டெக்சாஸ் மாகாணத்தில் புதிய டெலிவரி சென்டரை திறந்தது ஹெச்.சி.எல்!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்தியாவின் நான்காவது பெரிய மென்பொருள் நிறுவனமான ஹெச்.சி.எல் நிறுவனம் அமெரிக்காவில் புதிதாக ஒரு குளோபல் டெலிவரி சென்டரை துவங்கியுள்ளது. இந்த புதிய விநியோக அலுவலகத்தில், முதல் கட்டமாக 300 பணியிடங்கள் உருவாகும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

ஹெச்.சி.எல் நிறுவனத்தின் இந்த புதிய அலுவலகம் டெக்சாஸ் மாகாணத்தில், பிரிஸ்கோவில் அமைய உள்ளது. இதன் மூலம் அமெரிக்காவின் ஹெச்.சி.எல் நிறுவன கிளைகளில் பணியாளர்கள் எண்ணிக்கை 1,500 ஆக அதிகரிக்க உள்ளது.

ஹெச்.சி.எல்

ஹெச்.சி.எல்

இதுகுறித்து ஹெச்.சி.எல் நிறுவன அதிகாரிகள் கூறுகையில், "நிறுவனத்தின் வர்த்தகத்தை பெருக்க ஹெச்.சி.எல் நிறுவனம் தனது வாடிக்கையாளரகளுடன் இணைந்து செயல்படவும், சிறப்பான சேவை வழங்கவும், ஆன்ஷோர், ஆஃப்ஷோர், நியர்ஷோர் போன்ற திட்ட வடிவங்களை கையாண்டு வருகிறோம்." என இந்நிறுவனம் அதிகாரிகள் தெரிவித்தனர்.

முக்கிய வாடிக்கையாளர்கள்

முக்கிய வாடிக்கையாளர்கள்

இந்த புதிய டெலிவரி சென்டர் மூலம் சவுத் சென்டரல் பகுதிகளில் இருக்கும் இந்நிறுவனத்தின் வாடிக்கையாளர்களான டீன் புட்ஸ், என்டர்ஜி, டாக்டர்.பெப்பர் ஸ்னாப்பில் குரூப், ஈ.எஃப்.ஹெச், ஆன்கார் மற்றும் பல தொலைதொடர்பு துறை சார்ந்த நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட உள்ளது.

பிற கிளைகள்

பிற கிளைகள்

இந்நிறுவனம் அமெரிக்காவில் காலிபோர்னியா,சன்னிவேல் மாகாணத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட உள்ளது. இது தவிர அமெரிக்காவில் கேரி, நார்த் காரோலினா, ரெட்மென்ட், வாஷிங்டன், ஜாக்சன், மிச்சிகன் மற்றும் ராச்செஷ்டர் ஆகிய பகுதிகளில் உள்ளது.

வருவாய்
 

வருவாய்

இந்நிறுவனத்தின் 50 சதவீத வருவாய் அமெரிக்க வர்த்தகத்தில் இருந்து கிடைப்பது குறிப்பிடதக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

HCL sets up delivery centre in Texas; to create up to 500 jobs

Country's fourth largest software services firm HCL Technologies has set up a global delivery centre in the US and will initially create 300 jobs. 
Story first published: Wednesday, February 4, 2015, 14:00 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X