6 வருட விலை சரிவை எட்டிய கச்சா எண்ணெய்!! நாளை பெட்ரோல், டீசல் விலை குறையலாம்..

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை கடந்த ஒரு மாத காலமாக தொடர்ந்து சரிந்து வருவது நாம் அனைவருக்கு தெரிந்த ஒன்று, தற்போது ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 45 டாலர் என்ற விலையில் உலக சந்தையில் வர்த்தகம் செய்யப்படுகிறது. இதன் மூலம் கச்சா எண்ணெயின் விலை 6 வருட விலை சரிவை பதிவு செய்துள்ளது.

 

இந்த விலை சரிவு இந்தியா, சீனா போன்ற வளரும் நாடுகளுக்கும் சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது. இத்தகைய விலை சரிவு வாய்ப்பை பயன்படுத்தி அனைத்து நாடுகளும் தங்களது இருப்பை அதிகரித்துக்கொள்கிறது.

60% விலை சரிவு

60% விலை சரிவு

2014ஆம் ஆண்டின் ஜூன் மாதத்தில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை 111 டாலரில் இருந்து தற்போது 45 டாலர் என்ற அளவில் குறைந்து 60 சதவீத விலை சரிவை பதிவு செய்துள்ளது.

ஏன் இந்த நிலை...

ஏன் இந்த நிலை...

கச்சா எண்ணெய் உற்பத்தி மற்றும் விநியோக நாடுகளுக்கு கடுமையான நெருக்கடி அளிக்கும் வகையில் சவுதி அரபிய நாட்டின் எண்ணெய் நிறுவனங்கள் தங்களின் உற்பத்தியை அதிகரித்துள்ளது. இதன் மூலம் சந்தையில் விலை நிலை கடுமையாக சரிந்துள்ளது. சவுதி அரேபிய நாடுகளின் இந்த முடிவிற்கு முக்கிய காரணம் அமெரிக்காவின் சூழ்ச்சிதான். இதே பற்றி தெரிந்துக்கொள்ள கடைசி ஸ்டைர் வரை படியுங்கள்.

பெட்ரோல், டீசல் விலை சரிவு
 

பெட்ரோல், டீசல் விலை சரிவு

இந்தியாவில் இந்த விலை சரிவின் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் அதிகளவில் சரிந்துள்ளது. 2014ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தை ஒப்பிடுகையில் தற்போது பெட்ரோல் விலை 12.27 ரூபாயும், டீசல் விலை 8.46 ரூபாயும் குறைந்துள்ளது.

ஜனவரி 15

ஜனவரி 15

மேலும் ஜனவரி 15ஆம் (நாளை) தேதி மீண்டும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைப்பு பற்றிய அறிவிப்பை மத்திய அரசு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பணவீக்கம்

பணவீக்கம்

கச்சா எண்ணெயின் விலை சரிவால் நாட்டின் பணவீக்கத்திலும், நடப்பு கணக்கு பற்றாக்குறையில் பாதிப்பு குறைந்துள்ளது. கடந்த வருடம் கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக மத்திய அரசு 160 பில்லியன் டாலர் செலுத்தியது, ஆனால் இந்த வருடம் இதன் அளவு 110 பில்லியன் டாலராக குறைந்துள்ளது.

உற்பத்தி அளவு குறையாது

உற்பத்தி அளவு குறையாது

உலகின் பிற கச்சா எண்ணெய் உற்பத்தி நாடுகள் (அமெரிக்காவை தவிர) சவுதி அரேபியாவை உற்பத்தியை குறைக்க வலியுறுத்தியும், மறுத்துவிட்டது. இதுக்குறித்து சவுதி எண்ணெய் துறை அமைச்சர் கூறுகையில் எந்த நிலையிலும் (அமெரிக்கா சொல்லும் வரை) அடுத்த சில மாதங்களுக்கு எண்ணெய் உற்பத்தி அளவை குறைக்க முடியாது என தெரிவித்தார்.

அமெரிக்காவின் சூழ்ச்சி

அமெரிக்காவின் சூழ்ச்சி

அமெரிக்க ரஷ்யா சண்டையில் குளிர்காயும் இந்தியா, சீனா..

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Oil prices tumble to $45, bring cheer to customers

Global oil prices breached the six-year low of $45 a barrel briefly on Tuesday but the last word is yet to be heard on how far crude would slide before bouncing back. While the low prices kept the good times rolling for emerging economies such as India, the slide is not without negatives.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X