கும்பமேளாவிற்கு சாப்ட்வேர் உருவாக்கும் இன்போசிஸ்!! விஷால் சிக்கா- நரேந்திர மோடி சந்திப்பு..

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய சாப்ட்வேர் நிறுவனமான இன்போசிஸ் நிறுவனத்தின் சீஇஓ விஷால் சிக்கா இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். இச்சந்திப்பில் விஷால் சிக்கா பிரதமரிடம், இந்தியாவின் மென்பொருள் மற்றும் சேவை பிரிவில் புதுமையான விஷயங்களை உருவாக்க இன்போசிஸ் நிறுவனம் 1,500 கோடி ரூபாய் (250 மில்லியன் டாலர்) வரை முதலீடு செய்ய தயார் என்று தெரிவித்தார்.

கும்பமேளா

கும்பமேளா

இச்சந்திப்பு முடிந்த பின் செய்தியாளர்களிடம் பேசிய விஷால் சிக்கா, இன்போசிஸ் நிறுவனம் 2016ஆம் ஆண்டில் உஜ்ஜைன் பகுதியில் நடக்க இருக்கும் கும்பமேளா விழாவை சிறப்பாக விடிவைமைக்கவும், மக்களுக்கு எளிமையாக்கவும் ஒரு மென்பொருளை உருவாக்க திட்டமிட்டுள்ளது என தெரிவித்தார்.

டிஜிட்டல் இந்தியா

டிஜிட்டல் இந்தியா

மேலும் பிரதமர் மோடியின் கனவு திட்டமான டிஜிட்டல் இந்தியா-வில் இன்போசிஸ் அளிக்க இருக்கும் பங்கிடு மற்றும் திட்டங்கள் பற்றி விஷால் சிக்கா விவரித்தார்.

தொலைதொடர்பு அமைச்சர்

தொலைதொடர்பு அமைச்சர்

சில வாரங்களுக்கு முன்பு விஷால் சிக்கா அவர்கள் டிஜிட்டல் இந்தியா திட்டத்தை பற்றியும், மென்பொருள் துறைக்கு தனது நிறுவனம் செய்ய இருக்கும் திட்டங்கள் பற்றியும் தொலைதொடர்பு அமைச்சரான ரவி சங்கர் பிரசாத் அவர்களை சந்தித்து பேசினார் சிக்கா.

ஸ்மார்ட் சிட்டி

ஸ்மார்ட் சிட்டி

மேலும் விஷால் சிக்கா மோடி அவர்களை, இன்போசிஸ் நிறுவனத்தின் மைசூர் வளாகம் தான் நாட்டின் முதல் ஸ்மார்ட் சிட்டி என்று அறிவிக்க வேண்டினார். இதன் படி மோடி இந்த அறிவிப்பை வருகிற ஏப்ரல் மாதம் அறிவிப்பதாக தெரிவித்தார். இந்த ஸ்மார்ட் சிட்டியில் 30,000 பேர் தங்கி பணிபுரிந்து வருகின்றனர்.

புதிய துறைகள்

புதிய துறைகள்

இந்தியாவில் ஆட்டோமேஷன் மற்றும் செயற்கை நுண்ணறிவு எனப்படும் artificial intelligence துறையில் புதிய கண்டுப்பிடிப்புகளை உருவாக்க அதிகப்படியான முக்கியத்துவம் அளித்து வருகிறார் விஷால் சிக்கா.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Infosys CEO Vishal Sikka meets Narendra Modi; commits $250 million investment

Infosys CEO Vishal Sikka on Wednesday met Prime Minister Narendra Modi and disclosed that his company will spend US $250 million (over Rs 1,500 crore) to fund innovations in software and services in India.
Story first published: Wednesday, January 14, 2015, 16:44 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X