ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை கை கழுவினார் கலாநிதி மாறன்-பெரும்பான்மை பங்குகளை விற்றார்!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: நிதிநெருக்கடியில் சிக்கியுள்ள ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் நிலையை மேம்படுத்தவும், மீண்டும் சந்தையில் வெற்றிக்கொடி நாட்டவும். இந்நிறுவனத்தின் உரிமையாளரான கலாநிதி மாறன் தனது பெரும்பான்மையான பங்குகளை இந்நிறுவனத்தின் முதல் நிறுவனரான அஜய் சிங் பெயருக்கு மாற்றியுள்ளார்.

 

இதன் மூலம் கலாநிதி மாறன் மற்றும் KAL ஏர்வேஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் அனைத்து வகையான கட்டுப்பாடுகளும் இழந்துள்ளது. தற்போது ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் மொத்த கட்டுப்பாடும் அஜய் சிங் தலைமையில் உள்ளது.

பங்குச்சந்தை

பங்குச்சந்தை

ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் பங்குச்சந்தைக்கு சமர்ப்பித்த அறிக்கையில்,"நிறுவனத்தின் நிலையை மேம்படுத்த கலாநிதி மாறன் கட்டுப்பாட்டில் இருக்கும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் அனைத்து உரிமை, மேலாண்மை மற்றும் கட்டுப்பாடுகளுக்கு இந்நிறுவனத்தின் நிறுவனரான அஜய் சிங்-கிற்கு மாற்றப்படுகிறது" என குறிப்பிட்டு இருந்தது.

1500 கோடி ரூபாய் டீல்

1500 கோடி ரூபாய் டீல்

இந்த மொத்த டீலின் மதிப்பு 1,500 கோடி ரூபாயாகும். இதன்மூலம் இந்த நிறுவனத்தில் கலாநிதி மாறனின் பங்கு 10 சதவீதமாகக் குறைய உள்ளது.

மேலும் இந்நிறுவனத்தின் மேம்பாட்டிற்காக புதிய முதலீட்டாளர்களை இந்நிறுவனம் தேடி வருகிறது, இம்மாத இறுதிக்குள் இதற்கான பணிகள் முடிவடைந்து விடும் என ஸ்பைஸ்ஜெட் நிர்வாகத்தின் புதிய தலைவரான அஜய் சிங் தெரிவித்துள்ளார்.

விமான போக்குவரத்து அமைச்சகம்

விமான போக்குவரத்து அமைச்சகம்

தற்போது ஸ்பைஸ்ஜெட் நிர்வாகம் நிறுவன பொறுப்புகள் கைமாற்றத்திற்கான அறிக்கையை விமான போக்குவரத்து அமைச்சகத்தின் ஒப்புதலுக்காக சமர்ப்பித்துள்ளது ஸ்பைஸ்ஜெட் நிர்வாகம்.

பங்கு உரிமை விபரம்
 

பங்கு உரிமை விபரம்

ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தில் 53.48 சதவீத பங்குகளை கலாநிதி மாறனும் (இதன் இன்றைய சந்தை மதிப்பு ரூ. 500 கோடியாகும்), 1.79 சதவீத பங்குகளை டாடாவின் ஈவார்ட் இண்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனமும், 1.41 சதவீத பங்குகளை கல்பனா சிங் அவர்களும் வைத்திருந்னர். மீதமுள்ள 45.69 சதவீத பங்குகளை சில்லறை முதலீட்டாளர்கள் வைத்திருந்தனர்.

இப்போது இந்த நிறுவனத்தில் ரூ. 80 கோடியை முதலீடு செய்துவிட்டு விலகப் போகும் கலாநிதி மாறனுக்கு இந்த நிறுவனத்தின் 10 சதவீத பங்குகள் தரப்படவுள்ளன.

குட்ரிட்டன்ஸ்

குட்ரிட்டன்ஸ்

இனி வணிகச் செய்திகளுக்காக தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை பேஸ்புக் மூலம் இணைந்திடுங்கள். இணைந்திட இதை கிளிக் செய்திடவும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Kalanithi Maran to transfer SpiceJet ownership to original founder Ajay Singh

Capping weeks of uncertainty over its future, beleaguered SpiceJet today said its promoter Kalanithi Maran would transfer his entire stake in the carrier to the original founder, Ajay Singh, as part of plans to revive it.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X