பி.வீ.ஆர்- சத்யம் சினிமாஸ் டீல் உடைந்தது!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: சில நாட்டுகளுக்கு முன்பு சென்னை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சத்யம் சினிமாஸ் நிறுவனத்தை பி.வீ.ஆர் சினிமாஸ் (பி.வீ.ஆர் குரூப்) 750 -1000 கோடி ரூபாய்க்கு கைபற்றுவதாக செய்திகள் ஊடங்களில் வெளிவந்தது. தற்போது இத்தகைய முயற்சிகள் எதுவும் நடக்கவில்லை என்று இரு நிறுவனங்களும் தெரிவித்துள்ளது.

 

அதுகுறித்து பி.வீ.ஆர் குரூப் கூறுகையில், "சத்யம் சினிமாஸ் நிறுவனத்தின் தாய் நிறுவனமான எஸ்பிஐ சினிமாஸ் நிறுவனத்தை கைபற்றுவதற்காக எந்த விதிமான முயற்சிகளும் எடுக்கவில்லை" என தெரிவித்துள்ளது.

பார்ட்னர்

பார்ட்னர்

மேலும் இந்நிறுவனம் பங்கு சந்தைக்கு சமர்ப்பித்த அறிக்கையில்,"நிறுவனத்தின் வர்த்தகத்தை பெருக்க அனைத்து வழிகளையும் பயன்படுத்தி வருகிறோம், இதன் ஒரு பகுதியாக நிறுவனத்தின் லாப அளவுகளை அதிகரிக்க சிறந்த கூட்டாளி தேர்வுசெய்து வருகிறோம்." என தெரிவித்திருந்தது.

40 திரைகள்

40 திரைகள்

ஊடகங்களுக்கு கிடைத்த செய்திகளின் படி எஸ்.பி.ஐ சினிமாஸ் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் 40 திரைகளை பி.வீ.ஆர் குரூப் கைபற்றபோவதாகவும், அடுத்த 2 வருடங்களில் இந்நிறுவனத்தின் பெயரில் தென் இந்தியாவில் 40 மூதல் 50 திரைகளை புதிதாக துவங்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

எஸ்.பி.ஐ சினிமாஸ்
 

எஸ்.பி.ஐ சினிமாஸ்

இச்செய்திகள் குறித்து எஸ்.பி.ஐ சினிமாஸ் நிறுவனத்தின் தலைவர் ஸ்வரூப் ரெட்டி கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். ஆனால் அவர் கூறுகையில் இத்துறை வணிகத்தில் பி.வி.ஆர் நிறுவனம் முன்னணியாக இருக்கலாம், சத்யம் சினிமாஸ் நிறுவனமும் இதற்கு இணையான நிறுவனம் என்பதற்கு பல சான்று உண்ட என தெரிவித்தார்.

நிதிநிலை இல்லை

நிதிநிலை இல்லை

சத்யம் சினிமாஸ் நிறுவனத்தை வாங்கும் அளவிற்கு பி.வீ.ஆர் நிறுவனத்திடம் நிதிநிலை இல்லை என்று தெரிவித்தார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

PVR denies talks with SPI Cinemas

Movie exhibition company PVR Ltd has denied news reports that it is likely to acquire the Chennai-headquartered SPI Group that runs Sathyam Cinemas. The company is not aware of any negotiations or transactions with SPI Cinemas.
Story first published: Wednesday, January 14, 2015, 11:09 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X