10,851 கார்களை விற்று புதிய சாதனை படைத்த ஆடி!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: ஜெர்மனியின் சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான ஆடி, தனது இந்திய வர்த்தகத்தில் 10,851 கார்களை விற்று புதிய சாதனை படைத்துள்ளதாக வியாழக்கிழமை அறிவித்துள்ளது.

இந்த விற்பனை அளவு 2013 ஆம் ஆண்டை ஒப்பிடுகளையில் 8% அதிகமான வளர்ச்சியை அடைந்துள்ளது. இதனால் இந்திய சொகுசு கார் விற்பனை சந்தையில் இந்நிறுவனம் முக்கிய இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. 2013 ஆம் ஆண்டு இந்த நிறுவனம் 10,002 கார்களை விற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 இரண்டு வருட வளரச்சி

இரண்டு வருட வளரச்சி

"தொடர்ச்சியாக இரண்டு வருடங்களுக்கு 10,000 கார்களுக்கு மேல் விற்று சாதனை படைத்துள்ள முதல் ப்ராண்ட் என்பதாலும், தொடர்ச்சியாக ஏழு ஆண்டுகளுக்கு இந்தியாவில் நம் வளர்ச்சியின் வேகத்தை தக்க வைத்து கொண்டதுள்ளதாலும், பெருமகிழ்ச்சி அடைகிறோம்." என இந்தியாவின் ஆடி நிறுவன தலைவரான ஜோ கிங் தன் அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

17 சதவீத வளர்ச்சி

17 சதவீத வளர்ச்சி

கடந்த காலாண்டில் 3,044 கார்களை விற்று, 17 சதவீத வளர்ச்சியை அடைந்து, நம்மால் மிகப்பெரிய விற்பனை ஆற்றுகையை அடைய முடிந்ததென்றால் அதற்கு காரணமாக இருந்தது கடும் கிராக்கியும் அதனை விஞ்சிய டெலிவெரியும் தான் என அவர் மேலும் கூறினார்.

நீண்ட கால வர்த்தகம்

நீண்ட கால வர்த்தகம்

"இந்தியாவிலுள்ள ஆடியை பொறுத்த வரை, வெறும் மாதக்கணக்கில் அல்லது வருடக்கணக்கில் என இல்லாமல் ஒரு நீண்ட பயணமாக அமையும் என நாங்கள் நம்புகிறோம். இந்த பயணத்தில் நாங்கள் செயல்படுத்தியுள்ள மூலோபாயங்கள் தலைமை இடத்தை அடைய உதவுவதோடு மட்டுமல்லாது அதை தக்க வைக்கவும் உதவுயிள்ளது." என கிங் தெரிவித்தார்.

ஆடி ஏ3

ஆடி ஏ3

இந்த நிறுவனம் 2014 ஆம் வருடத்தில் பல விஷயங்களில் முதன்மையாக இருந்துள்ளது. ஆடி ஏ3 செடான் மற்றும் ஆடி ஏ3 காப்ரியோலெட் போன்ற பிரிவுகளில் முதல் கார்களாக இவைகளை அறிமுகப்படுத்தியதும் அடங்கும்.

மெர்சிடிஸ் பென்ஸ்

மெர்சிடிஸ் பென்ஸ்

சென்ற வாரம், இதன் போட்டியாளரான மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியாவில் 2014 ஆம் ஆண்டில், 10,201 கார்களை விற்று, தன் வருடாந்திர விற்பனையில் 13% உயர்வை அடைந்ததாக தெரிவித்துள்ளது.

 பிஎம்டபிள்யூ

பிஎம்டபிள்யூ

2014 ஆம் வருடத்திற்கான விற்பனை விவரங்களை BMW இந்தியா இன்னும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Audi reports record sales in India at 10,851 units

German luxury car maker Audi on Thursday reported record sales in India at 10,851 units in 2014, a growth of more than 8 per cent over 2013, thus retaining its leadership in the Indian luxury car space.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X