விஸ்தாராவின் முதல் விமான சேவை "டெல்லி டூ மும்பை"!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்திய விமான போக்குவரத்து துறைக்குள் 60 ஆண்டு காலத்திற்கு பிறகு அடியெடுத்து வைக்கும் டாடா குழுமத்தின் புதிய விமான நிறுவனமான விஸ்தாரா தனது முதல் விமான சேவையை வெள்ளிக்கிழமை வெற்றிகரமாக துவங்கியது. எந்த ஒரு ஆடம்பரமும் இன்றி, "சரியாக செய்வதே" தங்கள் குறிக்கோள் எனவும் விஸ்தாரா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்திய விமான போக்குவரத்து துறையின் மோசமான காலத்தில் களமிறங்கிய விஸ்தாரா கூறுகையில், "முழுமையான சேவை அளித்திடும் விமான போக்குவரத்து என்ற பெயரில் பகட்டாகவோ ஆடம்பரமாகவோ இருக்காது".

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் கூட்டு முயற்சியில் தொடங்கப்பட்ட விஸ்தாராவின் 51% பங்குகளை டாடா குழுமம் கொண்டுள்ளது; மீதமுள்ள 49% பங்குகளை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் கொண்டுள்ளது.

டாடா விமான சேவை (ஏர்  இந்தியா)

டாடா விமான சேவை (ஏர் இந்தியா)

60 ஆண்டுகளுக்கு முன், சுமார் 1950-களில் டாடா விமான சேவை ஏர் இந்தியாவாக பெயர் மாற்றப்பட்டு, பின் தேசியமையமாக்கப்பட்டது. அதற்கு பிறகு டாடாவின் முதல் விஸ்தாரா விமானம் டெல்லியில் இருந்து மும்பைக்கு இன்று பறந்தது.

ரத்தன் டாடா

ரத்தன் டாடா

தொடங்கப்பட்ட முதல் விமானத்தை டாடா குழுமத்தின் தலைவர் திரு. சைரஸ் மிஸ்ட்ரி வரவேற்றார். முன்னாள் தலைவரான திரு. ரத்தன் டாடா அவர்கள் டெல்லியில் இருந்து விமானம் கிளம்புவதற்கு முன்பு தன் வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும் அவர் குழுமத்தின் கனவு நனவாகி விட்டது, "கனவுக்கு இன்று உயிர் கிடைத்து விட்டது," என அவர் கூறினார்.

டெல்லி - மும்பை

டெல்லி - மும்பை

இந்நிறுவனத்தின் முதல் பயணமாக வெள்ளிக்கிழமை மதியம் 12.51 மணிக்கு டெல்லி சர்வதேச விமானத்தை விட்டு கிளம்பிய இந்த விமானம் மதியம் 2.26 மணிக்கு மும்பையில் தரை இறங்கியது.

 பிரசாத் மேனன்

பிரசாத் மேனன்

"பெரிய அளவில் தம்பட்டம் அடித்து பின் அதிருப்தியை ஏற்படுத்துவதை விட, செய்யும் போதே நாம் சரியாக செய்ய வேண்டும்," என விஸ்தாராவின் தலைவர் திரு. பிரசாத் மேனன் செய்தியாளர்களிடம் கூறினார். இதன் மூலம் பிற நிறுவனங்களை அதிரடியான ஆஃபர்களை அள்ளி விசாமல் சரியான கட்டணத்தில் சிறப்பான சேவை அளிக்கபோகிறது விஸ்தாரா.

 ஏர்ஏசியா கூட்டணி

ஏர்ஏசியா கூட்டணி

மலேசியாவின் பட்ஜெட் விமான நிறுவனமான ஏர்ஆசியா இந்தியாவிலும் (உள்நாட்டு பிரிவில்) 30% பங்குகளை டாட்ட குழுமம் கொண்டுள்ளது. ஆனால் இந்த கூட்டின் படி, அன்றாடம் நடக்கும் செயல்பாடுகளில் இவர்கள் அங்கம் வகிப்பதில்லை.

3வது விமான நிறுவனம்

3வது விமான நிறுவனம்

மாநிலத்தால் நடத்தப்படும் ஏர் இந்தியா மற்றும் தனியாரால் நடத்தப்படும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு பிறகு, நம் நாட்டில் முழு சேவையை அளித்திடும் மூன்றாவது விமான நிறுவனமாக விஸ்தாரா விளங்கும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Tatas' Vistara starts flying

Marking Tatas’ re-entry into the Indian aviation space after over six decades, new airline Vistara on Friday flew its first flight, and said its aim will be to “do it right” without making a big splash.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X