பொருளாதார வளர்ச்சியில் 2016ல் சீனாவை இந்தியா பின்னுக்கு தள்ளும்!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: சர்வதேச நாணய நிதியம் (IMF) வெளியிட்ட சமீபத்திய பொருளாதார அறிக்கையில் 2016 ஆம் ஆண்டில் இந்தியா 6.5 சதவித பொருளாதார வளர்ச்சி பெறும் என்றும், இந்த பொருளாதார வளர்ச்சி அண்டை நாடான சீனாவின் வளர்ச்சியை (6.3 சதவிதம்) விட அதிக அளவில் இருக்கும் என மதிப்பிட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டுக்கான வருடாந்திர இந்திய பொருளாதார வளர்ச்சி 6.3 சதவிதமாக இருக்கும் என மதிப்பிட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 5.8 விழுக்காடாகவும், சீனாவின் வளர்ச்சி 7.4 விழுக்காடாகவும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா- சீனா

இந்தியா- சீனா

2015 ஆம் ஆண்டுக்கான வருடாந்திர இந்திய பொருளாதார வளர்ச்சி 6.3 சதவிதமாக இருக்கும் என மதிப்பிட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 5.8 விழுக்காடாகவும், சீனாவின் வளர்ச்சி 7.4 விழுக்காடாகவும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கச்சா எண்ணெய்

கச்சா எண்ணெய்

உலக அளவில் குறைந்து வரும் கச்சா எண்ணெய் விலை, உலக பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதில் முக்கிய பங்கை வகிக்கும் என சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளது.

பொருளாதார ஊக்குவிப்பு

பொருளாதார ஊக்குவிப்பு

அதே நேரத்தில் பலவீனமான முதலீட்டு சூழலின் காரணமாக பல முன்னேறிய மற்றும் வளரும் நாடுகளின் நடுத்தர கால பொருளாதார வளர்ச்சி விகித மதிப்பீடுகள் குறைக்கப்பட்டு வந்தாலும் கச்சா எண்ணெய் விலை சரிவின் காரணமாக ஏற்படும் பொருளாதார ஊக்கம் அதிகமாகவே இருக்கும் என தெரிவித்துள்ளது.

உலக பொருளாதார வளர்ச்சி

உலக பொருளாதார வளர்ச்சி

உலக பொருளாதார வளர்ச்சி 2015 ஆம் ஆண்டில் 3.5 சதவீதமாகவும், 2016 ஆம் ஆண்டில் 3.7 சதவீதமாகவும் இருக்கும் என சர்வதேச நாணய நிதியம் கணக்கிட்டுள்ளது. இது கடந்த அக்டோபர் மாதத்தில் வெளியிட்ட மதிப்பீட்டை விட 0.3 விழுக்காடு குறைவானதாகும்.

மறுமதிப்பீடு

மறுமதிப்பீடு

கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள கடுமையான சரிவின் விளைவாக சீனா,ரஷ்யா, ஐரோப்பிய யூனியன், ஜப்பான் மற்றும் எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் பொருளாதார வளர்ச்சி வீதங்கள் மறுசீரமைக்கப்பட்டுள்ளதின் காரணமாக உலக பொருளாதார வளர்ச்சி மறுமதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்கா

அமெரிக்கா

உலகின் பெரிய பொருளாதர நாடான அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி கணிப்புகள் மட்டுமே உயர்த்தப்பட்டு மதிப்பிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா

இந்தியா

இந்தியாவைப் பொறுத்தவரையில் வெளிச்சந்தையின் தேவை குறைந்து பலவீனமாக இருந்தாலும், குறைந்து வரும் எண்ணெய் விலையும், தொழில்துறை மற்றும் முதலீட்டு நடவடிக்கைகளை அதிகரிக்க மோடி தலைமையிலான அரசு செய்துவரும் சீர்திருத்த நடவடிக்கைகளும் நேர்மறை விளைவுகளை ஏற்படுத்துவதால் பொருளாதார வளர்ச்சி கணிப்பில் எந்த மாற்றமும் இல்லை என சர்வேதேச நாணய நிதியம் தனது அறிக்கையில் கூறியுள்ளது.

குட்ரிட்டன்ஸ்

குட்ரிட்டன்ஸ்

இனி வணிகச் செய்திகளுக்காக தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை பேஸ்புக் மூலம் இணைந்திடுங்கள். இணைந்திட இதை கிளிக் செய்திடவும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India's Growth Rate To Overtake China in 2016: IMF

In its latest World Economic Outlook report released on Tuesday, the International Monetary Fund (IMF) projected that India will grow 6.5 per cent in 2016, overtaking China which, it projected, will slowdown to 6.3 per cent.
Story first published: Wednesday, January 21, 2015, 16:02 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X