சத்யம் சினிமாஸ் நிறுவனத்தை 1,000 கோடி ரூபாய்க்கு கைப்பற்றபோகும் பி.வி.ஆர் குரூப்!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: நமது சிங்கார சென்னையை தலைமையிடமாக கொண்டு தென் இந்தியாவில் பல இடங்களில் திரையறங்கம் வைத்திருக்கும் சத்யம் சினிமாஸ் நிறுவனத்தை 1,000 கோடி ரூபாய்க்கு பி.வி.ஆர் (PVR) குரூப் கைபற்ற உள்ளது.

சத்யம் சினிமாஸ் தென்இந்தியாவின் முக்கிய நகரங்களில் மட்டும் சுமார் 40 திரைகளை (Screens) கொண்டுள்ளது. இந்நிறுவனத்திற்கு மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்ப்பு இருந்தாலும் செலவுகள் அதிகரிப்பின் காரணமாக சத்யம் சினிமாஸ் நிறுவனத்தின் தாய் நிறுவனமான எஸ்.பி.ஐ சினிமாஸ் (SPI cinemas) தனது வர்த்தகத்தை கைவிட திட்டமிட்டுள்ளது.

பி.வீ.ஆர் குரூப்

பி.வீ.ஆர் குரூப்

அஜய் பிஜிலி அவர்கள் தலைமை வகிக்கும் பி.வீ.ஆர் குரூப், எஸ்.பி.ஐ சினிமாஸ் நிறுவனத்தின் 40 திரைகளை கைபற்ற 750 முதல் 1,000 கோடி ரூபாய் வரையிலான தொகைக்கு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மேலும் இப்பேச்சுவார்த்தை இறுதிகட்டதை நெருங்கியுள்ளதாகவும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிக் சினிமாஸ் (ரிலையன்ஸ்)

பிக் சினிமாஸ் (ரிலையன்ஸ்)

கடந்த மாதம் கார்னிவல் சினிமாஸ் நிறுவனம் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவரான அனில் அம்பானி தலைமை வகிக்கும் பிக் சினிமாஸ் நிறுவனத்தின் 242 திரைகள் கொண்ட வர்த்தகத்தை 700 கோடி ரூபாய்க்கு கைபற்றியது.

மல்டிபிளக்ஸ் துறை
 

மல்டிபிளக்ஸ் துறை

கடந்த 10 வருடத்தில் இந்தியாவில் பெரு நகரங்கள் முதல் சிறு நகரம் வரையில் மல்டிபிளக்ஸ் துறை வேகமாக வளர்ந்தது. ஆனால் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் சுமார் 5 நிறுவனங்கள் தனது வர்த்தகத்தை பிற நிறுவனங்களுக்கு விற்றுள்ளது. இந்த 5 டீல்களில் மதிப்பு 1,600 கோடியாகும்.

என்ன காரணம்?

என்ன காரணம்?

தியேட்டர் ஆப்ரேட்டர்கள் திரைப்பட நிறுவனங்களிடம் இருந்து பெறப்படும் படங்களின் விலை அதிகரித்துள்ளதாலும், பெரிய அளவிலான வெற்றிப்படங்கள் குறைந்தாலும், ரியல் எஸ்டேட்(மால்கள் மற்றும் மல்டிபிளக்ஸ் கட்டடங்களில் விலை உயர்வு) செலவுகள் அதிகரித்தாலும் நிறுவனங்கள் தங்களது வர்த்தகத்தை விற்று வருகிறது.

எஸ்.பி.ஐ சினிமாஸ்

எஸ்.பி.ஐ சினிமாஸ்

இந்நிறுவனம் இந்தியாவில் 40 திரைகளை 5 விதமான சேவைகளில் வழங்குகிறது அவை சத்யம், எஸ்கேப், தீ சினிமா, லக்ஸ் மற்றும் எஸ்2 என்ற வகையில் வழங்குகிறது. 2015ஆம் ஆண்டில் இந்நிறுவனம் தனது 40 தரைகள் என்ற எண்ணிக்கையை 50 ஆக உயர்த்த திட்டமிட்டு இருந்தது குறிப்பிடதக்கது.

பி.வி.ஆர் சினிமாஸ்

பி.வி.ஆர் சினிமாஸ்

இந்நிறுவனம் இந்தியாவில் 43 நகரங்களில், 120 இடங்களில் சுமார் 454 திரைகளை கொண்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

PVR set to acquire Chennai's movie exhibition company SPI Cinemas for Rs 750-1,000 crore

The Ajay Bijli led PVR group seems set to acquire Chennai's premier movie exhibition company SPI Cinemas, popularly known as Sathyam Cinemas.The deal may close for a rather steep valuation of approximately Rs 750-1,000 crore for just 40 odd screens.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X