முதலீட்டாளர்கள் கிடைத்துவிட்டனர்!! மகிழ்ச்சியில் ஸ்பைஸ்ஜெட்...

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: நிதிநெருக்கடியில் சிக்கித் தவிக்கும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு வருகிற சனிக்கிழமையன்று குறிப்பிடதக்க அளவிலான முதலீடு கிடைப்பதாகவும், அடுத்த ஒரு மாதத்தில் நிறுவனத்தை முழுமையாக மீட்டெடுக்கும் வகையில் முதலீட்டாளர்கள் கிடைத்திவடுவார்கள் என ஸ்பைஸ்ஜெட் நிர்வாகம், விமான போக்குவரத்து அமைச்சகத்திற்கு தகவல் அளித்துள்ளது.

 

ஆனால் ஸ்பைஸ்ஜெட் நிர்வாகம் சனிக்கிழமை மற்றும் இம்மாதம் இறுதியில் பெறப்போகும் முதலீட்டின் அளவு பற்றியும் முதலீட்டாளர்கள் பற்றியும் எந்தவிதமான தகவல்களையும் அளிக்கிவில்லை. மேலும் சந்தையில் விட்ட இடத்தை மீண்டும் பிடிப்போம் என அமைச்சகத்திற்கு ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

வங்கி உத்திரவாதம்

வங்கி உத்திரவாதம்

மேலும் விமான போக்குவரத்து அமைச்சகம், ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திடம் நிலுவை தொகை வைத்துள்ள நிறுவனங்களுக்கான வங்கி உத்திரவாதம் அளிக்க வேண்டியுள்ளது, இல்லை என்றால் முதலீடு கிடைத்தாலும் நிறுவனம் முழுமையாக செயல்பட தடைகளாக இருக்கும் என எச்சரித்துள்ளது.

மீண்டும் வருவோம்..

மீண்டும் வருவோம்..

அதுவரை இந்நிறுவனத்தின் நிலுவை தொகையை குறைக்க குறிப்பிடதக்க அளவில் நிதியை திரட்டியுள்ளது இதனால் நிறுவனம் மீண்டும் சிறப்பாக செயல்படும். இந்நிறுவனம் தற்போது தினமும் 200 விமான பயணங்களை நடத்திவருகிறது என ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

345 விமான பயணங்கள்

345 விமான பயணங்கள்

கடந்த ஜூலை மாதம் வரை இந்நிறுவனம் தினமும் 345 விமானங்களை இயக்கி வந்தது, நிதிநெருக்கடி காரணமாக இந்நிறுவனம் தனது சேவையை பாதியாக குறைத்துள்ளது.

15 கோடி ரூபாய்
 

15 கோடி ரூபாய்

எரிபொருள் விநியோக தடைக்கு பின் இந்நிறுவனம் 15 கோடி ரூபாய் மதிப்பிலான நிலுவை தொகையை குறைத்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

SpiceJet may get funding in a day

Cash-strapped budget airline SpiceJet has assured the Civil Aviation Ministry that it will get some fund infusion by Saturday and should have an investor lined up within a month, government sources said.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X