தேனா பாங்க், பஞ்சாப் நேஷனல் பாங்க் மற்றும் ஸ்டேட் பாங்க் ஆஃப் மைசூர் ஆகிய வங்கிகள் அனைத்தும் அதிகமான வட்டி விகிதமாக 9.0% அளிக்கிறது. இந்திய பிரஜைகளுக்கு, 1 வருடம் 6 மாத கால கட்டத்திற்கு, ரூ. 50,000/- டெபாசிட் தொகைக்கு, காலாண்டுக்கு ஒரு முறை கூட்டு முறையில் கணக்கிடப்படும் 9.0% வட்டி விகிதத்திற்கு, முதிர்வு தொகையாக ரூ.57,106/- கிடைக்கும்.

8.95% வட்டி விகிதம்

8.95% வட்டி விகிதம்

யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா 8.95% வட்டி விகிதத்தை அளிக்கிறது. இந்த வட்டி விகிதத்திற்கு, 1 வருடம் 6 மாத கால கட்டத்திற்கு, ரூ. 50,000/- டெபாசிட் தொகைக்கு முதிர்வு தொகையாக ரூ.56,983/- கிடைக்கும்.

8.75% வட்டி விகிதம்
 

8.75% வட்டி விகிதம்

அலஹாபாத் பாங்க், பாங்க் ஆஃப் இந்தியா, பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா, கார்ப்பரேஷன் பாங்க், ஸ்டேட் பாங்க் ஆஃப் திருவாங்கூர், UCO பாங்க் ஆகிய வங்கிகள் 8.75% வட்டி விகிதத்தை அளிக்கிறது. இந்திய பிரஜைகளுக்கு, 1 வருடம் 6 மாத கால கட்டத்திற்கு, ரூ. 50,000/- டெபாசிட் தொகைக்கு, காலாண்டுக்கு ஒரு முறை கூட்டு முறையில் கணக்கிடப்படும் 8.75% வட்டி விகிதத்திற்கு, முதிர்வு தொகையாக ரூ.56,898/- கிடைக்கும்.

9% வட்டி விகிதம்

9% வட்டி விகிதம்

கனரா பாங்க் 9% வட்டி விகிதத்தை அளிக்கிறது. இந்திய பிரஜைகளுக்கு, 1 வருடம் 6 மாத கால கட்டத்திற்கு, ரூ. 50,000/- டெபாசிட் தொகைக்கு, ஆண்டுக்கு ஒரு முறை கூட்டு முறையில் கணக்கிடப்படும் 9% வட்டி விகிதத்திற்கு, முதிர்வு தொகையாக ரூ.56,866/- கிடைக்கும்.

8.5% வட்டி விகிதம்

8.5% வட்டி விகிதம்

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா மற்றும் சிண்டிகேட் பாங்க் 8.5% வட்டி விகிதத்தை அளிக்கிறது. இந்திய பிரஜைகளுக்கு, 1 வருடம் 6 மாத கால கட்டத்திற்கு, ரூ. 50,000/- டெபாசிட் தொகைக்கு, ஆண்டுக்கு ஒரு முறை கூட்டு முறையில் கணக்கிடப்படும் 8.5% வட்டி விகிதத்திற்கு, முதிர்வு தொகையாக ரூ.56,691/- கிடைக்கும்.

8.5% வட்டி விகிதம்

8.5% வட்டி விகிதம்

யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா ஆண்டுதோறும் கூட்டு முறையில் கணக்கிடப்படும் 8.5% வட்டி விகிதத்தை அளிக்கிறது. இந்திய பிரஜைகளுக்கு, 1 வருடம் 6 மாத கால கட்டத்திற்கு, ரூ. 50,000/- டெபாசிட் தொகைக்கு, ஆண்டுக்கு ஒரு முறை கூட்டு முறையில் கணக்கிடப்படும் 8.5% வட்டி விகிதத்திற்கு, முதிர்வு தொகையாக ரூ.56,477/- கிடைக்கும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Highest Interest Rates on Fixed Deposits offered by Government Banks in India

The Reserve Bank of India officials are slated to meet in early Feb to decide on the Monetary policy. It is widely believed that interest rates would be cut for sure as WPI inflation has now reached zero. If you want to block money in high interest bearing deposits now is the right time.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X