ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியாவின் ரூ.1,50,000 கோடி முதலீட்டு திட்டம்!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொல்கத்தா: இந்தியாவின் மிகப்பெரிய ஸ்டீல் உற்பத்தியாளரான SAIL நிறுவனம், தற்போது 23 மில்லியன் டன்களாக இருக்கும் ஸ்டீல் உற்பத்தியை 50 மில்லியன் டன்களாக உயர்த்திட, 2030-31 நிதியாண்டுக்குள் ரூ.1,50,000 கோடியை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.

"தற்போது 23 மில்லியன் டன்களாக இருக்கும் ஸ்டீல் உற்பத்தியை 50 மில்லியன் டன்களாக உயர்த்திட, 2030-31 நிதியாண்டு வரைக்கும் ரூ.1,50,000 கோடியை முதலீடு செய்யும் திட்டத்தை நாங்கள் தயாரித்துள்ளோம்" என ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியாவின் தலைவரான திரு. சி.எஸ். வெர்மா PTI செய்தியாளர்களிடம் கூறினார்.

இத்திட்டம், அதன் ஒப்புதலுக்காக வெகு விரைவில் நிர்வாகக் குழமத்தின் முன் சமர்ப்பிக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

பிரவுன்ஃபீல்ட், கிரீன்ஃபீல்ட்

பிரவுன்ஃபீல்ட், கிரீன்ஃபீல்ட்

இந்த முதலீட்டு திட்டம், பிரவுன்ஃபீல்ட் மற்றும் கிரீன்ஃபீல்ட் என இரண்டின் விரிவாக்கத்திற்கும் வழிவகுக்கும் என இந்த பொதுத் துறை ஸ்டீல் உற்பத்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

சுரங்க உற்பத்தி

சுரங்க உற்பத்தி

ரூ.1.5 லட்சம் கோடி முதலீட்டு திட்டத்தில், மேற்கு வங்காளத்தில் சுரங்கம் உட்பட புதிய கொள்ளளவுகள் மற்றும் அது சார்ந்த நடவடிக்கைகளில் ரூ.40,000 கோடி முதலீடு செய்யப்படும்.

10 மில்லியன் டன் ஸ்டீல்

10 மில்லியன் டன் ஸ்டீல்

வங்காளத்தில் ஸ்டீல் கொள்ளளவை தற்போதுள்ள 5 மில்லியன் டன்களில் இருந்து 10 மில்லியன் டன்களாக உயர்த்தப்போவதாக வெர்மா தெரிவித்தார். மேலும் நாட்டின் முதல் இரும்புத்தாது உலோகக்கட்டி ஆலை, கோப் ஸ்டீலுடனான ஒத்துழைப்புடன் வங்காளத்தில் தான் நிறுவப்படப்போகிறது.

50:50 கூட்டணி

50:50 கூட்டணி

இரும்புத்தாது உலோகக்கட்டி தயாரிக்கும் இந்த வணிக ஆலையை கோப் ஸ்டீலுடன் இணைந்து 50:50 என்ற கூட்டு முயற்சியில் நிறுவப்படப்போகிறது.

ஜப்பானிய தொழில்நுட்பம்

ஜப்பானிய தொழில்நுட்பம்

துர்காப்பூரில் ஆரம்பிக்கப்படவுள்ள இந்த திட்டம், ஜப்பானிய ஸ்டீல் உற்பத்தியாளர்களால் காப்புரிமை பெறப்பட்ட இரும்பு உற்பத்தி தொழில்நுட்பத்தை பயன்படுத்த போகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

SAIL plans Rs 1,50,000 crore investment by 2030-31

SAIL, country's largest steel maker, has charted investment of Rs 1,50,000 crore till 2030-31 to ramp up steel production from 23 million tonnes to 50 million tonnes.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X