ஜெட் ஏர்வேஸ் பங்குகளை அடமானம் வைத்த நரேஷ் கோயல்!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: இந்தியாவின் மிகப்பெரிய விமான போக்குவரத்து நிறுவனமான ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிறுவனரான நரேஷ் கோயல், தன்வசம் இருந்த 51 சதவீத ஜெட் ஏர்வேஸ் பங்குகளை பஞ்சாம் நேஷ்னல் வங்கியில் அடமானம் வைத்துள்ளார்.

 

இதனால் இன்று மும்பை பங்கு சந்தையில் இந்நிறுவனத்தின் பங்கு மதிப்பு ஆடம் கண்டது. இச்செய்தி வெளியான சில மணிநேரங்களில் இந்நிறுவனத்தின் பங்குகள் சரிவை சந்தித்தது.

2,600 கோடி ரூபாய் மதிப்பீடு

2,600 கோடி ரூபாய் மதிப்பீடு

நரேஷ் கோயல் வசம் இருந்த 51 சதவீத பங்குகளின் (57,933,665 பங்குகள்) மதிப்பு சுமார் 2,600 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகைக்கு மதிப்பிடப்படுகிறது.

ரூ.10,000 கோடி கடன்

ரூ.10,000 கோடி கடன்

நஷ்டத்தில் செயல்படும் இந்த நிறுவனம் 9,794 கோடி ரூபாய் கடனில் சிக்கித்தவிக்கிறது. இதன் அளவு கடந்த மார்ச் மாதம் 10,576 கோடியாக இருந்தது குறிப்பிடதக்கது. கடன் அளவு குறைந்ததன் மூலம் இந்நிறுவனத்தின் வட்டி தொகை 212.27 கோடி ரூபாயாக குறைந்தது. மேலும் நிறுவனத்தின் கடன் அளவை குறைப்பதற்காகவே தனது பங்குகளை வங்கியில் அடமானம் வைத்துள்ளார் நரேஷ்.

அடமானம்

அடமானம்

மேலும் ஜெட் ஏர்வேஸ் மற்றும் பஞ்சாம் நேஷ்னல் வங்கி ஆகிய இரு தரப்பும் பங்குகளின் அடமான தொகை பற்றிய விவரங்களை அறிவிக்கவில்லை.

எதிஹாத் நிறுவனம்
 

எதிஹாத் நிறுவனம்

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் 51 சதவீத பங்குகள் நரேஷ்கோயல் அவர்களிடமும், 24 சதவீத பங்குகள் கடந்த வருடம் இந்நிறுவனத்துடன் இணைந்த எதிஹாத் நிறுவனத்துடனும், மீதமுள்ளவை நிறுவன முதலீட்டாளர்களிடமும், சில்லறை முதலீட்டாளர்களிடமும் உள்ளது.

சந்தை மூலதனம்

சந்தை மூலதனம்

இன்று காலையில் இந்நிறுவனத்தின் பங்குகள் சரிவை சந்தித்தாலும், மதியம் 2 மணியளவில் இந்நிறுவனத்தின் பங்குகள் 5 சதவீத உயர்வை அடைந்தது. இதன் மூலம் இந்நிறுவனத்தின் சந்தை மூதலீடு 5,274 கோடியாக உயர்ந்துள்ளது.

நிறுவன இணைப்பு

நிறுவன இணைப்பு

கடந்த டிசம்பர் மாதம் துவக்கத்தில் இந்நிறுவனத்தின் மலிவு விலை விமான சேவை நிறுவனமான ஜெட்லைட் மற்றும் ஜெட் கனக்ட் நிறுவனத்தின் சேவையை நிறுத்திவிட்டு, ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துடன் இணைத்துள்ளது.

113 விமானங்கள்

113 விமானங்கள்

இந்நிறுவனம் இந்தியா மட்டும் அல்லாமல் உலக நாடுகளுக்கும் விமான சேவை அளித்து வருகிறது. இந்நிறுவனம் தற்போது 113 விமானங்களை கொண்டு பயணிகள் விமான போக்குவரத்து சேவைகளை அளித்து வருகிறது, இதில் 26 நிறுவனங்கள் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துடையது, மீதமுள்ள 87 விமானங்கள் குத்தகைக்கு எடுக்கப்பட்டது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Naresh Goyal pledges his entire 51 per cent stake in Jet Airways to Punjab National Bank

Jet Airways main promoter and chairman Naresh Goyal has pledged his entire shareholding in the carrier of 51 per cent, valued at over Rs 2,600 crore, to state-run Punjab National Bank. 
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X