காவி துண்டுக்குள் ஒரு வியாபார காந்தம்... பாபா ராம்தேவ்

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்திய கலைகளில் ஒன்றான யோகவிற்கு உலகின் பல நாடுகளிலும், இந்தியாவிலும் பல நிபுனர்கள் உள்ளனர், ஆனால் இன்றளவில் யோகாவிற்கு புகழ்பெற்றவர் என்றால் அது பாபா ராம்தேவ் தான். இவருக்கு உள்ள புகழை பயன்படுத்தி அடிக்கடி அரசியல் சார்ந்த கருத்தைகளை வெளியிட்டு தலைப்பு செய்திகளில் இடம்பெறும் வழக்கம் உண்டு.

 

இவை அனைத்தும் அவரின் பிஸ்னஸிற்கு அதிகளவில் உதவியுள்ளது. இவரின் ஆயுர்வேத பொருட்களின் பிஸ்னஸ் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 800 கோடி ரூபாய் உயர்ந்து 2,000 கோடி என்ற அளவிற்கு உயர்ந்துள்ளது.

பதஞ்சலி ஆயுர்வேத்

பதஞ்சலி ஆயுர்வேத்

பாபா ராம்தேவ் அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் பதஞ்சலி ஆயுர்வேத் நிறுவனம் சோப் முதல் சோள சீவல் (cornflakes) வரை தயாரித்து விற்று வருகிறது. இதன் வர்த்தம் 2012ஆம் ஆண்டில் 450 கோடியாகவும், 2013ஆம் ஆண்டில் ரூ.850 கோடியாகவும், 2014ஆம் ஆண்டில் ரூ.1,200 கோடியாகவும் உள்ளது. 2015ஆம் ஆண்டின் முடிவில் இந்நிறுவனத்தின் வர்த்தகம் 2,000 கோடி ரூபாய் அளவில் உயரும் என நிறுவன கணிப்புகள் தெரிவிக்கிறது.

67 சதவீத உயர்வு

67 சதவீத உயர்வு

2014ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் பதஞ்சலி ஆயுர்வேத் நிறுவனத்தின் வர்த்தகம் 2015ஆம் நிதியாண்டில் 67 சதவீதம் உயர்ந்துள்ளது.

நிறுவன பொருட்கள்
 

நிறுவன பொருட்கள்

இந்நிறுவனத்தின் பெயரில் இந்தியா மற்றும் வெளிநாடுகளுக்கு சோப்பு, ஷாம்பு, பல் பாதுகாப்பு பொருட்கள், தைலம், தோல் கிரீம்கள், பிஸ்கட், நெய், பால், ஜூஸ், தேன், கோதுமை மாவு, கடுகு எண்ணெய், மசாலா பொருட்கள், சர்க்கரை மற்றும் பல பொருட்களை பிட்டி குரூப் (Pittie Group) நிறுவனம் விநியோகத்திலும், விற்பனையிலும் ஈடுப்பட்டுள்ளது.

போட்டி

போட்டி

தற்போது எஃப்.எம்.ஜி.சி துறையில் பழம் திண்டு கொட்டை போட்ட நிறுவனங்களான இமாமி(1700 கோடி ரூபாய்) மற்றும் மாரிகோ(4000 கோடி ரூபாய்) போன்ற நிறுவனத்திற்கு பாபா ராம்தேவ்( 2000 கோடி ரூபாய்) கடுமையாக போட்டி அளித்து வருகிறார்.

விளம்பரம் கிடையாது

விளம்பரம் கிடையாது

மேலும் இந்நிறுவனத்தின் பொருட்களுக்கு பெரிய அளவிலான விளம்பரங்கள் செய்யப்படுவதில்லை, ஆனால் பிற நிறுவனங்கள் தங்களின் வருவாயில் 20 முதல் 30 சதவீதம் வரையில் விளம்பரத்திற்காக செலவு செய்கின்றனர்.

4,000 கடைகள்

4,000 கடைகள்

2007ஆம் ஆண்டு துவங்கிய இந்நிறுவனம் 150 முதல் 200 கடைகளை கொண்டு தனது வர்த்தகத்தை வரிவாக்கம் செய்து தற்போது இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் சுமார் 4000 கடைகளுக்கு மேல் உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Baba Ramdev expands empire beyond yoga to FMCG

It may be an unlikely combination — yoga for inner peace and FMCG for external beauty — but Baba Ramdev appears to have struck the right pose in both.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X