மோடி தலைமையில் பிப்.6 தேதி நிதி ஆயோக் குழுவின் முதல் கூட்டம்!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்தியாவில் 65 ஆண்டு காலமாக செயல்பட்டு வந்த திட்டக் கமிஷனுக்குப் பதிலாக பிரதமர் மோடி தலைமையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள நிதி ஆயோக் (NITI Aayog) குழுவின் முதல் கூட்டம் பிப்ரவரி 6ம் தேதி நடைபெறவுள்ளது.

 

முதல் கூட்டம், பிப்ரவரி 6ஆம் தேதி மோடி தலைமையில் டெல்லியில் நடக்க உள்ளது. இக்கூட்டத்தில் பிரதமர் மோடி இப்புதிய குழுவின் செயல்திட்டங்கள் மற்றும் விடிவங்களை பற்றி முழுமையாக விவரிக்க உள்ளார்.

இதில் நிதி என்பதன் விரிவாக்கம் நேஷ்னல் இன்ஸ்டியூஷன் பார் டிரான்ஸ்பார்மிங் இந்தியா (NITI), ஆயோக் என்பதற்கு பொருள் கமிஷன் ஆகும்.

மோடி தலைமையில் பிப்.6 தேதி நிதி ஆயோக் குழுவின் முதல் கூட்டம்!!

இந்த முதல் கூட்டத்தின் முடிவிற்கு பின்னரே நிதி ஆயோக் அரசு துறையாக கருதப்படுமா அல்லது பொருளாதாரத்தை குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளும் பொருளாதார சிந்தனைக் குழுவாக செயல்படுமா என்பது தெரியும்.

மேலும் அரசு வட்டாரங்கள் அளித்த தகவலின் படி நிதி ஆயோக் நிர்வாக குழு தலைமையில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களின் முதல் அமைச்சர்களுடன் பிப்ரவரி 8ஆம் தேதி ஒரு முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக தெரிகிறது.

இப்புதிய குழுவின் தலைவர் பிரதமர் நரேந்திர மோடி, துணை தலைவர் அரவிந்த் பானாகாரிய, அதேபோல் இக்குழுவில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதியமைச்சர் அருண் ஜேட்லி, ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு மற்றும் விவசாய துறை அமைச்சர் ராதா மோகன் சிங் ஆகியோர் அடக்கம்.

மேலும் இக்குழுவில் முழுநேர உறுப்பினராக பிபெக் டீப்ராய், மற்றும் வி.கே சரஸ்வதி ஆகியோரும் இணைந்துள்ளனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Modi to hold first meeting of Niti Aayog on Feb 6

Prime Minister Narendra Modi will spell out the functional roadmap of the newly created Niti Aayog at its first meeting being scheduled on February 6.
Story first published: Wednesday, January 28, 2015, 17:43 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X