கலாநிதி மாறன் ஆதிக்கம் குறைந்த நிலையில் ஸ்பைஸ் ஜெட் நிறுவன பங்குகள் 9.92% உயர்வு!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் உரிமையாளரான கலாநிதி மாறன் தனது பெரும்பான்மையான பங்குகளை இந்நிறுவனத்தின் நிறுவனவரான அஜய் சிங்கிற்கு விற்றுவிட்ட நிலையில் இந்நிறுவன பங்குகள் நேற்று ஒரு நாளில் மட்டும் சுமார் 9.92 சதவீதம் உயர்ந்ததுள்ளது.

பங்குகளை விற்பதற்கான ஒப்புதல் பெற்ற அடுத்த நாளிலேயே இந்நிறுவனத்தின் பங்குகள் சுமார் 10 சதவீதம் உயர்ந்து இந்நிறுவனத்தின் வளரச்சிப்பாதைக்கு முதல் படியாக அமைந்துள்ளது.

பங்கு சந்தை

பங்கு சந்தை

மும்பை பங்குச் சந்தையில் ஸ்பைஸ் ஜெட் நிறுவன பங்குகள் ஜனவரி 15ஆம் தேத் 18.70 ரூபாய் என்ற அளவில் முடிவடைந்தது. ஆனால் 16ஆம் தேதியில் (பங்கு பரிமாற்றம் செய்தி வெளியான பின்பு) இந்நிறுவனத்தின் பங்கு பதிப்பு 1.85 ரூபாய் அதிகரித்து 20.50 ரூபாய் (9.92%) என்ற விலையில் வர்த்தகம் செய்யப்பட்டது.

கலாநிதிமாறன்

கலாநிதிமாறன்

சன் நெட்வொர்க் நிறுவனத்தின் தலைவரான கலாநிதிமாறன் ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தில் 53.48 சதவீத பங்குகளை வைத்திருந்தார். இந்நிறுவனத்தின் நிலையை மேம்படுத்த, அவர் தனது மொத்த பங்கு இருப்பையும் ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் நிறுவனரான அஜய் சிங்கிற்கு அளித்துள்ளார். இதன் மூலம் இந்நிறுவனத்தின் அனைத்து விதமான உரிமைகளும் அஜய் சிங்கிற்கு கைமாறியுள்ளது.

பங்கு பரிமாற்றம்

பங்கு பரிமாற்றம்

கலாநிதிமாறன் அவர்களின் 53 சதவீத பங்குகளின் மதிப்பு 1,500 கோடி ரூபாயாகும், மேலும் இந்த பங்கு பரிமாற்றம் பல கட்டங்களாக நடைபெறும் எனவும் ஸ்பைஸ் ஜெட் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ரூ.85 கோடி மூதலீடு

ரூ.85 கோடி மூதலீடு

53 சதவீத பங்குகளை கைமாற்றிய கலாநிதி மாறன் இந்நிறுவனத்தில் 85 கோடி ரூபாய் முதலீடு செய்து ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் 10 சதவீத பங்குகளை பெற்றுள்ளார்.

நிறுவன முதலீடு

நிறுவன முதலீடு

மேலும் இந்நிறுவனத்தில் தற்போது அஜய் சிங் 5 சதவீத பங்கு இருப்பை கொண்டும், நிறுவன முதலீட்டாளர்கள் மூலம் 250 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டை திரட்டி நிறுவன பொறுப்புகளை ஏற்க உள்ளார்.

குட்ரிட்டன்ஸ்

குட்ரிட்டன்ஸ்

இனி வணிகச் செய்திகளுக்காக தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை பேஸ்புக் மூலம் இணைந்திடுங்கள். இணைந்திட இதை கிளிக் செய்திடவும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

SpiceJet stocks up 9.92 per cent after Maran quits

A day after the SpiceJet board approved the transfer of ownership and management, SpiceJet stock surged 10 per cent and got locked in the upper circuit, indicating optimism among investors on the revival of the budget airline.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X