மும்பை: கடந்த சில வருடங்களாக இந்திய நிறுவனங்கள் இரண்டு இலக்க அளவில் ஊதிய உயர்வு அளித்து வருகிறது, அதேபோல் இந்த வருடமும் இந்திய நிறுவனங்கள் திறமையான பணியாளர்களுக்கு 60 சதவீதம் வரை ஊதிய உயர்வு அளிக்க வாய்ப்புள்ளதாக ஆட்சேர்ப்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் ஈகாமர்ஸ் மற்றும் டிஜிட்டல் துறைகளின் ஆதிக்கம் அதிகரித்தால் நிறுவனங்கள் திறமையுள்ள பணியாளர்களை நிறுவனத்தில் இணைத்துக்கொள்ள அதிகளவிலான சம்பளத்தை அளிக்க தயாராகியுள்ளது. இதன் வெளிப்பாடே இந்த 60% ஊதிய உயர்வு.
பொருளாதார நிலை
ஊதிய உயர்விற்கு பஞ்சும் இல்லாத வகையில் நாட்டின் பொருளாதார நிலையும் வளர்ச்சியை நோக்கி செல்கிறது. இதன் மூலம் பணியாளர்களுக்கு வாய்ப்புகளும் கொட்டிக் கிடக்கிறது. எனவே இந்த வருடம் அனைத்து நிலை பணியாளரகளும் ஊதிய உயர்வில் 30 முதல் 50 சதவீதத்திற்கு அதிகமான சம்பள உயர்வை எதிர்பார்கலாம்.
உயர்மட்ட பணியாளர்
சாதராண பணியாளர்களின் ஊதிய உயர்வு பற்றி பார்த்துவிட்டோம். நிறுவனத்தின் உயர் மட்டத்தில் இருக்கும் பணியாளர்களின் நிலை என்ன என்பதை தெரிந்துக்கொள்ள வேண்டாமா??
10 சதவீத உயர்வு
நிறுவனத்தின் சீஇஓ மற்றும் நிர்வாக இயக்குனர்களுக்கு இந்த வருடம் 10.2 சதவீதம் வரை ஊதிய உயர்வு கிடைக்கலாம், அதேபோல் உயர் மட்ட அதிகாரிகளுக்கு 10.5 சதவீதம் வரை உயர்வு எதிர்பார்க்கலாம் என சர்வதேச மேலாண்மை நிறுவனமான Hay குரூப் தெரிவித்துள்ளது.
18 மாதங்கள்
இந்த சிறப்பான பொருளாதார நிலையில் நிறுவனங்கள் வளர்ச்சி இலக்கை எட்ட பிற துறைகள் மற்றும் நிறுவனங்களிடம் இருந்து திறமைசாலிகளை நிறுவனங்கள் கவர்ந்து வருகிறது. இதனால் அடுத்த 18 மாதங்களில் இந்தியா நிறுவனங்கள் திறமைசாலிகளை நிறுவனத்தில் நிலை நிறுத்திக்கொள்ள எந்த வகையான எல்லைக்கும் செல்லும் என தெரிவித்துள்ளது.
பட்ஜெட் டீம்
குட்ரிட்டன்ஸ்
இனி வணிகச் செய்திகளுக்காக தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை பேஸ்புக் மூலம் இணைந்திடுங்கள். இணைந்திட இதை கிளிக் செய்திடவும்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications