6 மாதங்களில் 6 புதிய பைக் மாடல்களை அறிமுகம் செய்ய பஜாஜ் திட்டம்!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்தியாவில் இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களின் முன்னணி நிறுவனமாக திகழும் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் சந்தையில் தான் இழந்த இடத்தை மீண்டும் பிடிக்க அடுத்த 6 மாதங்களில் 6 புதிய வாகனங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதன் முலம் இந்தியாவின் பிற இரு சக்கர தயாரிப்பு நிறுவனங்களுக்கு வாகன விற்பனையில் கடுமையான போட்டி நிலவும்.

 

இந்த 6 புதிய வாகனங்களில் 100சிசி பைக்குகள் முதல் 400சிசி பல்சர் மாடல் பைக்குகள் வரை அறிமுகம் செய்யப்படும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

20 சதவீத சந்தை

20 சதவீத சந்தை

இந்திய சந்தையில் 20 சதவீதம், 100சிசி பைக்குள் தான் பிடித்துள்ளது. மக்கள் மத்தியில் இத்தகைய வாகனங்களுக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கிறது. இதை மையமாக வைத்து இந்நிறுவனம் ஒன்றிற்கும் அதிகமான 100சிசி வாகனங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

ரவிக்குமார்

ரவிக்குமார்

இதுக்குறித்து பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் தலைவரான எஸ்.ரவிக்குமார் கூறுகையில், "அடுத்த 6 மாத்தில் ஒவ்வொரு மாதமும் புதிய வாகனங்களை அறிமுகம் செய்ய உள்ளம், இந்த வாய்ப்பை பயன்படுத்தி சந்தையில் மீண்டும் முன்னணி விற்பனை நிறுவனமாக திகழ்வோம்" என தெரிவித்தார்.

புதிய வாகனங்கள்

புதிய வாகனங்கள்

மேலும் அவர் 100சிசி வாகன வரிசையில் சிறு முதலீட்டாளர்களுக்கு பிளாட்டினா-வும் நடுத்தர முதலீட்டாளர்களுக்கு டிஸ்கவர்-வும் அறிமுகம் செய்ய உள்ளோம். இவை அனைத்தும் மேம்படுத்தப்பட்ட டிசைன் மற்றும் திறன் கொண்டவை.

ஹெய் என்டு வாகனங்கள்
 

ஹெய் என்டு வாகனங்கள்

இதைதொடர்ந்து அதிகவேக வாகன பிரிவில் நிறுவனத்தின் வெற்றி பிராண்டான பல்சர் பெயரில் புதியதாக வடிவைமைக்கப்பட்ட 400 சிசி பல்சர் வாகனங்களை அறிமுகம் செய்ய அனைத்து விதமான வேலைகளும் நடந்து வருகிறது.

20 சதவீத சந்தை

20 சதவீத சந்தை

ஆட்டோமொபைல் சந்தை நிறுவனங்களின் படி அடுத்த 6 மாதத்தில் 6 புதிய வாகன அறிமுகங்களின் படி வருகிற மார்ச் மாதத்திற்குள் இந்நிறுவனம் சந்தையில் புதிதாத 16 முதல் 20 சதவீத சந்தைய கைபற்றும் என கணிக்கப்பட்டுள்ளது.

விற்பனையில் சரிவு

விற்பனையில் சரிவு

2014ஆம் ஆண்டில் மார்ச் முதல் டிசம்பர் மாதங்களில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் 13,91,341 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. கடந்த வருடம் இந்நிறுவனம் 16,05,308 வாகனங்களை விற்பனை செய்தது குறிப்பிடதக்கது. இதன் மூலம் இந்நிறுவனம் விற்பனையில் 13.33 சதவீத சரிவை பதிவு செய்துள்ளது.

ஹீரோ மற்றும்  ஹோண்டா

ஹீரோ மற்றும் ஹோண்டா

மேலும் இத்துறையில் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்திற்கு போட்டியாளரான ஹூரோ நிறுவனம் இக்காலகட்டத்தில் 43,40,986 வாகனஙகளை விற்றுள்ளது. மேலும் விற்பனையில் 7.16 சதவீத உயர்வை பதிவு செய்துள்ளது. அதேபோல் ஹோண்டா நிறுவனமும் விற்பனையில் 12.43 சதவீத உயர்வை பதிவு செய்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Bajaj on regaining market share ride; 6 new launches in 6 months

Bajaj Auto is aiming to regain its lost share in the Indian two-wheeler market with six product launches in the next six months that will include a new 100 cc bike besides a 400 cc model under its flagship brand Pulsar.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X